2024 மக்களவைத் தேர்தலில் குடியரசுத் துணைத் தலைவர் வாக்களித்தார்: வாக்காளர்கள் அனைவரும் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு குடியரசுத் துணைத் தலைவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்
குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர் மற்றும் அவரது மனைவி டாக்டர் சுதேஷ் தன்கர் ஆகியோர், 2024 மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில், இன்று (25.05.2024) புதுதில்லி வடக்கு அவென்யூவில் சிபிடபிள்யூடி சேவை மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.
வாக்களித்த பின்னர் சமூக ஊடக எக்ஸ் தளத்தில் கருத்துத் தெரிவித்துள்ள குடியரசுத் துணைத்தலைவர் திரு ஜக்தீப் தன்கர், ஜனநாயகத்தின் இந்த மாபெரும் திருவிழாவில் வாக்களிப்பது நமது கடமை மற்றும் உரிமை என்று கூறியுள்ளார்.
இந்தியா மிகவும் துடிப்பான, ஆற்றல் மிக்க மற்றும் செயல் திறனுள்ள ஜனநாயகம் என்று திரு ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார். பாரதம் உலகிற்கு ஒரு எடுத்துக்காட்டாகத் திகழ்கிறது என்று குடியரசுத் துணைத்தலைவர் கூறியுள்ளார். வாக்களிக்கும் உரிமையைப் பயன்படுத்துவதன் மூலம் வாக்காளர்கள் அனைவரும் தங்கள் அரசியலமைப்புக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்று திரு ஜக்தீப் தன்கர் வலியுறுத்தியுள்ளார்.
கருத்துகள்