சர்வதேச செவிலியர் தினத்தை ராணுவ சேவையிலுள்ள செவிலியர் கொண்டாடினர்
சர்வதேச செவிலியர் தினம் 2024 ராணுவ மருத்துவமனையின் ஆயுர்விஞ்ஞான் ஆடிட்டோரியத்தில் இன்று கொண்டாடப்பட்டது. ராணுவ மருத்துவமனையின் மேஜர் ஜெனரல் கன்வர்ஜித் சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேஜர் ஜெனரல் ஷீனா வரவேற்றார்.
சமூகத்திற்கு செவிலியர்களின் பங்களிப்பைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்த நாளன்று சர்வதேச செவிலியர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
சர்வதேச செவிலியர் கவுன்சில் இந்த ஆண்டுக்கான கருப்பொருளை 'நமது செவிலியர்கள் நமது எதிர்காலம், கவனிப்பின் பொருளாதார சக்தி' என்று அறிவித்துள்ளது. 'செவிலியரில் செயற்கை நுண்ணறிவு: வரம் அல்லது பாதகம் ' என்ற தலைப்பில் கருப்பொருள் குறித்த குழு விவாதம் நடத்தப்பட்டது. செவிலியர் தொழிலில் உள்ள சவால்கள், செவிலியர்களை மேம்படுத்துவதற்கான அணுகுமுறைகள், செவிலியர்களின் தலைமைப் பங்கு, செவிலியர் கல்வி, சுகாதாரப் பராமரிப்பில் டிஜிட்டல்மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை குழுவினர் விவாதித்தனர்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செவிலியர் அதிகாரிகள் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். கேப்டன் தீபா ஷாஜனுக்கு புஷ்பனரஞ்சன் விருது வழங்கப்பட்டது. தலைமை விருந்தினர் கூட்டத்தில் உரையாற்றியதுடன், ராணுவ அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட தொழில்முறை தரங்கள் மற்றும் நெறிமுறைகளை நிலைநிறுத்த அவர்களை ஊக்குவித்தார். ஷிப்டுகளில் ஓய்வின்றி பணியாற்றி, நோயாளிகளை மிகுந்த கருணையுடனும், பரிவுடனும் கவனித்துக் கொள்ளும் எம்என்எஸ் அதிகாரிகளை அவர் பாராட்டினார்.
கருத்துகள்