வடலூரில் வள்ளலார் சர்வதேச மையம் அமையவுள்ள இடத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.
கடலூர் மாவட்டம் வடலூரில் பழங்காலக் கட்டடங்கள் உள்ளதா என ஆய்வு செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மூவர் கொண்ட தொல்லியல் துறை ஆய்வுக் குழு அமைக்கப்பட்டதையடுத்து, சத்திய ஞான சபை முன்பு பெருவெளியில் தோண்டப்பட்ட பள்ளத்தில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மறுபுறம், கடலூர் மாவட்டம் வடலூர் சத்திய ஞானசபையின் பெருவெளியில் வள்ளலார் பன்னாட்டு மையத்தை அமைப்பதற்கு பக்தர்களும், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தினரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்