பாரதிய ஜனதா கட்சியின் தேசியத் தலைவர் ஜே பி நட்டாவுக்கு குஷ்பு எழுதிய கடிதத்தில்,
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அதாவது 2019 ஆம் ஆண்டு தனக்கு ஏற்பட்ட காயம் தான் இந்த முடிவுக்கு காரணம் என்றும், நேற்றுத் தான் இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்வேன் என குஷ்பு சொன்ன நிலையில் இன்று திடீரென ஓய்வு பெறுவதாக அறிவித்த குஷ்பு என்ன காரணம் என்று பார்த்தால்?
நான் ஒரே இடத்தில் இருந்தால் வேலைக்கு ஆகாது.. அதனால் தேர்தலில் போட்டியிடவில்லை. என்று வெளியே பேசினாலும் உள்ளே ஒரு தீர்வு ஆகாத பகை நடிகைக்களான ராதிகாவுக்கும் குஷ்புவுக்கும் உள்ளது, நாம் அன்றே கணித்தோம், பாஜக என்ற உரையில் இரண்டு கத்திகள் இருக்க முடியாது என்று ஆனால் அதிலிருந்து இப்போது ஒரு கத்தி வெளிவந்ததாகவே பார்க்கும் நிலை அதற்கு அவர் கூறும் காரணம் தான் அரசியல், இந்தியா முழுவதும் பிரச்சாரம் செய்ய வேண்டியுள்ளது.. குஷ்பு கூறுவது உண்மை இல்லை தான். என்பது போகப் போகத் தெரியும். பாரதிய ஜனதா கட்சி தேசியத் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு ஏற்பட்ட காயம் தான் இந்த முடிவுக்குக் காரணம் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதில், "நான் நன்றியுணர்வுடன் ஒரு அளவு சோகத்துடன் உங்களை அணுகுகிறேன்.
வாழ்க்கை, நமக்குத் தெரிந்தபடி, கணிக்க முடியாதது. சில சமயங்களில், நாம் சிறந்த நிலையில் இருப்பதாக உணரும்போது, அது நமது சகிப்புத்தன்மையின் வரம்புகளை சோதிக்கும் சோதனைகளை நமக்கு அளிக்கிறது. நானும் அப்படிப்பட்ட ஒரு குறுக்கு வழியில்தான் இருக்கிறேன். 2019 ஆம் ஆண்டு டெல்லியில் ஏற்பட்ட துரதிர்ஷ்டவசமான விபத்தைத் தொடர்ந்து,
எனக்கு வால் எலும்பில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இந்த காயம் கடந்த ஐந்து ஆண்டுகளாக என்னைத் துன்புறுத்துகிறது, தொடர்ந்து சிகிச்சை அளித்தாலும் குணமடையவில்லை.தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் நான் தீவிரமாக பங்கேற்பதை இடைநிறுத்தம் செய்ய வேண்டும்" என்று குஷ்பு தேசிய தலைவர் ஜெ பி நட்டாவிடம் கூறினார். இந்த விஷயத்தில் குஷ்புவுக்கும் ராதிகாவுக்கும் மோதல் தொடங்கிவிட்டதே என நினைத்துக் கொண்டிருந்த சமயத்தில், நம் கற்பனைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது அந்த ட்வீட். இனி அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராகத் தொடர்வாரா ? இல்லை அதை உடனே இராஜினாமா செய்வாரா ? என்பதே பலரின் எதிர்பார்ப்பு
கருத்துகள்