வழக்கறிஞர்கள், வழக்குரைஞர்கள் ஆகியோர் அறிவதற்கு மூத்த வழக்கறிஞர் விடுத்த வேண்டுகோள்.
உங்களுக்கு நேரடியாக அறிமுகம் இல்லாத எந்த கட்சிக்காரராக இருந்தாலும் , தொலைபேசியில் ஆலோசனை சொல்லாதீர்கள்..
எவனோ செலவு செய்கிறான் என்றோ உங்கள் அந்தஸ்தை அடுத்தவனுக்குக் காட்ட நட்சத்திர ஹோட்டல் சந்திப்புகளைத் தவிருங்கள்.. பின்னால் நீங்கள் அவனோடு சாப்பிட்டதும் , குடித்ததும் என்று ஒரு மூத்த வழக்கறிஞருக்கு நேர்ந்தது போல CCTV பதிவுகள் வரலாம்
அவன் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் அவனது இடத்துக்கு ஆலோசனை செய்யப் போகாதீர்கள்.. அங்கேயும் CCTV உண்டு.
அப்புறம் முக்கியமாக பந்தா காட்டுவதாக நினைத்து, எனது கணக்கில் பணம் போடு என்ற முட்டாள்தனத்தை செய்ய வேண்டாம், உங்கள் கட்டணத்தையே, நீதிபதிக்கு லஞ்சமாகக் கேட்டார் என்று client சொல்ல அதிகம் வாய்ப்பு உண்டு.. முடிந்தவரை உங்கள் அலுவலகம், அல்லது chamber போன்ற இடங்களையே தேர்ந்தெடுக்கவும்..தொலைபேசி வழி ஆலோசனை என்பதை அறவே தவிர்க்கவும்.. இதையெல்லாம் செய்யாத B. குமார் போன்ற மூத்த வழக்கறிஞருக்கே இந்தக் கதி என்றால், சாமானிய சராசரி வழக்கறிஞனுக்கு ஒரு புண்ணாக்குப் பாதுகாப்பும் கிடையாது.
தீதும் நன்றும் பிறர் தர வாரா.. ஐயோ என்று எவனுக்கும் பாவம் பார்க்காமல், தொழிலை தொழில் ரீதியாக அணுகவும்.
எவன் எப்போ, எங்கே, எப்படி கழுத்தறுப்பான் என அறியாமல் வம்பை விலை கொடுத்து வாங்கவேண்டாம்..என் வழக்கறிஞர் கே.எம்.முருகப்பன் கருத்தில் உண்மை உண்டு அதாவது டிடிவி தினகரன் கைதான டெல்லி வழக்கில் மூத்த வழக்கறிஞர் பி.குமாருக்கு ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. டிடிவி தினகரனும் நீதிமன்றத்தில் ஆஜரானார்.
டிடிவி தினகரன், இரட்டை இலை சின்னத்தை அதிமுக அம்மா அணிக்கு பெறுவதற்காக இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி கைதானார். அவரிடமிருந்து பெரும் தொகை பணமும் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் இன்னும் டெல்லி திகார் சிறையில் தான் இருக்கிறார்.
டிடிவி தினகரன் வேறு சில நபர்கள் மூலமாக சுகேஷ் சந்திரசேகருக்கு லஞ்சப் பணத்தை பரிமாறியதாக குற்றம் சாட்டப்பட்டது. டிடிவி தினகரன் இதே வழக்கில் 2017 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 25-ஆம் தேதி கைது செய்யப்பட்டு, ஜூன் 1-ஆம் தேதி ஜாமீனில் விடுதலையானார். 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 14-ஆம் தேதி 701 பக்கங்கள் அடங்கிய குற்றப் பத்திரிகையை டெல்லி காவல்துறையினர் தாக்கல் செய்தனர்.
டிடிவி தினகரன் பெயர் அதிலில்லை. ஆனால் 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட துணை குற்றப்பத்திரிகையில் டிடிவி தினகரன், அவரது நெடுநாள் நண்பர் மல்லிகார்ஜுனா, சுகேஷ் சந்திரசேகர் மற்றும் 6 நபர்களின் பெயர்கள் இடம் பெற்றன.டிடிவி தினகரன் மீது குற்றச் சதி 120பி, 201 ஆதாரங்களை அழித்தல் மற்றும் ஊழல் ஒழிப்புச் சட்டத்தின் கீழ் பொது ஊழியரை ஊழலுக்கு பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் குற்றம் சுமத்தப்பட்டிருக்கிற வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராக அப்போது டிடிவி தினகரனுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி அவர் மார்ச் 13 ஆம் தேதி ஆஜரானார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் செல்வி ஜெ.ஜெயலலிதாவுக்கு ஆஜரானவரான சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பி.குமார் மீதும் இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது. அவர் தனக்கு முன் ஜாமீன் கோரி டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவருக்கு 50,000 ரூபாய் தனி நபர் ஜாமீன் மற்றும் அதே தொகைக்கு இரு நபர்களின் ஜாமீன் உத்தரவாதம் பெற்றுக்கொண்டு முன் ஜாமீனில் விடுவித்து தனி நீதிபதி அரவிந்த் குமார் உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரிடம் விசாரிக்க அனுமதி கோரி வருமான வரித் துறை சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த விசாரணையில் சுகேஷ் சந்திரசேகர் கூறவிருக்கும் தகவலைப் பொறுத்து டிடிவி தினகரனுக்கும் சிக்கல் உருவாகும் என்கிறார்கள்.
கருத்துகள்