மஹாராஷ்டிரா மாநிலம் புனே கார் விபத்தை ஏற்படுத்திய சிறுவனின் தாயைத் தேடும் மராட்டியக் காவல்துறை!
புனே கார் விபத்தில் அடுத்தடுத்து பரபரப்பாக விபத்து ஏற்படுத்திய சிறுவனின் தாயைத் தேடும் காவல்துறை
மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் மே மாதம் 19 ஆம் தேதி சொகுசுக் காரை 17 வயதுச் சிறுவன் மது போதையில் ஓட்டியதில் இரண்டு ஐடி நிறுவன ஊழியர்கள் உயிரிழந்து அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் சிறுவனுக்கு வழங்கப்பட்ட ஜாமீன் ரத்து செய்யப்பட்ட நிலையில் இந்த வழக்கில் மது போதையில் காரை ஓட்டிய 17 வயது மகனின் ரத்தத்தை மருத்துவமனையில் மாற்றிய தாய் ஷிவானி அகர்வாலை காவல் துறையினர் தற்போது தேடி வருகிறார்கள்
மகனின் ரத்தத்திற்குப் பதிலாக தன்னுடைய ரத்தத்தை மாற்றி மகன் மது போதையில் இல்லை என மோசடியாக மருத்துவர்கள் மூலம் சான்று பெற்றுள்ளார். இந்த விவகாரத்தில் இரண்டு மருத்துவர்கள் ஏற்கனவே சிக்கிய பின்னர் கைதாகி உள்ளனர். சிறுவனின் 17 வயதைக் காரணம் காட்டி ஜாமீனில் வெளியே வந்த "மது விரும்பிச் சிறுவன்", ஏற்கனவே தன் விவகாரத்தில் அப்பனையும்,தாத்தாத்தாவையும் ஜெயிலுக்கு அனுப்பி வைத்து விட்டான்.
இப்போது மேலும் இரண்டு டாக்டர்கள் உள்ளே போன நிலையில், தாயாரையும் அனுப்பப் போகிறான்.
இந்தச் சுவரு இன்னும் எத்தனை பேரைக் காவு வாங்கப் போகிறதோ தெரியவில்லையே என பலரும் பேசும் நிலை.
கருத்துகள்