கார்வார் கடற்படைத் தளத்தில், கப்பல் துறை மற்றும் குடியிருப்புகளை அட்மிரல் ஆர் ஹரி குமார் திறந்து வைத்தார்
பாதுகாப்பு அமைச்சகம் கடற்பறவைத் திட்டத்தின் 2-ம் கட்டத்தின் ஒரு பகுதியாக கார்வார் கடற்படைத் தளத்தில், கப்பல் துறை மற்றும் குடியிருப்புகளை அட்மிரல் ஆர் ஹரி குமார் திறந்து வைத்தார்
கடற்பறவைத் திட்டத்தின் 2-ம் கட்டத்தின் ஒரு பகுதியாக கார்வார் கடற்படைத் தளத்தில், கப்பல் துறை மற்றும் குடியிருப்புகளை அட்மிரல் ஆர் ஹரி குமார் திறந்து வைத்தார். 2024, ஏப்ரல் 09 அன்று வைஸ் அட்மிரல் எஸ்.ஜே.சிங் மற்றும் பிற மூத்த அதிகாரிகள் முன்னிலையில் திறந்து வைத்தார்.
இந்தக் குடியிருப்புகள், திருமணமான 80 அதிகாரிகளுக்கான (லெப்டினன்ட் கமாண்டர் முதல் கேப்டன் வரை) வீடுகளைக் கொண்ட 2 கோபுரங்கள் மற்றும் திருமணமாகாத அதிகாரிகளுக்கான 149 வீடுகள் மற்றும் இவற்றடன் தொடர்புடைய வசதிகள், வெளிப்புற சேவைகளைக் கொண்டுள்ளன. மேலும், ராணுவ வீரர்களுக்கான 360 அடுக்குமாடி குடியிருப்புகளை உள்ளடக்கிய இரண்டாம் வகை தங்குமிடத்தின் 6 கோபுரங்களும் திறந்து வைக்கப்பட்டன.
32 கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்கள், 23 பயிற்சிக் கப்பல்கள், இரட்டை பயன்பாட்டு கடற்படை விமான தளம், ஒரு முழுமையான கடற்படை கப்பல்கட்டுமிடம் மற்றும் விமானங்கள், கப்பல்களுக்கான தளவாடங்கள் ஆகியவற்றுக்கு இடமளிப்பதாக கடற்பறவைத் திட்டம் இருக்கும். இது சுமார் 10,000 சீருடை அணிந்த மற்றும் சிவில் பணியாளர்களை குடும்பங்களுடன் தங்க வைக்கும். இது உள்ளூர் பொருளாதாரம் மற்றும் தொழில்துறை வளர்ச்சியை கணிசமாக உயர்த்தும். இந்தக் கட்டுமானம் 7,000 நேரடி மற்றும் 20,000 மறைமுக வேலைகளை உருவாக்கியுள்ளது. 90%க்கும் அதிகமான கட்டுமானப் பொருட்கள் உள்நாட்டில் கொள்முதல் செய்யப்பட்டதால் இந்தத் திட்டம் 'தற்சார்பு இந்தியா' கோட்பாட்டுக்கு இசைந்ததாக உள்ளது.
கருத்துகள்