தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக்குழு JAAC-ன் அவசரப் பொதுக்குழுக் கூட்டம்
நேற்று முன்தினம் 07.04.2024 ஆம் தேதி, காலை 10.30 மணிக்கு தொடங்கி, மதுரையில் நடைபெற்றது அதில் தலைவர் P.நந்தகுமார் தலைமையிலும், செயலாளர் K.பன்னீர்செல்வன், பொருளாளர் D.ரவி மற்றும் மதுரை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் நெடுஞ்செழியன், செயலாளர். மோகன் குமார் மற்றும் நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற பொதுக்குழுக் கூட்டத்தில் கீழ்க்கண்ட கோரிக்கைகள் மற்றும் தீர்மானங்களை வலியுறுத்தி வருகிற 08.04.2024 ஆம் தேதி முதல் 19.04.2024 வரை மாநில அளவில் அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்றப் பணியிலிருந்து விலகியிருப்பது என்றும் அதன் பிறகு கோரிக்கைகளின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து வருகிற 21.04.2024 ஆம் தேதியன்று திருச்சிராப்பள்ளியில் பொதுக் குழுவைக் கூட்டி முடிவெடுப்பதென்றும் நமது பொதுக்குழுவில் ஏகமனதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது:
தீர்மானங்கள்:
1.(i). விசாரணை நீதிமன்றங்களில் இ-ஃபைலிங் முறையில் வழக்குகளைத் தாக்கல் செய்வதில் பல நடைமுறைச் சிக்கல்கள் உள்ளதால், வழக்கின் தன்மை மற்றும் வழக்காடிகளின் முதன்மைத் தரவுகளை மட்டும் வழக்கறிஞர்கள் இ-பைலிங்கில் பதிவேற்றம் செய்துவிட்டால், மற்ற விவரங்களை நீதிமன்றங்களே பதிவேற்றிக் கொள்ள வேண்டுமென்றும், அதனை இது நாள் வரை இருந்து வந்த பழைய நடைமுறைப்படி நேரடியாக (physical) தாக்கல் செய்யப்படும் மனுக்களை சரி பார்த்து கோப்பிற்கு எடுத்து வழக்கு எண் கொடுத்த பிறகு மனுக்களையும், ஆவணங்களையும் நீதிமன்ற ஊழியர்களைக் கொண்டே இ-ஃபைலிங் மென்பொருளில் ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டுமென்றும் அதுவரை கட்டாய இ-பைலிங் முறையை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதி மன்றம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று JAAC வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
(ii) அத்துடன் குற்றவியல் வழக்கின் மனுக்களையும் ஆவணங்களையும் மற்றும் அசல் தாவா வழக்குகளில் ஆவணங்களையும் இ-ஃபைலிங்கில் பதிவேற்றம்செய்வதில் பல்வேறு சிரமங்கள் உள்ளது, விசாரணை நீதிமன்றங்களில் தகுந்த கட்டமைப்பையும், அதற்கென்று தனியாக ஊழியர்களையும் ஏற்படுத்தப்படும் வரை இ-ஃபைலிங் முறையை கட்டாயமாக்காமல் இ-ஃபைலிங்யுடன் physical ஃபைலிங்கையும் அனுமதிக்க வேண்டுமென்று JAAC வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
(iii) விசாரணை நீதிமன்றங்களில் சங்கங்கள் தங்களுக்கு இடையே ஏற்படுத்தி வைத்துள்ள வெல்பர் ஸ்டாம்ப்களையும் மற்றும் ஏற்கனவே வாங்கி வைத்துள்ள கோர்ட் பீஸ் ஸ்டாம்ப் களையும் வழக்குகளில் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்ய வேண்டும்.
(iv) விசாரணை நீதிமன்றங்களில் குற்றவியல் வழக்குகளில் சூழ்நிலைக்கு ஏற்ப தாக்கல் செய்யப்படும் CPC, CrPC பிரிவு 126, 311, 317 மனுக்கள் மற்றும் நகல் மனுக்கள் மற்றும் வாதி பிரதிவாதிகளின் சார்பாக தாக்கல் செய்யப்படும் வக்காலத்து, அழைப்பானை மனுக்கள், பேட்டா குறிப்பானைகள் போன்ற உடனடி மனுக்களை நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் நேரடியாக சமர்பிக்க அனுமதிக்க வேண்டும், இ-ஃபைலிங் முறையிலிருந்து இதற்கு விலக்களிக்க வேண்டும்.
2. i. இந்திய தண்டனைச் சட்டம்(IPC) தற்போது பாரதிய நியாய சன்ஹிதா-2023 (BNS),
ii.குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPC) தற்போது பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா-2023 (BNSS) மற்றும்
iii.இந்திய சாட்சிய சட்டம்(IEA) தற்போது பாரதிய சாக்ஷ்ய-2023 (BS Act) என்று மாற்றப்பட்டுள்ள சட்டங்கள் நாட்டின் பெரும்பான்மையான குடிமக்கள், நீதிபதிகள் மற்றும் பெரும்பான்மையான சட்டப் பயிற்சி பெற்ற வழக்கறிஞர்களுக்கு அறிமுகமில்லாத பெயர்கள் மற்றும் உச்சரிக்க முடியாத பெயர்கள் என்பதை கருத்தில் கொண்டு புதிய சட்டங்களை திரும்பப் பெற்று பழைய பெயர்களை நீடிக்க வேண்டும் என்று JAAC வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
3. தமிழை உயர்நீதி மன்றத்தின் வழக்காடு மொழியாக அறிவிக்க கோரி தொடர் அறப்போராட்டத்தை Jaac முன்னெடுத்து வந்துள்ளது அதனை மீண்டும் வலியுறுத்தியும்,
4. தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தொழில் புரியும் இடங்களில் தொடர்ச்சியாக வழக்கறிஞர்கள் அச்சுறுத்தப்பட்டு வருவதும், வழக்கறிஞர்களின் உயிருக்கும், உடைமைக்கும் பாதுகாப்பில்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அகவே வழக்கறிஞர்கள் சுதந்திரமாக தொழில் புரிய மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும்,
மேற்கண்ட கோரிக்கை தீர்மானங்களுக்காகவும் மற்றும் கட்டாய இ-ஃபைலிங் முறையை மாண்புமிகு உயர்நீதிமன்றம் நிறுத்திவைக்க வலியுறுத்தி தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி விசாரணை நீதிமன்றங்களில் வருகின்ற 08.04.2024 ஆம் தேதி திங்கள்கிழமை முதல் 19.04.2024 வரை வழக்கறிஞர்கள் பணியிலிருந்து விலகி இருப்பது என்று அனைத்து வழக்கறிஞர்களையும் (JAAC) தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு கேட்டுக் கொள்கிறது.
P.நந்தகுமார், தலைவர். K.பன்னீர்செல்வன்,பொதுச்செயலாளர் D.ரவி, பொருளாளர்.(தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டுக் குழு-JAAC).தமிழ்நாடு பாண்டிச்சேரி வழக்கறிஞர்களின் கூட்டமைப்பு ஜாக் கமிட்டி நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடந்ததில் வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசிய கூட்டமைப்பின் தலைவர் நந்தகுமார், மாவட்ட விசாரணை நீதிமன்றங்களில் இ- பைலிங் (மின்னணு முறை) முறையை ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் நீதித்துறை அமல்படுத்தி உள்ளதாகத் தெரிவித்தார்.
ஆனால் இ பைலிங் செய்வதற்கு விசாரணை நீதிமன்றங்களில் எந்தக் கட்டமைப்பு வசதியும் செய்து தரவில்லை என்றும், இதனால் வழக்குகள் தாக்கல் செய்வதில் பல பிரச்சனைகளைச் சந்தித்து வருவதாகவும் தெரிவித்தார். இந்தச் சிக்கல் தீரும் வரை இ-பைலிங் முறையை நிறுத்தி வைக்ககோரி, ஏப்ரல் மாதம்19-ஆம் தேதி வரை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகத் தெரிவித்தார்.
கருத்துகள்