கரூர் மாவட்டத்தின் மூன்று தொகுதிகள்,
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் மணப்பாறை, திண்டுக்கல் மாவட்டத்தின் வேடசந்தூர், புதுக்கோட்டை மாவட்டத்தின் விராலிமலை உள்ளிட்ட சட்ட மன்றப்பேரவைத் தொகுதிகளைக் கொண்டுள்ளது கரூர் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியாகும், நான்கு மாவட்டங்களில் மிகப் பெரிய தொகுதியாகும். காவிரியாற்றின் கரையோரப் பகுதிகளைக் கொண்டதால் முதன்மையான தொழில் விவசாயம். அடுத்தது நெசவுத் தொழில்
கரூர் பகுதியில் உள்ள ஜவுளி ஆலைகளும் முக்கிய தொழிலாகும். மக்களவைத் துணைச் சபாநாயகராக இருந்து தம்பிதுரை அதிமுக சார்பில் பலமுறை போட்டியிட்ட தொகுதி. திமுகவிலும், சின்னசாமி, கே.சி பழனிசாமி எனப் பிரபல வேட்பாளர்களே ஒவ்வொரு முறையும் களம் காண்டு வந்தனர். மாநில திராவிடக் கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்களையே இந்த பகுதியில் இதுவரை மக்கள் தேர்வு செய்து வந்துள்ளனர். அதிமுக, திமுக என இருகட்சிகளுக்குமே செல்வாக்கு மிக்க தொகுதியாகப் பார்க்கப் பட்டாலும், இரு கட்சியிலும் ஆளுமை மிக்க தலைவர்கள் காலமானதால் இப்போது பாரதிய ஜனதா கட்சி இப்போது முதல் முறையாக இங்கு களம் காணும் நிலையில் அக்கட்சியின் சார்பில் கரூர் மாவட்டத் தலைவர் செந்தில் நாதன் வேட்பாளராகக் களம் காணும் நிலையில்
இந்தியா கூட்டணிக் கட்சிகள் சார்பில் மீண்டும் ஜோதிமணி காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக களம் காண்கிறார், அதிமுக சார்பில் தங்கவேல் போட்டியில் உள்ளார் இருந்தாலும் பாஜக காங்கிரஸ் இடையில் தான் போட்டி நிலவுகிறது,
கரூர் நாடாளுமன்றத்தில் கிருஷ்ணராயபுரம் (தனி), அரவக்குறிச்சி, வேடசந்தூர், மணப்பாறை, விராலிமலை, ஆகிய தொகுதிகளில் அரசியல் தலைவர்கள் முகாமிட்டு தேர்தல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. ஆனால் வேட்பாளர் சரியில்லை என்பதே பேச்சாகிறது, ஏனெனில் கரூர் மாவட்டம் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் பிறந்த மாவட்டம். அதே போல் சிறையில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியின் தொகுதி .திமுக தான் இந்த முறை போட்டியிடும் எனக்கூறப்பட்ட நிலையில் கரூர் தொகுதி மீண்டும் காங்கிரஸ் சிட்டிங் சீட் எனற அடிப்படையில் அக் கட்சிக்கே வழங்கப்பட்டுள்ளது. அக்காலத்தில் சேரநாட்டுத் தலைநகர் கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் இந்தியா கூட்டணிக் கட்சியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜோதிமணி மறுபடியும் போட்டியிடுகிறார். கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஜோதிமணி வேட்பு மனு தாக்கல் செய்து, தேர்தல் உறுதிமொழி எடுத்துக் கொண்டவருடன் தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, கரூர் நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க தேர்தல் பார்வையாளர் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான எம்.எம்.அப்துல்லா, புதுக்கோட்டை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் செல்லப்பாண்டி உள்ளிட்ட தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர். வேட்பு மனு தாக்கல் செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதிமணி,
''தமிழகம் முழுவதும் அ.தி.மு.க, என்பது பா.ஜ.க-வின் பி டீமாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் கரூர் தொகுதியில் வெற்றி பெற்ற நான், தொகுதி மக்களுக்காக ரூபாய்.500 கோடியில் திட்டப் பணிகளைச் செய்துள்ளேன். மக்களவையில் கடந்த 70 ஆண்டுகளாக ஒலிக்காத குரலாக தமிழக மக்கள் பிரச்னைகள் குறித்து குரல் எழுப்பியுள்ளேன். தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களை மக்களுக்காகச் செய்துள்ளார். குறிப்பாக, கல்விக்கும், மருத்துவத்திற்கும், பெண்கள் முன்னேற்றத்திற்கும் மகத்தான திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளார். இதனால், தேர்தல் பிரசாரத்தின் போது அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல எழுச்சியும் வரவேற்பும் ஏற்பட்டுள்ளது. கரூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட அமைச்சர்களான அமைச்சர்கள் கே.என்.நேரு, சக்கரபாணி, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஐ.பெரியசாமி ஆகியோர் கரூர் மக்களவைத் தொகுதிக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளைச் செய்துள்ளனர். இதை மக்களிடம் எடுத்துச் சொல்லி வாக்கு கேட்போம். ஆனால், 10 ஆண்டுகள் அ.தி.மு.க தம்பிதுரை எம்.பி-யாக இருந்தும் தொகுதி எம்.பி-க்கு ஓர் அலுவலகம் கிடையாது. அவரை நேரில் சந்திக்க முடியாது. இவர்கள் தொகுதி மக்களுக்கு எதுவும் செய்யவும் இல்லை. கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜ.க-வும், அ.தி.மு.க-வும் தமிழக மக்களையும், கரூர் தொகுதி மக்களையும் சீரழிவு பாதைக்குக் கொண்டு சென்று விட்டனர். நடைபெறவிருக்கும் 2024 மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்" என்றார். ஆனால் கரூர் தொகுதி நாடாளுமன்றத் தேர்தல் கரூர் வேட்பாளர்களாக செந்தில்நாதன் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தங்கவேல்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில்
ஜோதிமணி இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில்
கருப்பையா நாம் தமிழர் கட்சி. சார்பில் போட்டியிடும் நிலையில் நாம் கரூரில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை கவணிக்க வேண்டும் 2019 ஆம் ஆண்டு ஜோதிமணி இந்திய தேசிய காங்கிரஸ். 695697 வாக்குகள் வாங்கி 420546 வாக்குகள் வித்தியாசத்தில் 63.சதவீதம் பெற்று வெற்றி தம்பிதுரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 275151 வாக்குகள் பெற்று 25.சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது 2014 ஆம் ஆண்டு தம்பிதுரை, எம்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் 540722 வாக்குகள் பெற்று 195247 வாக்குகள் வித்தியாசத்தில் 52.சதவீதம் வாக்குகளில் வென்றவர் அவரை எதிர்த்துப் போட்டியிட்ட சின்னசாமி, எம். திமுக 345475 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்த நிலையில்
33.சதவீதம் வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது.பொது மக்கள் காலில் விழுந்து வாக்கு சேகரித்த கரூர் நாடாளுமன்றத் தொகுதி பாஜக வேட்பாளர் செந்தில்நாதன்! நாடாளுமன்ற தேர்தலில் வெற்ற பெற தன்னை ஆசிர்வாதம் செய்ய பொதுமக்களின் காலில் விழுந்து பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் வாக்குச் சேகரித்தார். நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் செந்தில்நாதன் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நரிக்கட்டியூர் தொழில்பேட்டை, வெள்ளாளப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது, தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என அனைவரும் தன்னை ஆசீர்வாதம் செய்ய வேண்டும் என்று கூறி வாக்காளர்களின் காலில் விழுந்தார். தொடர்ந்து வாக்கு சேகரித்த வேட்பாளர், "5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெறலாம் மக்களுக்கு எதுவும் செய்ய வேண்டியதில்லை என ஏற்கனவே வெற்றி பெற்றவர்கள் நினைக்கிறார்கள்.தொகுதியில் உள்ள மக்கள் கஷ்டங்களைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அவர்களது குடும்பம் நன்றாக இருந்தால் போதுமென நினைக்கிறார்கள்.
இதற்கெல்லாம் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். கரூர் மாவட்டத்தில், வளர்ச்சிக்காகப் பாடுபடக்கூடிய நாடாளுமன்ற உறுப்பினரை இம்முறை பொதுமக்களாகிய நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். பொதுமக்களின் அடிப்படைப் பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. ஒருமுறை கூட குறைகளைக் கேட்டு அறியாத நாடாளுமன்ற உறுப்பினர் எதற்கென்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதற்காகத்தான் பாஜகவுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்கிறோம். 100 சதவீதம் பாஜக மீது நம்பிக்கை வையுங்கள். மீண்டும் நரேந்திர மோடியைப் பிரதமர் பதவியில் அமர வைப்பதற்குத் தாமரை சின்னத்தில் வாக்களியுங்கள். எந்த நேரத்திலும் என்னைத் தொடர்பு கொள்ள எனது தொலைப்பேசி எண்ணை உங்களுக்குத் தருகிறேன்.
எத்தனை முறை அழைத்தாலும் மக்கள் பிரச்சனைக்காகச் சேவை செய்ய வருவேன்" எனக் கூறி தாமரை சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார், அதேபோல் புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியத்தில் பாஜக வேட்பாளர் வாக்குகள் சேகரித்த போது திரளாகக் கூடி நின்று ஆரத்தி எடுத்து வரவேற்ற நிலையில் பாரதிய ஜனதா கட்சி தேர்தல் பணியில் முழு வீச்சில் உள்ளதை அறியலாம், அன்னவாசல் தெற்கு ஒன்றியத் தலைவர் S.V. ரவிச்சந்திரன் தலைமையில் இலுப்பூர் நகரப் பொறுப்பாளர் கோட்டை, சசிக்குமார், சக்தி கேந்திர பொறுப்பாளர் யுவராஜ், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் சபரிநாதன். மத்திய அரசு நலத்திட்டப் பிரிவு ஒன்றியத் தலைவர் முத்துக்குமார் அன்னவாசல் தெற்கு ஒன்றியச் செயலாளர் மணிகண்டன் ஆகியோர் கலந்து கொண்டனர் இலுப்பூர் சின்னக்கடை வீதியில் 300 கற்கும் மேற்பட்ட நபர்களும் 600 க்கும் மேற்பட்டடோர் மேலப்பட்டியிலும் கலந்து கொண்டனர் அன்னவாசல் தெற்கு ஒன்றியம் பெருமாநாடு பகுதியில் 400 கற்கும் மேற்பட்ட நபர்கள் அன்னவாசல் வடக்கு ஒன்றியத் தலைவர் பொன் முருகையா தலைமையில் விராலிமலை சட்ட மன்றத் தொகுதியின் வேட்பாளராகப் திமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியுற்ற எம்.பழனியப்பனின் சொந்த ஊரான தென்னலூரில் 400 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆரத்தி எடுத்து வேட்பாளர் செந்தில்நாதனை வரவேற்றது குறிப்பிடத்தக்கது.பாஜக பலம் என்பது பிரதமர் வேட்பாளராக நரேந்திர மோடியை முன்நிறுத்தி பிரச்சாரம் நடக்கும் போது எதிர் தரப்பினர் பிரதமர் யார் என்பதே தெரியாமல் பிரச்சாரம் செய்து வரும் நிலையில் இது இந்திய நாடாளுமன்றத்தின் தேர்தல் என்பதை இந்தியா கூட்டணி அமைத்த போதே பிரதமர் வேட்பாளராக ஒரு தலைவரைத் தேர்வு செய்திருக்க வேண்டும் ஆனால் அப்படி நடக்கவில்லை ஆகவே இது பாஜகவின் பலம்,
மேலும் இராகுல்காந்தி பிரியாணி தயார் செய்ய ஜோதிமணி அழைப்பில் வந்து வைரலான செய்திகளைப் பார்க்கும் மக்கள் இவருக்கு நாட்டின் மீதான அக்கறை இல்லை என்பதால் தான் மல்லிகார்ஜுன கார்கே தலைவர் ஆகும் நிலை வந்தது
என காங்கிரஸ் கட்சியில் இருக்கும் சொற்பமான தொண்டர்கள் வருத்தம் பகிரங்கமாகவே பேசப்படுகிறது, தமிழ் நாட்டில், தி.மு.க-வுக்கு எதிரான வாக்குகள் மூன்றாகப் பிரிந்திருப்பது, தி.மு.க கூட்டணிக்கு பலம். தி.மு.க தலைமையிலான கூட்டணி வலுவாகவும் அமைப்பு ரீதியான பலமும் உள்ளது. தி.மு.க-வும் ஜாதி ரீதியாகத்தான் வேட்பாளர்களை நிறுத்தியிருக்கிறது. தி.மு.க-விடம் பண பலமும், அதிகார பலமும் உள்ளன. ஆகவே, தேர்தல் நெருங்கும் நிலையிலும், தி.மு.க-வுக்குச் சாதகமான சூழலில் தான் களம் நகர்ந்து வந்தாலும் போட்டி பா ஜ க வுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில் தான் போட்டி வெற்றி என்பது மதில் மேல் பூனை கதை தான்.
கருத்துகள்