தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சிஎஸ்சி மின் ஆளுகை சேவைகள் இந்தியா நிறுவனம் ஆகியவை பொது சேவை மையங்கள் மூலம் மின்னணு குடியேற்ற சேவைகளை வழங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன
மத்திய அரசின் வெளியுறவு அமைச்சகம், தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் சிஎஸ்சி மின் ஆளுமை சேவைகள் இந்தியா நிறுவனம் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
இமைகிரேட் எனப்படும் திட்டம் முக்கியமாக குடியேற்ற சோதனை தேவைப்படும் (ECR) நாடுகளுக்குச் செல்லும் தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இடப்பெயர்வு குடியேற்ற செயல்முறையை இணையதளம் மூலம் தடையற்ற வகையில் வழங்க இது வகை செய்கிறது. இதன் மூலம் புலம்பெயரும் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும். வெளிநாட்டு நிறுவனங்கள், பதிவுசெய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் பாதுகாப்பான மற்றும் சட்டப்பூர்வ குடியேற்றத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மின்னணு தொழில் அமைச்சகத்தின் இணைச் செயலாளர் மற்றும் நிதி ஆலோசகர் திரு ராஜேஷ் சிங் முன்னிலையில், இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் வெளியுறவு அமைச்சகத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் மற்றும் இடப்பெயர்வுப் பிரிவு இணைச் செயலாளர் திரு பிரம்மா குமார், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிகவ் பிரிவு இணைச் செயலாளர் திரு சங்கேத் போன்ட்வே, சிஎஸ்சி மின் ஆளுகை சேவைகள் நிறுவனத்தின் தலைமைச் செயல்பாட்டு அதிகாரி திரு அக்ஷய் ஜா ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, பொதுச் சேவை மையங்கள் மூலம் மக்களுக்கு மின்னணு இடப்பெயர்வு சேவைகளை வழங்குவதற்காக வெளியுறவு அமைச்சகத்தின் மின்னணு இடப்பெயர்வு இணையதளம், பொதுச் சேவை ஆணையத்தின் இணையதளத்துடன் ஒருங்கிணைக்கப்படும்.
கருத்துகள்