அரசுத் துறைகளில் உள்ள பெயர்களை தனியார் வாகனங்களில் பயன்படுத்துவதை மட்டுமே தடை செய்யலாம் அதுவே உண்மையான மோசடி
அணைத்துத் துறைகளிலும் போலியானவர்களும் மோசடிப் பேர்வழிகளும் உண்டு .
நான் பத்திரிகையாளன். அதனால் என்னை அடையாளப்படுத்திக் கொள்வதில் உள்ள ஜனநாயக உரிமை.
ஒருவர் வழக்கறிஞர் அவர் பயன்படுத்தும் வாகனத்தில் வழக்கறிஞர் என்ற அடையாளத்தை பொறித்துக்கொள்வது அவர் உரிமை.
ஒருவர் மருத்துவர்.என அவரை அடையாளப்படுத்திக் கொள்வது அவரது உரிமையும் கடமையும்.
இதுபோன்று அரசு சாராமல் தனது துறைகளை அடையாளப்படுத்துவதை யாரும் தடுக்க முடியாது அதற்கு உரிமையுமில்லை.
தீவிபத்து நேர்ந்து விட்டது என்பதால் யாரும் வீட்டில் சமையல் செய்யக்கூடாது என்பதைப்போல இருக்கிறது சென்னை காவல்துறையின் இந்த அறிவிப்பு.
PRESS, ADVOCATE, DOCTOR, ENGINEER என்று வாகனத்தில் நம்பர் பிளேட் இல்லாத பகுதியில் எழுதி வைத்துப் போனால் காவல்துறை நடவடிக்கை எடுக்கமாட்டார்கள் என்று நினைப்பதாக யார் சொன்னது?
இதனால் சிறப்பு சலுகை எங்காவது கிடைக்கிறதா. சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதிலையா?
காவலர்கள் எப்போது வேண்டுமானாலும் உண்மைத்தன்மையை சோதனையிடலாம்.
சோதனை செய்யக்கூடாது என்று யார் சொன்னது?
போலியாக இது போன்ற ஸ்டிக்கர்களை ஒட்டிக்கொண்டு சுற்றுபவர்களுக்கு ஜாமீன் இல்லாத பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து தண்டனை என்று கூட அறிவிக்கலாம்.
உண்மையாக தனது தொழிலை அடையாளப்படுத்துவதை தடுப்பது என்பது ஜனநாயக விரோதம்.
வருடத்துக்கு ஒருமுறை வாகனங்களை வைத்து எந்தவிதமான நடவடிக்கை எடுக்கலாம் என்று காவல்துறை திட்டம் வகுப்பதே மக்களாட்சியை மீறி நடத்தும் செயலாகும்.
வழக்குப் பணிக்காக நீதிமன்றத்துக்கு தடங்கல் இல்லாமல் செல்லும் வழக்கறிஞர்களுக்கும்,
விரைவாகச் செய்தி சேகரிக்கச் செல்லும் பத்திரிகையாளர்களுக்கும்,
அவசர சிகிச்சைக்காக செல்லும் மருத்துவர்களுக்கும்
தங்களது துறையின் பெயரை வாகனங்களில் பொறித்துச் செல்வது குற்றம் என்றால்,
அரசுப் பேருந்து முழுக்க விளம்பர ஸ்டிக்கர் ஒட்டி உள்ளதை அப்புறப்படுத்துங்கள். அதில் ஒரு நெய் கடை விளம்பரம் வண்டி முழுவதும் வண்டி அடையாளம் தெரியாத நிலையில்
தனியார் வாகனங்களில் POLICE என்று ஒட்டிக்கொண்டு சிக்னல்களில் நிற்காமலும், ஹெல்மெட் போடாமலும் செல்வோர் மீது நடவடிக்கை எடுங்கள் ஏன் என்றால் அது அரசு பணி அதை தனியார் வாகனங்கள் பயன் படுத்தி நடந்தால் அது மோசடி,
PRESS, அல்லது ADVOCATE என்பது அரசாங்கப் பெயர் இல்லை.
அது தொழிலின் நிமித்தம் உள்ள பெயர்.முறையாக RNI வாங்கி நடத்தும் பத்திரிகை நிறுவனத்திலும் மற்றும் மெடிக்கல் கவுன்சில், பார் கவுன்சில், பதிவு பெற்ற நபர்கள் தங்கள் அடையாளத்தை நீக்குவதற்கும், Police, ஆர்மி, வருவாய் துறை, நீதித்துறை என அரசு பணியில் இருந்து கொண்டு பயன் படுத்தி வருவதற்கும் வித்தியாசம் உண்டு
POLICE என்பதே அரசாங்கத் துறை சார்ந்த பெயர்.
அதுபோன்ற அரசாங்கப் பெயர்களை எழுதக்கூடாது என்பதே விதி.
காவல்துறை அறிவிப்பில் மறு பரிசீலனை தேவை.
அனைத்துத் துறைகளின் பிரதிநிதிகளை அழைத்து விளக்கமளிக்கவோ அல்லது கேட்கவோ வேண்டும் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது.வாகனங்கள் சோதனை செய்து பரிசோதித்து அதில் போலியான நபர்கள் பயன்படுத்தி இருந்து அதற்கு நடவடிக்கைகள் எடுத்தால் பாராட்டலாம் ஆனால் சரியான நபர்கள் சரியான இடத்தில் உள்ள பெயர் அவரது அடையாளம் ... குறிப்பாக இராமசாமி என்பவர் வண்டியில் அவர் பெயர் இருந்தால் எப்படிக் குற்றம் ஆகும், பாத்திரம் பெயர் வெட்டுவது போலவே இதுவும், தற்போது சென்னையில் வாகன பதிவு எண்கள் நம்பர் பிளேட் முறையாக அரசு விதிக்குட்பட்டு இல்லாத வாகனங்களை தடுத்து நிறுத்தி அபராதம் விதித்தனர். அப்போது சட்ட விதிகளுக்கு உட்படாமல் பொருத்தப்பட்டிருந்த நம்பர் பிளேட்டுகளையும், நம்பர் பிளேட்டுகளே இல்லாத வாகனங்களையும் தடுத்து நிறுத்தி முதல் முறையாக 500 ரூபாயும் இரண்டாவது முறை பிடிபடும் வாகனங்களுக்கு 1500 ரூபாய் அபராதம் விதித்தனர். தொடர்ந்து இதுபோல் வாகனங்களை இயக்கினால் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை துணை ஆணையர் ஹர்ஸ் சிங் தெரிவித்தார் இரு சக்கர மற்றும் இலகு ரக நான்கு சக்கர வாகனங்களுக்கு வெள்ளை நிற பலகையில் கருப்பு நிறத்தில் பதிவெண் எழுதி இருக்க வேண்டும்
வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கார்கள் மற்றும் கனரக வாகனங்களில் மஞ்சள் நிற பலகையில் கருப்பு நிறத்தில் பதிவெண் எழுதியிருக்க வேண்டும்
பதிவெண் பலகை வண்டியின் முன்னும் பின்னும் பொருத்தியிருக்க வேண்டும்
புரியும்படி தெளிவான எழுத்துகளில் எழுதியிருக்க வேண்டும். மற்ற படம், பெயர் இடம் பெறக்கூடாது
இருசக்கர, இலகு ரக நான்கு சக்கர வாகனத்தின் முன்பக்கம் ஒரே வரிசையிலும், பின்பக்கம் இரண்டு வரிசையாகவும் பதிவெண் எழுதி இருக்க வேண்டும்.
உதாரணமாக முன்பக்கத்தில் 'TN 01 X 0XX0' எனவும்
பின்பக்கத்தில்
'TN 01
X 0XX0'
எனவும் எழுதி இருக்க வேண்டும்.
இரு சக்கர, மூன்று சக்கர வாகனங்களின் பதிவெண் பலகை 200 x 100 மில்லி மீட்டர் என்ற அளவில் இருக்க வேண்டும்
இதில் பின்பக்க எழுத்தின் உயரம் 35 மில்லி மீட்டராகவும், தடிமன் 7 மில்லி மீட்டராகவும், இரண்டு எழுத்துக்கு இடையே 5 மில்லி மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்.
அதே போல பின்பக்க பலகையில் வரும் எண்களின் உயரம், தடிமன், இடைவெளி முறையே 40 x 7 x 5 என்ற அளவில் இருக்க வேண்டும்
முன்பக்க பலகையில் வரும் எண்களும், எழுத்துக்களும் 30 x 5 x 5 என்ற அளவில் அதன் உயரம், தடிமன், இடைவெளி இருக்க வேண்டும்
இதே போல ஒவ்வொரு வாகனங்களுக்கு அதன் திறனுக்கேற்ப வெவ்வேறு அளவில் பதிவெண் பலகைக்கான அளவுகள் உள்ளன. அதனை பின்பற்றி பலகைகளை பொருத்த வேண்டும் வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையிலிருந்து பத்திரிகையாளர்களுக்கு விலக்கு அளிக்க தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வலியுறுத்துகிறது.
விரைந்து செய்தி சேகரிக்கவும், கேமரா உள்ளிட்ட ஒளிப்பதிவு கருவிகளை பாதுகாப்பாக வாகனத்தில் கொண்டு செல்லவும், தங்களை அடையாளப் படுத்தும் வகையிலும் செய்தியாளர்கள் தங்கள் வாகனங்களில் பிரஸ், மீடியா என ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்வது வழக்கம்.
இந்நிலையில் போலீஸ், பிரஸ், வழக்கறிஞர் மருத்துவர், தலைமை செயலகம் என வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என்று சென்னை போக்குவரத்துக் காவல்துறை சுற்றறிக்கை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் போலீஸ், பிரஸ், வழக்கறிஞர் மருத்துவர், தலைமை செயலகம் என்று வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு சிலர் சமூகவிரோதக் குற்றங்களில் ஈடுபட்டு வருவதாக போக்குவரத்துக் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
காவல்துறை முறையாக வாகனப் பரிசோதனை செய்து இதை தடுக்க முடியும். அதை விடுத்து பத்திரிகைத்துறை சார்ந்தவர்கள் வாகனத்தில் ஸ்டிக்கர் ஓட்டக் கூடாது என்ற அறிவிப்பு பத்திரிகையளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே வாகனங்களில் ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையிலிருந்து பத்திரிகையாளர்களுக்கு விலக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.
ஒரு சிலர் எந்தச் சம்மந்தமும் இல்லாமல் போலீஸ், பிரஸ், தலைமை செயலகம், வழக்கறிஞர் மருத்துவர் என்று ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு சமூகவிரோத குற்றங்களில் ஈடுபட்டு வருபவர்கள் மீது இரும்பு கரம் கொண்டு காவல்துறை தடுக்க வேண்டும். யாரோ சிலர் செய்யும் தவறான செயல்களால் உண்மையானவர்களும் பாதிக்கக் கூடிய இந்த அறிவிப்பை சென்னை போக்குவரத்துக் காவல்துறை திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வலியுறுத்துகிறது.
பத்திரிகைத் துறைக்கு சம்மந்தம் இல்லாத நபர்கள் வாகனத்தில் ஸ்டிக்கர் ஒட்டி முறைக்கேடு செய்தால் அவர்கள் மீது காவல்துறை தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். வாகன பரிசோதனையில் போக்குவரத்துக் காவல்துறைக்கு பத்திரிகையாளர்கள் முழு ஒத்துழைப்பு தருவார்கள். வாகன ஸ்டிக்கர் ஒட்ட விதிக்கப்பட்ட தடையிலிருந்து பத்திரிகையாளர்களுக்கு விலக்களிக்க தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் வலியுறுத்துகிறது.
எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
கருத்துகள்