குஜராத்தில் கடல் வழியாகப் போதைப் வஸ்துக்கள் கடத்திய ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பு நான்கு பயங்கரவாதிகள் கைது
அண்மையில் தொடர்ச்சியாக குஜராத்தில் கடல் வழியாகப் போதைப் வஸ்துக்கள் கடத்தி வரப்படும் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
இலங்கையைச் சேர்ந்த ஐஎஸ்ஐ பயங்கரவாதிகள் நான்கு பேரை கைது செய்திருப்பதாக குஜராத் பயங்கரவாதத் தடுப்பு படை அறிவித்தது. அஹமதாபாத்திலுள்ள சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலையத்தில் தான் நான்கு பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான நான்கு பேரும் இலங்கையிலிருந்து சென்னை வழியாக அஹமதாபாத் வந்துள்ளனர். பின் அங்கிருந்து பாகிஸ்தானுக்குச் சென்று அந்நாட்டுத் தயாரிப்பு ஆயுதங்களை வாங்குவதற்கு தங்களைத் தயார் படுத்திக் கொண்டிருந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் இரகசிய இடத்தில் வைத்து பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். ஏற்கெனவே அதிக அளவில் குஜராத்தில் கடல் மார்க்கமாக போதைப்பொருள்கள் கடத்தப்பட்டது குறித்து தகவல் வெளியாகி இருந்தது. அது தொடர்பாகப் பலர் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்தச் சம்பவங்களுக்கு மத்தியில் ஐஎஸ்எம்ஐ அமைப்பைச் சேர்ந்த நான்கு பயங்கரவாதிகள் குஜராத்தில் கைது செய்யப்பட்டது மீண்டும் ஒரு பரபரப்பாகியுள்ளது.
கருத்துகள்