முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ரூபாய் ஒரு கோடி லஞ்சம் கேட்டு மூன்று லட்சம் லஞ்சம் வாங்கிய வட்டாட்சியர் புரோக்கருடன் கைது

சென்னையில் கைதான வட்டாட்சியர் சோதனையை எதிர்த்த பாரதிய ஜனதா கட்சியின்  கராத்தே தியாகராஜன். சென்னையில் லஞ்ச வழக்கில் கைதான வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்திய நிலையில், அதற்கு பாரதிய ஜனதா கட்சியின்  கராத்தே தியாகராஜன் எதிர்ப்புத் தெரிவித்தார்.

அவர் எதற்காக எதிர்ப்பு தெரிவித்தார்.. என்ன நடந்தது 

சென்னை ஈஞ்சம்பாக்கம் ராஜன்நகர், செல்வா நகர் பகுதிகளுக்குச் செல்வதற்காக இருந்த 40 அடி சாலையில் ஒருவர் பகிரங்கமாகவே ஆக்கிரமித்து வீடு கட்டி விட்டார். அதனால் ராஜன்நகர், செல்வா நகருக்கான 40 அடி சாலை 12 அடியாகக் குறுகிவிட்டது. இந்தச் சாலை ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என்று சோழிங்கநல்லூர் பகுதியின் சமூக ஆர்வலர் பொன் தங்கவேல்  சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் புகாரளித்தார்.



ஆனால் அவரது புகார் மனு மீது மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதை அடுத்து ராஜன்நகர், செல்வா நகருக்கான 40 அடி சாலை 12 அடியாக குறுகியதற்கு காரணமாக ஆக்கிரமிப்பை அகற்ற மாநகராட்சி  அலுவலர்களுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொன் தங்கவேல் வழக்குத் தொடர்ந்தார்.



அந்த ஆக்கிரமிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , உடனடியாக ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று சென்னை மாநகராட்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டது. அதன் நகலை எடுத்துக் கொண்டு சென்னை தெற்கு மண்டலத் துணை ஆணையரைச் சந்தித்து பொன் தங்கவேல் முறையிட்டார். அங்கு தெற்கு மண்டல துணை ஆணையர் மூன்று நாட்களில் ஆக்கிரமிப்பு அகற்றப்படும் என உறுதியளித்ததுடன், உரிய பணியாளர்களை அழைத்து ஆக்கிரமிப்பை அகற்றுமாறு உத்தரவிட்டார். இந்தப்பணியைக் கண்காணிக்க சிறப்பு வட்டாட்சியர் சரோஜாவைவும் நியமித்தார்.


இதற்கிடையே இந்த ஆக்கிரமிப்பை அகற்றினால் இந்தச் சாலை 40 அடிச் சாலையாக இப்பகுதியில் வசித்து வரும் மக்களுக்கு வழி கிடைக்கும். மேலும் இங்குள்ள நிலத்தின் மதிப்பும் கோடிக்கணக்கில் உயரும். எனவே அருகிலுள்ள நில உரிமையாளர்களிடம் ரூபாய்.1 கோடி லஞ்சமாக வாங்கித் தந்தால் ஆக்கிரமிப்புகள் உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என வட்டாட்சியர் சரோஜா கோரினாராம்.



பின்னர் லஞ்சமாகக் கேட்ட ரூபாய்.1 கோடி பணம் ரூபாய்.20 லட்சமாக குறைக்கப்பட்டுள்ளது. அதில் ரூபாய்.3 லட்சத்தை முன்பணமாகத் தரும்படி வட்டாட்சியர் சரோஜா கேட்டாராம். ஆனால் அந்த இலஞ்சம் பணத்தைக் கொடுக்க பொன் தங்கவேல் விரும்பாததைத் தொடர்ந்து சென்னை லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவில் பொன் தங்கவேலு புகார் அளித்தார்.           


                                அதன் பின் V&AC trapped and arrested Tmt.Saroja, Spl.Tahsildar, Adyar and Tr.Arunkumar, PC, St.Thomas Mount Crime P.S. for demanded of Rs.3,00,000/- as advance bribe for evict the encroachment in the complainant's land on 14.05.2024.                          இலஞ்ச ஒழிப்புத் துறையில் வழக்குப்பதிவு செய்து விசாரணையை நடத்தினர். மேலும் ரூபாய்.3 லட்சம் பணத்தை வாங்கும் போது வட்டாட்சியர் சரோஜாவை பொறி வைத்துப் பிடிக்க ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத் துறையினர் திட்டமிட்டதன்படி நேற்று ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வட்டாட்சியர் சரோஜாவின் அலுவலகத்தைக் கண்காணித்தனர். முதலில் அடையார் எல்.பி.சாலையில் உள்ள சரோஜா பணி செய்து வரும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு பினாப்தலின் இரசாயணப் பொடி தடவிய ரூபாய்.3 லட்சம் இலஞ்சப் பணம் புகார்தாரர் சார்பில் கொண்டு செல்லப்பட்டது. ஆனால் அந்தப் பணத்தை வட்டாட்சியர் சரோஜா நேரடியாக வாங்க மறுத்து. அவரது கணவரான பரங்கிமலை ஆயுதப்படையில்  தலைமைக் காவலராகப் பணியில் உள்ள பிரவீனிடம் சொல்லி, இலஞ்சப் பணத்தை அவரது நண்பரான பரங்கிமலை குற்றப்பிரிவுக் காவலர் அருண்குமாரிடம் கொடுக்குமாறு வட்டாட்சியர் சரோஜா கூறியதன் பேரில் ரூபாய்.3 லட்சம் இலஞ்சப் பணம் காவலர் அருண்குமாரிடம் கொடுக்கப்பட்டது. அப்போது மாறுவேடத்திலிருந்த ஊழல் தடுப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கையுடன் காவலர் அருண்குமாரைப் பிடித்துள்ளார்கள். அவரிடமிருந்து ரூபாய்.3 லட்சம் பணம் மீட்கப்பட்டது. அவர் கைகள் சோடியம் கார்பனேட்டு கரைசலில் நனைத்து பின்பு கைது செய்யப்பட்டார். இலஞ்சப் பணம் கேட்ட வட்டாட்சியர் சரோஜாவையும் பின்னர் கைது செய்தார்கள்.

இதனிடையே சிறப்பு வட்டாட்சியர் சரோஜா தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் தேர்தல் நடத்தும் உதவி அதிகாரியாக இருந்தவர் என்பதால், இலஞ்ச ஒழிப்புத் துறையினர் அவரது அலுவலகத்தில்  நடத்திய சோதனையின் பின்னர் இது குறித்து தகவல் கிடைத்தவுடன் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் மாநிலச் செயலாளரும், தென்சென்னை தொகுதியின் பொறுப்பாளருமான கராத்தே தியாகராஜன் அந்த அலுவலகத்துக்கு விரைந்து சென்று.

அங்கு நடந்த சோதனைக்கு கடும் எதிர்ப்பும் தெரிவித்தார்.இலஞ்ச ஒழிப்புத்துறையினர் கொடுத்த ஆலோசனையின்படி இரசாயனம் தடவிய மூன்று லட்சம் ரூபாயை பொன் தங்கவேல் அடையாரில் உள்ள சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு கொண்டு சென்றார். அப்போது, சரோஜா தரப்பில் காவலர் அருண்குமார் என்பவர், பொன் தங்கவேலைச் சந்தித்து அந்தப் பணத்தை தரும்படி கூறியிருக்கிறார். ஆனால் பொன் தங்கவேல், பணத்தைக் கொடுக்கவில்லை. அதனால் பொன் தங்கவேலுக்கும் காவலர் அருண்குமாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.அப்போது காவலர் அருண்குமார், நான் மதுரைக்காரன், என்னை நீங்கள் நம்பலாம் என்று பொன் தங்கவேலிடம் கூறியிருக்கிறார். இதையடுத்து பொன் தங்கவேல், இலஞ்சப் பணத்தை காவலர் அருண் குமாரிடம் கொடுத்திருக்கிறார். அப்போது அங்கு வந்த இலஞ்ச ஒழிப்புத்துறையினர் காவலர் அருண்குமாரை சுற்றி வளைத்துப் பிடித்தனர். இதையடுத்து காவலர் அருண்குமாரிடம்  விசாரித்தபோது அவர் அளித்த தகவலின்படி வட்டாட்சியர் சரோஜாவின் அறைக்கு ஊழல் தடுப்புத் துறையினர் சென்று அவரையும் கைது செய்தனர்.  அங்கு வந்த பாஜக பிரமுகர் கராத்தே தியாகராஜன், தென் சென்னை தேர்தல் அலுவலகமாக இருக்கும் இடத்தில் தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி சோதனை நடத்தப்படுவதாகக் கூறினார். இருப்பினும் லஞ்சப் புகாரில் சிக்கிய வட்டாட்சியர் சரோஜா மற்றும் காவலர் அருண்குமாரை லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.இதுகுறித்து ஊழல் தடுப்பு இலஞ்ச ஒழிப்புத் துறையில் உயர் அலுவலர்  ஒருவரிடம் பேசிய போது``சமூக ஆர்வலர் பொன் தங்கவேல் கொடுத்த புகாரின் அடிப்படையில் இந்த அதிரடி சோதனை நடத்தப்பட்டு வட்டாட்சியர் சரோஜா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த காவலர் அருண்குமார் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திருக்கிறோம். நாங்கள் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது தேர்தல் நடத்தை விதிகள் அமலிலிருப்பதால் இங்கு சோதனை நடத்தக் கூடாது என பாரதிய ஜனதா கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இருப்பினும் சட்டப்படி எங்களின் கடமையைச் செய்திருக்கிறோம். இந்த வழக்கில் சிக்கியிருக்கும் வட்டாட்சியர் சரோஜாவின் பின்னணி குறித்து விசாரித்து வருகிறோம். அதே நேரத்தில் காவலர் அருண்குமாருக்கும் வட்டாட்சியர் சரோஜாவுக்கும் எப்படிப் பழக்கம் ஏற்பட்டது என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணைக்குப்பிறகே முழுமையான தகவல்கள் தெரியவரும்" என்றார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...