இன்று தங்கப்பல்லக்கில் அழகர் மதுரை புறப்பட்டு ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதியில் வைகை ஆற்றில் இறங்குகிறார்
மதுரை மாவட்டம், அழகர்கோவில் என்ற கள்ளழகர் திருக்கோவில் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி துவங்கியது. அதில் அழகர் ஆற்றிலிறங்கும் வைபவம் ஏப்ரல் மாதம்.23 ஆம் தேதியில் நடக்கிறது.
அதற்காக இன்று மாலை 6.25 மணிக்கு கண்டாங்கி பட்டுடுத்தி, நேர்கம்பேந்தி, சகல பரிவாரங்களுடன் தங்கப் பல்லக்கில் புறப்படும் கள்ளழகர் பதினெட்டாம்படி கருப்பணசுவாமி சன்னதி முன்பாக வையாழி ஆன பின்னர் அதிர்வேட்டுகள் முழங்க மதுரைக்கு புறப்பட்டார்.
புறப்பட்டது முதல் 480 க்கும் மேற்பட்ட மண்டகப்படிகளில் அழகர் எழுந்தருளினார். ஏப்ரல் மாதம் 22 ஆம் தேதி காலை 6 மணிக்கு மூன்று மாவடி பகுதியில், அழகரை மதுரை மக்கள் எதிர்கொண்டு வரவேற்கும் எதிர்சேவை நிகழ்ச்சி மன்னர் திருமலை நாயக்கர் காலம் தொட்டு நடைபெறுகிறது. இரவு 8 மணிக்கு மதுரை தல்லாகுளத்தில் அமைந்துள்ள பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில் திருமஞ்னமாகி, தங்கக்குதிரை வாகனத்தில் திருவில்லிபுத்துார் ஆண்டாள் சூடிக்கொடுத்த மாலையை சாற்றியபடி இரவு 11.30 மணிக்கு மதுரைக்கு அரசி மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் காண வந்த பிறகு வைகை ஆற்றிற்கு புறப்படுகிறார். இறங்கிய பின்னர் திருமணம் முடிந்த தகவல் வரவே திரும்புவதாக 500 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வைணவ விழா
ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி அதிகாலை 3 மணிக்கு தல்லாகுளம் கருப்பணசுவாமி கோவில் அருகில் உள்ள ஆயிரம் பொன் சப்பரத்தில் எழுந்தருளிய பின்னர் அதிகாலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் வைகை ஆற்றில் இறங்குகிறார். தொடர்ந்து ராமராயர் மண்டபத்தில் பக்தர்கள் தண்ணீர் பீய்ச்சும் நிகழ்ச்சிகள் கோடைக்கால நிகழ்வு என்பதால் காலம் தொட்டு நடக்கிறது. ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி காலை 9 மணிக்கு திருமஞ்சனம் முடிந்து காலை 11 மணிக்கு சேஷ வாகனத்தில், தேனுார் மண்டபத்தில் எழுந்தருளி, பிற்பகல் 3 மணிக்கு கருட வாகனத்தில் மண்டூக முனிவருக்கு சாபம் தீர்த்தல் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
தொடர்ந்து இரவு 12 மணி முதல் விடிய விடிய தசாவாதாரம், ஏப்ரல் மாதம்.25 ஆம் தேதி இராமநாதபுரம் மன்னர் சேதுபதி மண்டபத்தில் இரவு 11 மணிக்கு திருமஞ்சனம் முடிந்து ஏப்ரல் மாதம்.26 ஆம் தேதி அதிகாலை 2.30 மணிக்கு பூப்பல்லக்கில் கள்ளழகர் திருக்கோலத்தில் தல்லாகுளம் கருப்பணசாமி கோயில் முன்பு வையாளியாகி அழகர் மலைக்குத் திரும்புகிறார். ஏப்ரல் . மாதம் 27ஆம் தேதி காலை 10.32 மணிக்கு மேல் 11 மணிக்குள் கள்ளழகர் இருப்பிடம் வந்து சேர்கிறார். ஏப்ரல் மாதம்.28 ஆம் தேதி உற்சவ சாந்தியுடன் மதுரை சித்திரைத் திருவிழாவானது நிறைவு பெறுகிறது.
கருத்துகள்