தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் அரசு மருத்துவக் கல்லூரி, மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணிசெய்யும் கடைநிலை ஊழியர்களுக்கு மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மதியம் 1 மணி முதல் இரவு 9 மணி வரையும், இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையும் என மூன்று ஷிப்ட் அடிப்படையில் பணி நேரம் ஒதுக்கப்படுகிறது.
அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள், உதவியாளர்கள் உள்பட மருத்துவக் கடை நிலை ஊழியர்களுக்கு இது பொருந்தும். முதல் ஷிப்ட்டில் 50 சதவீதம் பேரும், 2, 3 ஆவது ஷிப்ட்களிலஸ் தலா 25 சதவீதம் பேரும் என பணியில் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
கருத்துகள்