மதுரை மாநகராட்சியில் பத்தாயிரம் லஞ்சம் பெற்ற வரித்தண்டலருடன் உதவியாளரும் கைது.
மதுரை மாநகராட்சியில் சொத்துவாி பெயர் மாற்றத்துக்கு ரூபாய் பத்தாயிரம் லஞ்சம் வாங்கிய மாநகராட்சி ஊழியர், மற்றும் உதவியாளரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாநகராட்சி ஆறாவது வார்டுக்கு உட்பட்ட கண்ணனேந்தல் விஜயலட்சுமிநகர் பரசுராமன் ( 74 வயது) உடற்கல்வி ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராவார். அவரது மனைவியின் பெயரிலுள்ள சொத்துக்களை மூத்த மகனான ஈஸ்வரக் கண்ணனுக்கு மாற்ற முடிவு செய்து அந்த இடத்திற்கான சொத்துப் பெயர் மாற்றம் செய்வதற்கு மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட அலுவலகத்தில் மே மாதம் 13- ஆம் தேதி விண்ணப்பித்தார்.
ஓய்வு பெற்ற ஆசிரியர் பரசுராமன் அளித்த மனு, மதுரை மாநகராட்சி மண்டலப் பிரிவு அலுவலகம் கண்ணனேந்தல் வரிவசூல் செய்யும் பிரிவிற்கு வந்திருக்கிறது. அந்த மனுவை மாநகராட்சி ஆறாவது வார்டு வரித்தண்டலர் ஆறுமுகம் (50 வயது) விசாரணை செய்துள்ளார். இவர் சிக்கந்தர்சாவடியைச் சேர்ந்தவராவார். பின்னர் சம்பந்தப்பட்ட இடத்தை 15- ஆம் தேதியன்று அவரும், அவரது உதவியாளராக உள்ள உறவினருமான சுதாகர் (வயது 25) ஆகியோர் நேரில் சென்று கள ஆய்வு மேற்கொணடதைத் தொடர்ந்து ஆய்வு செய்த இடத்தை முழுவதும் அளந்து பெயர் மாற்றம் செய்வதற்கு ரூபாய். 20 ஆயிரம் லஞ்சமாகக் கொடுத்தால் உடனே கையெழுத்திட்டுத் தருவதாக வரித்தண்டலர் ஆறுமுகம் தெரிவித்தாராம். ஆனால் பரசுராமன், நான் பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் தன்னிடம் அவ்வளவு பணமில்லை எனக் கெஞ்சிய அதைதொடர்ந்து லஞ்சத்தை ரூபாய்.15 ஆயிரமாகக் குறைத்துப் பேரம் பேசினார்கள் அதற்கும் ஆசிரியர் ஒப்புக்கொள்ளவில்லை கடைசியாக ரூபாய். பத்தாயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று தெரிவித்தாராம் ஆறுமுகம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத பரசுராமன், மதுரை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரிடம் புகார் அளித்ததையடுத்து புகாரைப் பெற்றுக்கொண்ட மதுரை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் ஓய்வு பெற்ற ஆசிரியர் பரசுராமனிடம் அவர் கொண்டு வந்து கொடுத்த பத்தாயிரம் பணத்தை அரசு சாட்சிகள் முன்பு பினாப்தலின் இரசாயனப் பவுடர் தடவிய பத்தாயிரம் ரூபாயை லஞ்சப் பணத்தைக் கொடுத்து அனுப்பியதை அடுத்து நேற்று முன்தினம் காலை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினரின் அறிவுறுத்தலின் படி, பரசுராமன் அந்த பணத்துடன் கண்ணனேந்தல் மாநகராட்சி வரிவசூல் மையத்திற்கு சென்று கொடுத்து நிலையில்
அங்கு மதுரை மாவட்ட ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை துணைக் கண்காணிப்பாளர் சத்தியசீலன் தலைமையில் ஆய்வாளர் குமரகுரு மற்றும் துறையினர் மறைந்து நின்றிருந்து. பில் கலெக்டர் ஆறுமுகத்திடம் ரூபாய் .பத்தாயிரத்தை பரசுராமன் கொடுத்திருக்கிறார். அந்த பணத்தை அவர் வாங்கி உதவியாளர் சுதாகரிடம் கொடுத்த நிலையில் உடனே மறைந்திருந்து கண்காணித்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விரைந்து அவர்கள் இருவரையும் மடக்கிப்பிடித்து கைது செய்து விசாரணை நடத்திய பிறகு இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் நீதிபதி உத்தரவின் பேரில் நீதிமன்றக் காவலில் சிறையிலடைத்தனர்.. இச்சம்பவம் குறித்து மதுரை மாநகராட்சியில் உள்ள இதற ஊழல் செய்யும் ஊழியர்கள் மத்தியில் பயத்தை உருவாக்கியுள்ளது.
கருத்துகள்