பாலியல் கொடுமைப் புகாரில் கைதான மகுடீஸ்வரனுக்கு மாவட்டப் பொருளாளர் ஆனந்த் அனுப்பிய எச்சரிக்கை அறிவிக்கை
பாலியல் கொடுமைப் புகாரில் கைதான பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டச் செயலாளர் அவரது பொருப்பைப் பயன்படுத்தி தொழில் நிறுவனங்களை மிரட்டி ரூபாய்.1 கோடிக்கு மேல் வசூலித்துள்ளார்.
அப்படி வசூலித்த பணத்தை உடனடியாக கட்சியின் வங்கிக் கணக்கில் செலுத்தும் படி பாரதிய ஜனதா கட்சியின் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது
திண்டுக்கல் மாவட்டம், பழநி அருகில் புஷ்பத்தூர் ஊராட்சியைச் சேர்ந்தவர் மகுடீஸ்வரன். பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட முன்னாள் செயலாளர். அவரது மனைவி செல்வராணி, புஷ்பத்தூர் ஊராட்சி மன்றத் தலைவராவார். மகுடீஸ்வரன் கடந்த மாதம் காலை உணவுத் திட்ட பெண் ஊழியருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தாக எழுந்த புகாரின் விசாரணைக்குப் பிறகு கைதாகிச் சிறை சென்றார். அதனால், அவரது மாவட்டச் செயலாளர் பதவியும் பறிக்கப்பட்டது.
மகுடீஸ்வரன் ரேக்ளா ரேஸ் நடத்தப்போவதாகவும், நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும் கூறி, தொழில் நிறுவனங்களை மிரட்டி ரூபாய்.1 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
அதுதொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டப் பொருளாளர் ஆனந்த், மகுடீஸ்வரனுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பியுள்ளதில், கட்சியின் பெயரைப் பயன்படுத்தி தொழில் நிறுவனங்களில் ரூபாய்.1 கோடிக்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளது.
வசூலித்த தொகைக்கு எந்த நிறுவனத்திற்கும் முறையாக இரசீது வழங்கவில்லை. எனவே, ‘வசூல் செய்த தொகையை கட்சியின் மாவட்ட நிர்வாக வங்கிக் கணக்கில் செலுத்தி, அதற்கான விவரங்களை வழங்க வேண்டும். தவறினால் கிரிமினல் வழக்குத் தொடரப்படும்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்ட நோட்டீஸ் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிய நிலையில், மகுடீஸ்வரன், பாரதிய ஜனதா கட்சியின் திண்டுக்கல் மேற்கு மாவட்டச் செயலாளராக இருந்த போது கடந்த ஆண்டு தி.மு.க அரசையும், தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியையும் கண்டித்து, ஆயிரக்கணக்கானோரைச் சேர்த்து போராட்டம் நடத்தியதையடுத்து தொப்பம்பட்டி ஒன்றியத்தில் செல்வாக்கான ஆளாகவே வலம்வந்தார். இந்த நிலையில் தான், பாலியல் புகாரில் சிக்கி கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்
மாவட்டத் தலைவர் கனகராஜ் தெரிவிக்கையில் "மகுடீஸ்வரன் உடல்நலக் குறைவு காரணமாக கட்சியில் செயல்பட முடியவில்லை எனக் கூறி, கடந்த 2-ஆம் தேதி கொடுத்திருந்த கடிதத்தை ஏற்றுத்தான் மாநிலத் தலைவர் ஒப்புதலுடன் கட்சிப் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார். அவர் மீதான புகார் குறித்து கருத்துக் கூற விரும்பவில்லை" எனத் தெரிவித்தார்.
ஆனால் அப்போது தேர்தல் நடவடிக்கைகளுக்காக காரணமாக கட்சியினர் மீது எழுந்த புகார்கள் தொடர்பான விசாரணையில் கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்ட நிலையில், தேர்தலுக்கு பின் நடக்க உள்ள பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகளின் முதல் ஆலோசனை கூட்டம், சென்னை அமைந்தகரையிலுள்ள தனியாருக்குச் சொந்தமான மண்டபத்தில் இன்று நடக்கிறது. காலை, 9:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடக்கும் இந்தக் கூட்டத்தில், நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள், மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், அணி மற்றும் பிரிவுகளின் நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்கும் கூட்டத்தில் புகாருக்கு ஆளானவர்கள் மீது எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், கட்சியின் அமைப்பில் மாற்றங்கள் செய்வது குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன.
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி அமைப்பு ரீதியாக, 66 மாவட்டங்களாகவும். ஏழு முதல், 11 மாவட்டங்களுக்கு ஒரு பெருங்கோட்டமென, எட்டு பெருங்கோட்டங்களுமுள்ளன. மாவட்ட வாரியாக ஆய்வு செய்து கட்சி பணிகளை முடுக்கிவிட வேண்டிய பெருங்கோட்டப் பொறுப்பாளர்கள் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என, கட்சியின் தலைமை கண்டறிந்துள்ளது. எனவே, அவர்களது பொருப்புக்களை மாற்றியமைப்பது மற்றும் மாநில நிர்வாகிகளின் எண்ணிக்கையைக் குறைப்பது உள்ளிட்ட பல மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்துகள்