தெலுங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவை சி.பி.ஐ. கைது செய்தது.
திகார் சிறையிலிருக்கும் கவிதாவை கைது செய்தது சி.பி.ஐ.
தெலுங்கானா மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் மகள் கவிதாவை கைது செய்த சி.பி.ஐ..
மதுபான உரிமம் பெறுவதற்கு 100 கோடி ரூபாயளவில் ஆம் ஆத்மி கட்சிக்கு இலஞ்சம் கொடுத்ததாக சவுத் குரூப்பின் முக்கிய குற்றவாளியாக சந்திரசேகர ராவின் மகள் கே.கவிதா மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியது. இந்த வழக்கில் மார்ச் மாதம் 15- ஆம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் அவரிடம் விசாரணை நடத்த நீதிமன்றத்தில் சி.பி.ஐ .அனுமதி கேட்டு மனுத்தாக்கல் செய்து நீதிமன்றமும் அனுமதியளித்ததன் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை சி.பி.ஐ. அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர். கே.கவிதாவுடன் குற்றம் சாட்டப்பட்ட புச்சி பாபுவின் செல்லுலார் தொலைபேசியிலிருந்து நிலம் தொடர்பாகக் கைப்பற்றப்பட்ட வாட்ஸ் அப் உரையாடல்கள் மற்றும் ஆவணங்கள் அடிப்படையில் 100 கோடி ரூபாய் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்திய நிலையில் திகார் சிறையிலிருக்கும் கே.கவிதாவை சி.பி.ஐ. அலுவலர்கள் கைது செய்ததாகத் தெரிவித்துள்ளனர். சி.பி.ஐ. விசாரணை நடத்தியது தொடர்பாக கே.கவிதா நீதிமன்றத்திற்கு கடிதம் எழுதியுள்ளதில் சி.பி.ஐ.,-யின் விசாரணை ஊடக விசாரணை. அது என்னுடைய நற்பெயரை பாதிப்பதாகவும், தனியுரிமையை மீறுவதாகவும் தெரிவித்திருந்தார்.மேலும், நான் பாதிக்கப்பட்டவர். என்னுடைய தனிப்பட்ட மற்றும் அரசியல் நற்பெயர் குறி வைக்கப்படுகிறது. அது டெலிபோன் அனைத்து டி.வி. சேனல்களிலும் காண்பிக்கப்பட்டுள்ளது. இது தன்னுடைய தனியுரிமையை நேரடியாக மீறுவதாகும். நான் ஏஜென்சியின் விசாரணைக்கு ஒத்துழைப்பு கொடுத்துள்ளேன். வங்கிக் கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் கொடுத்துள்ளேன். நான் அழித்து விட்டதாக அமலாக்கத்துறை கூறும் அனைத்து போன்களையும் ஒப்படைப்பேன். எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்
கருத்துகள்