2024 வசந்த கால பயிற்சி நிறைவு அணிவகுப்பு எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் நடைபெற்றது: அணிவகுப்பை விமானப்படை தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர். சௌத்ரி பார்வையிட்டார்
106வது இந்திய கடற்படை அகாடமி பயிற்சித்திட்டம், 36 மற்றும் 37வது கடற்படை சிறப்பு நிலைப் பயிற்சி (நீட்டிக்கப்பட்டது), 38வது கடற்படை சிறப்பு நிலை பயிற்சித் திட்டம் மற்றும் கடலோர காவல்படை மற்றும் வெளிநாட்டு கடற்படையினருக்கான 39வது பயிற்சித் திட்டம் ஆகியவற்றின் பயிற்சி நிறைவு தேர்ச்சி அணிவகுப்பு இன்று (25 மே 2024) எழிமலாவில் உள்ள இந்திய கடற்படை அகாடமியில் நடைபெற்றது. அணிவகுப்பை விமானப் படைத் தளபதி ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர்.சௌத்ரி பார்வையிட்டார். 34 பெண் பயிற்சியாளர்கள் மற்றும் நட்பு நாடுகளைச் சேர்ந்த 10 பேர் உட்பட 216 பயிற்சியாளர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று அணிவகுப்பில் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் தெற்கு கடற்படை கட்டளையின் கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் வி ஸ்ரீனிவாஸ் மற்றும் கடற்படை அகாடமியின் கொடி அதிகாரி வைஸ் அட்மிரல் வினீத் மெக்கார்டி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் கடற்படை பாரம்பரிய முறைப்படி அணிவகுத்துச் சென்றனர். தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் பதக்கம் வென்றவர்களை விமானப் படைத் தலைவர் பாராட்டினார். அணிவகுப்பு நிறைவடைந்ததும், உயர் அதிகாரிகள், தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களுடன் கலந்துரையாடினர்.
38வது கடற்படை சிறப்பு நிலை பாடத் திட்டம் (NOC-என்ஓசி) என்பது 44 வாரங்கள் மேம்படுத்தப்பட்ட பயிற்சிக் காலத்தைக் கொண்ட பாடத் திட்டமாகும். நிர்வாகப் பிரிவில் 5 பெண் அதிகாரிகளும் உள்ளனர். இது இந்திய கடற்படையில் பாலின சமத்துவத்திற்கான ஒரு மைல்கல்லாக அமைந்துள்ளது.
கருத்துகள்