இந்தியத் தர நிர்ணய அமைவனம் (பிஐஎஸ்), ஹேபிடேட் ஃபார் ஹுமானிட்டி இன்டர்நேஷனலுடன் ஒருங்கிணைந்து சென்னையில் எம்-சாண்ட் உற்பத்தியாளர்களுக்கான பிஐஎஸ் குறித்த பயிலரங்கை இன்று ஏற்பாடு செய்துள்ளது
இந்தியத் தர நிர்ணய அமைவனம் - சென்னை கிளை அலுவலகம், ஹேபிடேட் ஃபார் ஹ்யூமனிட்டி இன்டர்நேஷனலுடன் ஒருங்கிணைந்து, எம்-சாண்ட் உற்பத்தியாளர்களுக்கு பிஐஎஸ் தரச்சான்றிதழ் பற்றிய பயிலரங்கை இன்று (28.05.24) சென்னையில் நடத்தியது.
இந்தியத் தர நிர்ணய அமைவனத்தின் துணைத்தலைமை இயக்குநர் திரு யுஎஸ்பி யாதவ், இந்தப் பயிலரங்கில் பங்கேற்பாளர்களுக்கு [உற்பத்தியாளர்களுக்கு] ஐஎஸ் 383-ன் பல்வேறு தேவைகள், உற்பத்தியாளர்களால் அமைக்கப்பட வேண்டிய சோதனை வசதிகள், ஆன்லைன் மூலம் சமர்ப்பிப்பதற்கான நடைமுறை பற்றி விளக்கமளிக்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் எம்-சாண்ட் உற்பத்தியாளர்கள் பிஐஎஸ் சான்றிதழ் பெறுவதைக் கட்டாயமாக்கும் எம்-சாண்ட் கொள்கை 2023- ஐ தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் கூறினார்.
பிஐஎஸ் சென்னை கிளை அலுவலகத் தலைவர் மற்றும் இயக்குநர் திருமதி ஜி. பவானி தனது உரையில், நாட்டில் தரமான சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகள், தொழிற்சாலைகள், ஆய்வகங்கள் உள்ளிட்ட பல்வேறு பங்குதாரர்களுக்கு இந்தியத் தரநிலைகள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை இந்தியத் தர நிர்ணய அமைவனம் நடத்துகிறது என்றும், தரப்படுத்தல் மற்றும் தர அமைப்புகளுக்கான தமிழ்நாடு அளவிலான குழுவின் முக்கிய நிகழ்ச்சி நிரலாகவும் இது உள்ளது என்றும் அவர் தெரிவித்தார் .
திரு தினேஷ் ராஜகோபாலன், திருமதி எஸ் திவ்யா ஆகியோர் தொழில்நுட்ப அமர்வுகளை நடத்தினர்.
ஹேபிடேட் ஃபார் ஹ்யூமனிட்டி இன்டர்நேஷனலின் டெர்வில்லிகர் மையத்தின் இயக்குநர் திரு அனூப் நம்பியார், மூத்த தொழில்நுட்ப ஆலோசகர் திரு தீபக் விஸ்வநாதன், மேலாளர் [சந்தை அமைப்பு மற்றும் தொழில்முனைவு] திரு கே ஷியாம் சந்தர் ஆகியோர் பங்கேற்பாளர்களுடன் உரையாற்றினர்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 75 எம்-சாண்ட் உற்பத்தியாளர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
கருத்துகள்