காவல்துறை விசாரணை சம்மனுக்கு தடை கேட்டு உயர் நீதிமன்றத்தில் கேசவவிநாயகம் மனு
திருநெல்வேலி இரயிலில் கைப்பற்றப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தொடர்பாக விசாரணை நடத்த பாரதிய ஜனதா கட்சியின் அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்திற்கு காவல்துறை சம்மன் அனுப்பிய நிலையில், சம்மனுக்கு தடை விதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் கேசவ விநாயகம் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில் நடைபெற்ற தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் நான்கு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும் படி தனக்கு சம்மன் அனுப்ப பட்டதாகவும், இந்த சம்மனை ரத்து செய்து, வழக்கின் விசாரணைக்குத் தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கும், தனக்கும் எந்த விதமான தொடர்புமில்லை எனத் தெரிவித்துள்ள கேசவ விநாயகம், தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் பெயருக்கும், தனது நற்பெயருக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் அரசியல் உள்நோக்கத்துடன் நடத்தப்படும் புலன் விசாரணையே சட்டவிரோதமானதெனவும் கேசவ விநாயகம் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். சென்னை உயர்நீதிமன்றத்தில் CRLOP/12574/2024 மற்றும் CRL MP/7814/2024 - F.I.R. QUASH. KESAVA VINAYAGAM Vs THE STATE REPRESENTED இந்த மனு மீதான விசாரணை விரைவில் நீதிபதி சரவணன் முன் விசாரணைக்கு வர உள்ளது. இதில் கேசவ விநாயகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் பால் கனகராஜன் ஆஜராகிறார்
கருத்துகள்