பொது ஊழியர்கள் விதிகளை மீறுவது குறித்து சரியான சுற்றறிக்கை தான் தேவை என்பது சட்ட வல்லுநர்கள் கருத்து
காவல்துறையினர் மற்றும் போக்குவரத்து துறையினரிடையே நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும் போது.
மக்கள் பணி செய்யும் அரசு பணியாளர் 'சட்டப்படி பணியாளர்களாக நடக்க வேண்டும்' என்ற விவகாரத்தில் சமரசம் செய்து வைக்க போக்குவரத்து துறை மற்றும் உள்துறை செயலாளர் சந்திப்பு நடைபெற்று வருவதை பலரும் அறிவர். சட்டப்படி நடவடிக்கை எடுப்பதில் சமரசம் ஏன்? இந்தச் சந்திப்பில் காவல்துறையினர் பேருந்துகளில் இலவசமாக செல்லலாமா என்பது குறித்தும், பேருந்துகள் விதிகளை மீறி செலுத்தப்படலாமா என்பது குறித்தும் பேசுவதை விடுத்து சட்டத்திற்கு உட்பட்டு போக்குவரத்து துறை பணியாளர்களும், காவலர்களும் பொறுப்போடு நடந்து கொள்வது, விதிகளை மதித்து நடப்பது குறித்து பயிற்சி கொடுப்பது எப்படி என்பது உள்ளிட்ட ஆலேசனைகளை வழங்கி, சட்ட விதிகளை சொல்லிக்கொடுத்து அதன்படி பணியாளர்களை நடக்க செய்ய ஆவன செய்ய வேண்டும். விதிகளை மீறி நடப்பவர்கள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் உறுதிபட கூற சுற்றறிக்கை விட வேண்டும் அதை விடுத்து கட்டிப்பிடித்து தேனீர் அருந்துவது நிர்வாகச் சீர்திருத்தமாகாது அது குறித்து நாம் கூறுவது பொது நீதி ஆகாது. வள்ளுவப் பெருந்தகை வாக்கில் உள்ளபடி "படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு", என்ற திருக்குறளும் மற்றும் "அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்காமானம் உடைய தரசு". என்ற குறளில் கூறப்படும் கருத்தும்
"அரசநெறியிலிருந்தும்செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு". இதன் கருத்தும் ஆட்சியிலிருக்கும் தலைவர்கள் மற்றும் வழிநடத்தும் அறிஞர் பெருமக்கள் அறிய வேண்டியவை,
கருத்துகள்