இந்திய விமானப்படையின் மூலம் நாடு முழுவதும் போர் விமானங்களுக்கு அவசரகால தரையிறங்குதல் வசதி செயல்படுத்தப்படுகிறது
தற்போது நடைபெற்று வரும் ககன் சக்தி -24 பயிற்சியின் ஒரு பகுதியாக, இந்திய விமானப்படையின் விமானம் சமீபத்தில் காஷ்மீர் பள்ளத்தாக்கின் வடக்குப்பகுதியில் அவசரகால தரையிறங்கும் வசதி அமைப்பில் இருந்து இயக்கப்பட்டது. ஏராளமான வீரர்களுடன் சினூக், எம்ஐ -17 வி 5 மற்றும் ஏஎல்எச் எம்கே -3 ஹெலிகாப்டர்கள் இரவில் அங்கு தரையிறக்கப்பட்டன.
மற்ற துறைகளில் அவசரகால தரையிறங்குதல் வசதியை செயல்படுத்துவதற்காக மாநில அரசுகளின் நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து இதேபோன்ற பயிற்சிகளை மேற்கொள்ள இந்திய விமானப்படை திட்டமிட்டுள்ளது. இந்த அவசரகால தரையிறங்குதல் வசதி மூலம் இயற்கை பேரிடரின் போது நிவாரண நடவடிக்கைகளில் மனிதாபிமான உதவியை மேற்கொள்ளவும், விமானங்கள் தரையிறங்க முடியும்.
கருத்துகள்