முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கெஜ்ரிவால் கைதும் பின்னணியும்

 டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கைது சாதாரண விஷயமில்லை. 


டீப்ஸ்டேட்டின் செல்ல பிள்ளை மேல் கை வைத்து, பிரதமர் நரேந்திர மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.  சரி இதனை முன்பே ஏன் செய்யவில்லை எனக் கேட்கலாம்.  அதனை உணர்ந்து கொள்ள சிலவற்றை புரிந்து கொள்ள வேண்டும்.

 1990 ஆம் ஆண்டுக்குப் பின், மைனாரிட்டி மத்திய அரசு அல்லது சிறு கட்சிக் கூட்டணிகளை வைத்து, பரந்த பாரத நாட்டைக் கட்டுபடுத்தத் திட்டமிட்டனர்.  ஆனால் இரண்டு மூன்று மாதத்திற்கு ஒரு முறை பிரதமர் மாறுவது போன்ற பிரச்சைனைகளால், தவித்தனர்.  ஒருவர் காலை இன்னொருவர் வாரி விட்டு அவர்களால் கட்டுபடுத்த இயலவில்லை.


இராகுல்காந்தியை நமக்கு முன்னரே அவர்கள் புரிந்து கொண்டனர், இந்த ஸ்டார்ட் அப் எப்போதும் ஸ்டார்ட் ஆகாது என்று.  டாக்டர் மன்மோகன் சிங்கை வைத்து இரண்டு டெர்ம் ஆனால் அதுவும் இவர்கள் எதிர்பாத்தது போல அமையவில்லை.

இதனை அடுத்து அண்ணா ஹசாரேவை வைத்து, கேஜரிவாலை உள்ளே நுழைத்து, டில்லியைக் கைப்பற்ற வைத்தனர்.  டில்லியின் கான் மார்க்கெட் கேங், லுடியன்ஸ் இதனை முழுமையாக செய்து முடித்தனர்.  இதன் மூலம் டில்லியை எப்போது வேண்டுமானாலும் சுற்றி வளைத்து, CAA, விவசாயிகள் போராட்டம், மல்யுத்த வீரர்கள் என தொடர்ந்து ஆடினர். தொடர்ந்து 3 முறை வெற்றி பெற வைத்தது மக்கள் என்று சொன்னால், சத்தமில்லாமல் சிரிக்கலாம்.  அதுவும் எப்படி 99 சதவீதம் வெற்றி.


இன்னொரு பக்கம் இப்பவும் நீதிமன்றத் தலைகள் சில அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ளன.  பல வழக்குகளில் அரசின் பணிகளில் மூக்கை நுழைத்துப் பார்த்தனர். 

அடுத்து பஞ்சாபிலும் விளையாடி ஆம் ஆத்மி கட்சியை கொண்டு வந்தனர்.  இதன் மூலம் காலிஸ்தான் தீவிரவாதிகளை வளர்க்க ஏதுவானது.  அவர்கள் பேசும் பேச்சை பார்த்தீர்களானால் புரியும்.  இந்தியாவிலேயே பிரதமர் நரேந்திர மோடிக்கு மாற்று என்றால் அது கேஜரிவால் என அவர்களே சொல்லிக் கொள்கிறார்கள்.



மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், சந்திரசேகர் ராவ் உட்பட பலர் பட்டியலில் இருந்தாலும் கேஜரிவால் போல அவர்கள் ஸ்மார்ட்டும் இல்லை, கட்டுப்பாடாக டீப்ஸ்டேட் சொல்வதை செயல்படுத்தவும் இல்லை.  எனவே கேஜரிவாலே டீப்ஸ்டேட்டின் செல்லப் பிள்ளை ஆனார்.               


பிரதமர் நரேந்திர மோடி அரசோ பொறுமையாக வலை விரித்துத் தான் காத்திருந்தது.  எல்லா பக்கமும் பக்காவான ஆதாரங்களைச் சேகரித்துக் கொண்டிருந்தது.  

ஒவ்வொரு மீனாக சிக்க ஆரம்பித்தன.  சத்யேந்திர ஜெயின், மணீஷ் சிசோடியா, சில எக்ஸ்ட்ராக்கள்.  இடையே நீதிமன்ற வழக்குகளில், எந்த எந்த லூப் ஹோல்களை உபயோகப் படுத்துகின்றனர் என்பது கண்டறிந்து அவை அடைக்கப்பட்டன. 

இன்னொரு புறம், கேஜரிவால் வம்படியாக பிரதமர் நரேந்திர மோடியை தூற்றுவதை நிறுத்தி, குழம்ப ஆரம்பித்தார்.  அவருடைய ஐஐடி மூளைக்கு என்ன நடக்கிறது என்பது புரியவில்லை.  இருந்தாலும் ஒரு குருட்டு தைரியம், தான் எதிலும் கையெழுத்திடுவதில்லை, நேரடியாக குற்றம் சாட்ட முடியாது என் இறுமாப்புடன் இருந்தார்.


ஒரு கேபினட் மீட்டிங் நடந்தால், அதில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் கையெழுத்திட்டாக வேண்டும்.  ஃபைலில் கையெழுத்துப் போடாமல் தப்பித்தது போல இதில் செய்ய முடியாது.  திகார் உள்ளே இருந்த ஆம் ஆத்மிக்கள் கொஞ்சம் கொஞ்சமாக உளற, ஒரு மாநில முதல்வர் மகள் கவிதா சிக்கினார்.

கவிதா சிக்கியதும், எல்லாக் கேள்விகளுக்கும் பதில் தெளிவானது.  இனி எத்தனை முறை நீதிமன்றம் போனாலும் பெயில் கிடைக்காது என நினைக்கிறேன்.  132 ஆம் நம்பர் அறை நிரந்தரமாகக் கூடும்.

இனி டீப்ஸ்டேட் இந்த மூன்று மாதத்தில் ராகுல்காந்தி, மம்தா பானர்ஜி போன்றவர்களையே நம்பி ஆக வேண்டும்.  அவர்களோ ஜோக்கராக திரிந்து கொண்டு உள்ளனர்.  அடுத்த வருடம் FTAக்கள் இந்தியாவுடன் நடைபெறவில்லை எனில், சில ஐரோப்பிய நாடுகள் படுத்து விடும்.   சீனாவில் இனி முதலீடு செய்ய இயலாது. 

இப்போதைக்கு ஒரே டார்கெட், முடிந்தால் நரேந்திர மோடி பெரிய அளவில் மெஜாரிட்டி பெறக்கூடாது.  அது சாத்தியமாகத் தோன்றவில்லை.  தனியாகவே 350 ஐ எளிதாகக் கடப்பார்கள். 

நரேந்திர மோடி 3.0வில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்க, NDAவுக்கு  421 சீட் தேவை.  தமிழகம், தெலுங்கானா, சீமாந்திரா, கேரளம் மற்றும் ஜம்மு காஷ்மீர் கைகொடுக்கும்.  

இனி அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரு புதிய அரசியல் கட்சித் தலைவரை வளர்த்தெடுப்பது என்பது, அமெரிக்க டீப்ஸ்டெட்டுக்கு சாத்தியமில்லை.. 

ஆட்சிக்கு வந்த பின்னர் NDA பார்ட்னர்களை கொஞ்சம் தட்டி தூக்கப் பார்க்கலாம்.  ஆனால் பயனில்லை.  

ஆட்டம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது._இனி எல்லாமே அப்படித்தான்__இது பழைய இந்தியா இல்லை எழுச்சி காணும் புதிய பாரதம் கெஜ்ரிவால் கைதில் தமிழ்நாட்டின் ஊடகங்களில் வெளி வராத அரசியல் உண்மைகள்.

கெஜ்ரிவால் டெல்லி மதுக் கொள்கை பணமோசடி வழக்கில் ED கைது செய்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெற்றார்.

ஏனெனில் இவர் பல தேசத் துரோகச் செயல்கள் புரிந்ததற்கான ஆதாரம் மத்திய அரசின் வசமுள்ளது எனும் தகவல் இவருக்கு கிடக்கப் பெற்றதே வாபஸுக்கு காரணம்.

மதுபான ஊழல் என்பது பொதுவான ஊழல் விஷயம் என்பது நன்கு தெரியும், அதை விட உண்மையான காரணம் தேசிய பாதுகாப்பு சம்பந்தப்பட்டது என்பதே இவரது மிக அவசரமான கைதுக்கு காரணமாயிற்று.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் கெஜ்ரிவாலை இப்போது கைது செய்தால் டெல்லி மற்றும் பஞ்சாப்பில் பாஜக சில நாடாளுமன்ற உறுப்பினர்களின்‌ வெற்றிகளை இழக்க நேரிடும் என உளவுத்துறை கூறிய பிறகும் இவரைக் கைது செய்வது தான் தேசியப் பாதுகாப்புக்கு நல்லது என இந்த முடிவு எடுக்கப்பட்டது .

கெஜ்ரிவாலைச் சுற்றிப் பரவும் கைது வலையின் கதையை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்

CBI, ED, இப்போது NIA இந்த வழக்கில் நுழைகிறது. மத்திய அரசு மற்றும் பல அதிகாரிகளை அந்நிய நாட்டுடன் சேர்ந்து உளவு பார்த்து அவர்களுக்கு பல இரகசியத் தகவல்களை இவர் அளித்து  தேசத் துரோகம் செய்ததாக கெஜ்ரிவால் மீது ஆதாரத்துடன் மத்திய அரசு குற்றம் சுமத்துகிறது.

கெஜ்ரிவால் செய்த தேச துரோகங்கள் பின்வருமாறு சொல்லப்படுகின்றன:

1. கெஜ்ரிவால் "நாட்டிற்கு எதிரான போர்" என்ற இரகசிய முறையில் ஒரு பயங்கரமான சதித் திட்டம் திட்டியது அம்பலகியுள்ளது..

இந்த சீன உளவு அமைப்பு, இஸ்ரேல் மொசாட் மற்றும் ரஷ்ய கேஜிபியின் வரிசையில் கெஜ்ரிவால் ஒரு இரகசிய உளவு ஸ்தாபனத்தை உளவாளி மற்றும் இராணுவ அமைப்புடன் அமைக்கதா திட்டமிட்டு அதற்கு "ஃபீட் பேக் யூனிட்" (FBU) என பெயரிட்டு ஒரு உளவுப் பிரிவை உருவாக்க முழு தயாரிப்புகளை செய்துள்ளதற்கான ஆதாரம் உள்ளது.

2. இதைப் போன்ற அமைப்புகளை அமைக்க ஒரு மாநில அரசுக்கு எந்த விதமான உரிமையும் இல்லை. 

இது தேசிய பாதுகாப்புக்கு மிக எதிரான செயல் மற்றும் இது தேச துரோக செயலில் வரும் குற்றம்.

3. மத்திய அரசுக்குத் தெரியாமல் இந்த சதிச் செயலை இவர் அரங்கேற்றியுள்ளார் 

இதற்காக 17-18 ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகளை நியமித்து, அவர்கள் மூலம் நாட்டின் அனைத்து உயர் பதவியில் இருப்பவர்களையும் உளவு பார்த்ததோடு, அவர்களின் தொலைபேசிகளையும் ஒட்டுக்கேட்டு அந்நிய நாடுகளுடன் இதை பகிர்ந்துள்ளார்.

3. கெஜிரிவாலால் உளவு பார்த்தவர்கள் நாட்டின் பிரதமர், பல மாநில முதலமைச்சர்கள், பிரபல உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், பிரபலமான வழக்கறிஞர்கள்,  மத்திய மாநில அரசு அதிகாரிகள், கடற்படை, ராணுவம் மற்றும் விமானப்படை அதிகாரிகள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் மற்றும் அதுமட்டுமின்றி, தனது சொந்தக் கட்சித் தலைவர்கள், அவர்களது மனைவிகள் மற்றும் மகள்களின் தொலைபேசிகளை ஒட்டுக்கேட்பதன் மூலம் உளவு பார்த்ததற்கான ஆதாரம் உள்ளது..

4. இதைவிட பயங்கரமான உளவு சதியை நிறைவேற்ற, இஸ்ரேலிடம் இருந்து "மிலிட்டரி கிரேடு ஸ்னூப்பிங் டிவைஸ்" ஒன்றை ஆர்டர் செய்திருக்கிறார் கெஜ்ரிவால். 

இது பல நாட்டு உளவு நிறுவனங்கள் பயன்படுத்தும் மிக உயர்ந்த தொழில் நுட்பம் மிக்க உளவு கருவி மற்றும் உளவு மென்பொருள் கருவி.

5. அந்த இஸ்ரேலிய உளவு நிறுவனம் இந்த சாதனத்தை எந்த மாநில அரசிடமும் கொடுக்க முடியாது. 

அதற்கு அவர்கள் மத்திய அரசாங்கத்தின் அனுமதியைக் காட்ட வேண்டும் என்று கூறி அந்த சாதனத்தை தர மறுத்து விட்டது.

6. இதனால் கெஜ்ரிவால், இது போன்ற பின்னூட்டப் பிரிவுக்கு (FBU) இந்த கருவி தேவை என்று இந்த கருவியின் பெயரை மாற்றி ஒரு சாதாரண சாதனம் என கூறி உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி கேட்டுள்ளார்..

7. இந்த விண்ணப்பம் அமித்ஷா பார்வைக்கு வந்தத போது, அந்த இஸ்ரேல் நிறுவனமும் கெஜ்ரிவால் ஆர்டர் செய்த விவரத்தை மத்திய அரசிடம் பகிர்ந்துள்ளது.

8. நாட்டிற்கு எதிராக உளவு பார்க்க, சதி செய்ய, ஒரு மாநில முதலமைச்சர் தன்னிடம் அனுமதி கேட்பதை புரிந்து கொண்டார் உள்துறை அமைச்சர் அமித்ஷா. 

இதற்கிடையே இஸ்ரேலிய உளவு நிறுவனமான மொசாட் இவன் ஆர்டர் செய்த விஷயத்தை இந்திய உள்துறை அமைச்சருக்கு தெரிவித்தது. 

மேலும் இரண்டு வருடம் முன்பு டில்லியில் ஒரு வருடத்துக்கும் மேலாக பஞ்சாப் விவசாயிகள் பெயரில் நடந்த போராட்டத்துக்கு full finance கெஜ்ரிவால் தான் என்பதையும் கூடுதல் தகவலாகவும் தந்து விட்டது. 

அந்தப் பணம் முழுவதும் liquorgate ஊழல் மற்றும் போதை மருந்து கடத்தல் மன்னர்களின் அன்பளிப்பு என்பதையும் ஆதாரத்துடன் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது... 

(அதற்கும் முன்பே டில்லியில் அய்யாகண்ணுவின் விவசாய போராட்டம் நடந்தது 

திமுக கட்சியின் முழு நிதி உதவியுடன் தான் நடந்தது என்பது வெட்ட வெளிச்சம்...)

இதற்குப் பிறகு, கெஜ்ரிவாலின் முழுத் திட்டத்தையும் முறியடிக்க, உள்துறை அமைச்சகம் உடனடியாக விசாரணைக்கு உத்தரவிட்டது...

இப்போது இந்த கெஜ்ரிவால் தப்பிக்க முடியாது என தெரிந்து போய்விட்டது... 

Drug மாஃபியாவாலும் தப்பிக்க முடியாது என்பது போன்ற உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது... 

இந்த liquorgate மற்றும் drug mafia விவகாரத்தில் ஒரு முக்கிய தமிழகத்துக்  குடும்பமும் சம்மந்தப்பட்டு இருக்கிறது என்பது தான் ஹை லைட் 

கெஜ்ரிவால் ஆட்சி பொறுப்பேற்று 7 வருடங்களாக வராத திமுகவுன் நட்பு, 

நெருக்கம் எல்லாம் கடந்த ஒன்னரை வருடத்தில் கெஜ்ரிவாலுக்கும், விடியலாருக்கும் ஆழமான நட்பு எப்படி வந்தது என்று இப்போது புரிகிறது 

அதனால் தான் பிரதமர் 2024-க்கு பிறகு திமுக என்ற கட்சியே இருக்காது. எங்கே இருக்கிறது என்று தேட வேண்டிய நிலை ஏற்படும் என்று திருநெல்வேலி பொதுக்கூட்டத்தில் பேசினார். 

இதை மிகச் சாதாரணமாக கடந்து போக முடியாது. 

ஒரு பிரதமரே இப்படி பேசுவது இந்திய அரசியல் வரலாற்றில் முதல் முறை...

8. கெஜிரிவால் சுமார் 700 பேரை உளவு பார்த்துள்ளார். நாட்டின் முக்கிய ஊடக நிறுவனங்கள் இதில் மிகப்பெரிய பங்கு வகித்தன...

கெஜ்ரிவால் தொடர்பான குறை, சதி, தோல்வி மற்றும் மோசடி பற்றிய செய்திகள் எதுவும் தங்கள் சேனல்களில் வராமல் பார்த்துக் கொண்டனர் இந்த ஊடகத் தரகர்கள்...

கெஜ்ரிவால் அவர்களது சேனல்களில் தொடர்ந்து முன்னிலைப் படுத்தப்பட்டுள்ளார்.

அதற்காக அவர்கள் பெரும் தொகையைப் பெற்றார்கள்...இனிப்  பாருங்கள். மிக விரைவில் வெடிப்புகள் ஒன்றன் பின் ஒன்றாக இருக்கும்...

பஞ்சாபில் அம்ரித்பால் சிங் கைது செய்யப்பட்டதன் மூலம் நடவடிக்கை தொடங்கியுள்ளது...

கெஜ்ரிவால் கைது விஷயத்தில் ஜெர்மனி மற்றும் அமெரிக்க தலையிட்டு கருத்து சொன்னதற்கு இது எங்கள் உள்நாட்டு பிரச்சனை இதில் தலையிட என்ன உரிமை உள்ளது என இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.. 

இந்தியாவிற்கான ஜெர்மன் தூதுவரை உள்துறை அமைச்சகத்துக்கு அழைத்து அமித்ஷா கடும் கண்டனம் தெரிவித்துள்ள நிகழ்வு பார்க்க ஆச்சரியமாக இருந்தது. இந்த நிலையில் கெஜ்ரிவால் கைது குறித்து நேற்று முன்தினம் புதுக்கோட்டை வந்திருந்த ஆம் ஆத்மி மாநிலத் தலைவர் வசீகரனிடம் கேட்டோம் ஆனால் சரியான பதில் தரத் தயங்கினார். இது தான் அந்தக் கட்சியின் முன்னணித் தலைவர்கள் நிலை அமலாக்கத்துறை கைது மற்றும் காவலுக்கெதிராக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனுவை, நீதிபதிகள் தள்ளுபடி செய்ததையடுத்து டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவுக்கெதிராக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுவை கெஜ்ரிவால் தாக்கல் செய்துள்ளார். மனு தொடர்பான விசாரணை ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி நடைபெறும் என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.  விசாரணையில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக முடிவிருக்குமா? என ஆம் ஆத்மி கட்சியினர் உள்ளிட்ட பலரும் எதிர்பார்க்கின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான விழாவாக தமிழ் சம