சிவகங்கை மாவட்டம், காரைக்குடி தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட வீரையன் கண்மாய் அருகில் உள்ள வைத்தியலிங்கபுரம் தங்கராஜ் (வயது 58). தேவாங்கர் சமூகத்தின் நெசவுத் தொழிலாளி, கன்னடம் தாய் மொழி, நடமாடும் தேநீர் கடை நடத்தி வருகிறார்
இவரது மனைவி லதா (வயது 50). இவர்களுக்கு இரண்டு மகன்கள். மூத்த மகன் நவீன் (வயது 32). அவருடைய மனைவி செல்வி. இருவரும் சென்னை சிறு சேரி தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். இவர்களுக்கு ஒரு வயதில் ஆண் குழந்தையுள்ளது. தற்போது இவர்களும் காரைக்குடிக்கு வந்திருந்தனர். இதே போல் தங்கராஜின் இளைய மகன் ராஜேஷ். இவரும் சென்னையிலுள்ள தனியார் ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
தங்கராஜூவுக்கும், மனைவி லதாவுக்கும் பிள்ளைகள் தொடர்பாக அவ்வப் போது தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனவருத்தத்தில் இருந்தவர், தன் மனைவி, மகன்கள் தனது பேச்சை புறக்கணிப்பதாகக் கருதி விரக்தி அடைந்தாகக் கூறப்பட்டாலும். சம்பவம் நடந்த அன்று தங்கராஜ், மூன்று கேன்களில் பெட்ரோல் வாங்கி வந்து வீட்டில் வைத்திருந்தார். இரவு அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். அன்று அதிகாலையில் எழுந்த தங்கராஜ் பெட்ரோலை தன் மீதும், தன் மனைவி மீதும் ஊற்றினார்.திடீரென்று தன் உடலில் பெட்ரோல் ஊற்றியதால் தூக்கத்திலிருந்து விழித்த லதா பதற்றமடைந்து அலறினார். அதற்குள் தங்கராஜ் தீப்பற்ற வைத்துவிட்டார். படுக்கை அறை முழுவதும் பெட்ரோல் ஊற்றப்பட்டு இருந்ததால் தீ மளமளவென பிடித்தெரிந்தது. லதாவும், தங்கராஜூம் அலறினார்கள்.
இவர்களது அலறல் சத்தம் கேட்டு பக்கத்து அறையிலிருந்து ஓடி வந்தாராம் மூத்த மகன் நவீன் இருவரையும் காப்பாற்ற முயன்றதாகவும் ஆனால் அவரால் முடியவில்லை எனவும். அவரும் பலத்த தீக்காயமடைந்தார்.வீடே எரிந்ததால் மருமகள் செல்வி, குழந்தையைத் தூக்கிக்கொண்டு பின்வாசல் வழியே வெளியேறி ஓடியதால் உயிர் தப்பிய தாகவும். பின்னர் அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் தீயில் கருகி தங்கராஜூம், அவரது மனைவி லதாவும் பலியானார்கள். உடன் வளர்த்த நாயும் தீக்காயங்கள் அடைந்தது,
தீக்காயமடைந்த நவீனை மீட்டு சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீக்காயங்கள் சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனின்றி அவரும் இறந்தார்.
சம்பவம் குறித்து காரைக்குடி தெற்கு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவ இடத்தை காரைக்குடி காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் பிரகாஷ் பார்வையிட்டு மேல் விசாரணை நடத்தினார். மாமனார் வீட்டுக்கு வந்த இடத்தில் தான் கணவரைப் பறிகொடுத்து விட்டதாகவும் செல்வி தனது குழந்தையுடன் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கருத்துகள்