பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக 303 இடங்களைக் கைப்பற்றுவார் என பிரசாந்த் கிஷோர் கணிப்பு
மாநிலங்களின் நிதி சுயாட்சியைக் குறைக்கும் முயற்சிகளை முன்னறிவிக்கிறது
கிராஃப்ட் எதிர்ப்பு விவரிப்பு கட்டமைப்பு, செயல்பாட்டு மாற்றங்களையும்,
பெட்ரோலியம் சரக்கு மற்றும் சேவை வரியான ஜிஎஸ்டி யின் கீழ் கொண்டு வரப்படுவதையும், மாநிலங்களின் நிதி சுயாட்சியில் குறிப்பிடத்தக்க தடைகளையும் காண முடியும் என்ற நிலை இருந்த போதிலும் பாரதிய ஜனதா கட்சி 303 இடங்களில் வெற்றி பெறும் என அரசியல் ஆய்வாளர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
இந்திய தேசிய காங்கிரஸ் பாரத விடுதலைக்குப் பாடுபட்ட கட்சி மற்றும் நூற்றாண்டுகளை கடந்த கட்சியாக இருந்த நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் ஆரம்பிக்கப்பட்ட வருடம் 1885. ஆம் ஆண்டு ஏ ஓ ஹியூம் எனும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியரால் துவங்கப்பட்ட கட்சி
பாரதத்தின் சுதந்திரத்திற்கு பின்பான 76 ஆண்டு கால வரலாற்றில் மொத்தம் 17 பாராளுமன்றத் தேர்தல்களில் ஏழு முறை முழு அறுதிப் பெரும்பான்மையுடனும் 3 தடவை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் மொத்தம் 54 வருடங்கள் பாரத தேசத்தில் ஆட்சி செய்தது.
அவ்வளவு வலிமையானதொரு கட்சி, 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 329 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் 400 தொகுதிகளுக்குக் கீழாகப் போட்டியிடுவது இதுவே முதல் முறை. அதனது வாக்கு வங்கியும் வெகுவாகவே குறைந்துள்ளது காங்கிரஸ் கட்சிக்கு ஒரு கவலையளிக்கும் தரவாகும். 2014 ஆம் ஆண்டுத் தேர்தலில் 31 சதவீதம் வாக்குகளிலிருந்து 2019 தேர்தலில் வெறும் 19. சதவீதம் வாக்குகளாகச் சரிந்தது.
வெறும் 329 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடுவதால் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் வாக்கு சதவிகிதம் மேலும் குறையுமென்பது தெரிகிறது.
இத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி 441தொகுதிகளில் போட்டியிட்டு கூட்டணி கட்சிகளுக்கு 99 இடங்களையும் அளித்துள்ளது. ஆட்சியமைக்கத் தேவையான ஆதரவு 272 தொகுதிகளில் வெற்றி என்பது மட்டுமே. காங்கிரஸ் கட்சி போட்டியிடுவதே வெறும் 329 தொகுதிகளில் மட்டும் தான்.
சீர்மிகுந்த ஜனநாயகத்திற்கு வலுவான எதிர்கட்சி என்பது மிகவும் அவசியம், ஆனால் காங்கிரஸ் கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக ஒவ்வொரு தேர்தலிலும் இவ்வாறு வாக்கு வங்கியை இழந்து வருவது முதிர்ந்த ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய இழப்பாகவே பார்க்க முடிகிறது.
காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்ட மூவரின் முக பாவனையே அதைச் சொல்கிறது மீண்டு வருவதற்கான வழி கண்ணிற்கு எட்டிய தூரமில்லை தான் என்பதையும், காங்கிரஸின் எதிர்காலம். ஒன்றும் சொல்வதற்கில்லை. மேலும் பிரதமர் வேட்பாளராக யாரையும் இவர்களது இந்திய கூட்டணி முன் வைக்கவில்லை, இதுவரை பாரதிய ஜனதா கட்சியின் தாயமைப்பான ஆர் எஸ் எஸ். பாரதிய ஜனதா கட்சியின் பின்னணியில் நரேந்திர மோடியின் பேயரைச் சொல்லித் தான் கடந்த பத்தாண்டுகளில் ஆட்சி நடத்தி அவர் தான் இந்த ஆட்சியின் முகமாப் பார்க்கும் நிலை!
நாட்டில் எந்த நல்ல விஷயம் நடந்தாலும், அது நரேந்திர மோடியின் வெற்றியாகவே பார்க்கப்பட்டது!
ஆனால், கூடி வந்த கனவு குலைந்தது போல உள்ளது!
‘’அவரது அலை வீசுகிறது, விஸ்வரூப வெற்றி தான்’’ என விதந்தோதியவர்கள் சற்று அமைதியாகிவிட்டனர். காரணம் தேர்தல் முடிவுகள் வந்த பின்னர் பிரதமர் வேறு யாரும் தேர்வாகும் நிலை வந்தால் அதை தாய் அமைப்பு பார்த்து இயக்கும் பொம்மலாட்டம் தான்
‘பெரும்பான்மையை நிருபிக்கவே பெரும்பாடுபட வேண்டும்’ என்றால், ஏதோ சலிப்பு தட்டிவிட்டது போல மக்களுக்கு!
‘விநாச காலே விபரீத புத்தி’ என்பது போல, அவரும் தேர்தல் பிரச்சாரங்களில் உளறி கொட்டி, உள்ள மதிப்பையும் இழந்து நிற்பதாக எதிர்கட்சிகள் செய்யும் பிரச்சார வியூகம் ஒரு பக்கம் !
அலை ஓய்ந்துவிட்டதென்றால், அவர் விலை போகா பண்டம் தான் இனி என் உள் கட்சியிலேயே பவர் !
ஆகவே, பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பெரும்பாடுபட்டு ஆட்சி அமைக்கும் சூழல் வந்தால், இனி அவரைக் கழற்றிவிட வேண்டியது தானாம்!
ஆக, அதிருப்தி தலை தூக்கிவிட்டதென்றால், ஆளை மாத்த வேண்டியது தான் தாய் அமைப்பு சார்ந்த பலரும் என யோசிக்க ஆரம்பித்துவிட்டதாகவே களம் கூறுகிறது !
75 வயதைக் காரணம் காட்டி, எத்தனை பெரிய தலைவர்களை எல்லாம் அவர் மூலம் தாய் அமைப்பினர் ஓரம் கட்டினார்! தற்போது அவர் போட்ட கோடே அவரைத் தடுத்து நிறுத்துகிறது போலவே தெரிகின்றது !
அண்ணன் எப்ப போவான். திண்ணை எப்பக் காலியாகும் என்று காத்திருந்த மூவர் தற்போது ஆட்சியின் தலைமைப் பதவிக்கு ஆலாய்ப் பறக்கிறார்கள் என்பது கூடுதல் தகவல் !நரேந்திர மோடி அரசு வறுமைக் கோட்டுக்கு கீழிருக்கும் 80 கோடி மக்களுக்கு மாதந்தோறும் 5 கிலோ உணவு தானியம் வழங்கி வருவதை கேலி செய்த காங்கிரஸ் கட்சி இப்போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 10 கிலோ வழங்குவோம் எனப் பேசுவதும் கவனம் பெற்றது, அடுத்தது மத ரீதியாக இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று தெரிந்திருந்தும் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இஸ்லாமியர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் பட்டியலின மக்களுக்குச் சமமாக இட ஒதுக்கீடு வழங்குவோம் என்று சொல்வது ஏமாற்று வேலையாகும் என்பது யாவரும் அறிந்ததே. 2004 ஆம் ஆண்டு சோனியா காந்தி தானே பிரதமர் பதவிக்கு வர கடும் என முயற்சி செய்தார். ஆனால் அவர் வருவதற்க்கு நமது நாட்டுச் சட்டம் இடம் கொடுக்காத காரணத்தால் தான் டாக்டர். மன்மோகன் சிங் பிரதமராக்கப்பட்டார். இது கடந்த காலத்தில் நிகழ்ந்த வரலாறு 2024 மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என பிரசாந்த் கிஷோர் கணித்துள்ளார்.
மேலும் 2023 ஆம் ஆண்டு நவம்பர்-டிசம்பர் மாதங்களில் ஐந்து சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றிபெறும் என்று காங்கிரஸ் கணித்துள்ளது, அது அவ்வாறு செய்யவில்லை. 2024 லோக்சபா தேர்தலை இந்திய அணி பலம் வாய்ந்த நிலையில் இருந்து தொடங்கும். இந்த சிந்தனையில் அவர்கள் முக்கியமான 4-5 மாதங்களை இழந்தனர், அதே நேரத்தில் பாஜக ஏற்கனவே பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் பிரச்சாரத்தைத் தொடங்கியது. உண்மையில், ராம் மந்திர் நிகழ்வுக்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கு, எதிர்க்கட்சிகள் கிட்டத்தட்ட தங்களது பரப்புரையைக் கைவிட்டன. பிப்ரவரியில் அவர்கள் மீண்டும் எழுந்த நேரத்தில், அது மிகவும் தாமதமாகிவிட்டதென பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார். மே மாதம் 20-ஆம் தேதி 5-ஆம் கட்டமாக 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், மொத்தமுள்ள 543 இடங்களில் 428 இடங்களுக்கான தேர்தல் நடந்து முடிந்தது. மீதமுள்ள இரண்டு கட்டங்கள் மே மாதம் 25 ஆம் தேதி மற்றும் ஜூன் மாதம் 1 ஆம் தேதிகளில் நடைபெறும். ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை ஜூன் மாதம் 4 ஆம் தேதி நடைபெறும்.
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ), பிரதமர் நரேந்திர மோடியின் கீழ் மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்க முயல்கிறது , இந்தத் தேர்தலில் 400 இடங்களைக் கைப்பற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்தியா பிளாக் என்ற பதாகையின் கீழ் காங்கிரஸ் கட்சி தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஆளும் கூட்டணிக்கு சவாலாக உள்ளன, இந்த நிலையில் பிரசாந்த் கிஷோர் நடத்திய கருத்துக் கணிப்பு அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாகியுள்ளது என்பதே உண்மை.
கருத்துகள்