நிா்மலாதேவி வழக்கில் தீர்ப்பு குற்றவாளி என அறிவித்தது நீதிமன்றம்.
மதுரை காமராஜா் பல்கலைக்கழகப் பேராசிரியா் முருகன், ஆய்வு மாணவா் கருப்பசாமி ஆகியோா் நிர்மலா தேவி வழக்கில் கைது செய்யப்பட்டனா்.
பின்னா், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கு விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூா் மாவட்ட விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
வழக்கு தொடா்பாக அனைத்து சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில், நீதிமன்றத்தில் இன்று தீர்ப்பளிக்கப்பட்டது.
குற்றம்சாட்டப்பட்ட 2 வது மற்றும் 3 வது நபர்களான பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி மீதான குற்றச்சாட்டுகளில் போதிய ஆதாரமில்லாததால் வழக்கில் இருந்து இருவரும் விடுவிப்பு . தீர்ப்பு நாளான ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதி பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். அதே சமயம் நிர்மலா தேவி ஆஜராகவில்லை. உடல்நலக்குறைவால் நிர்மலா தேவி ஆஜராக முடியவில்லை என்று அவரது வழக்கறிஞர் தெரிவித்தார். அதைப் பதிவு செய்துகொண்ட நீதிபதி பகவதி அம்மாள், “நிர்மலா தேவி ஏப்ரல் 29 ஆம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்த வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றம் ஏப்ரல் 26 ஆம் தேதி ஒத்திவைத்த தீர்ப்பினை இன்று ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி வழங்கியது. முன்னதாக நிர்மலா தேவி, கருப்பசாமி, முருகன் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் அஜரானார்கள். அதனையடுத்து இந்த வழக்கில் குற்றச் சாட்டபட்டிருந்த கருப்பசாமி, முருகன் ஆகிய இருவரையும் விடுதலை செய்தும், இந்த வழக்கில் நிர்மலா தேவி குற்றவாளி எனவும் அறிவித்து நீதிபதி பகவதி அம்மாள் தீர்ப்பை வழங்கியுள்ளார் தீர்ப்பு விவரம் விரைவில் தெரியும்
கருத்துகள்