தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப் 1 தேர்வு மூலம் தேர்வான 95 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் வழங்கினார்
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 1- தேர்விலடங்கிய துணை ஆட்சியர்கள், காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் உள்ளிட்ட பலவிதமான பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 95 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
அது குறித்து தமிழ்நாடுஅரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு,கடந்த 3 ஆண்டுகளாக டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட தேர்வு முகமைகள் மூலம் 32,774 பேர், அரசுத் துறை நேரடி நியமனம், உள்ளாட்சி அமைப்புகள் மூலம் 32,709 பேர் என மொத்தம் 65,483 பேருக்கு பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலம் குரூப்-1 பணிகளில் 21 துணை ஆட்சியர்கள், 26 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 25 உதவி ஆணையர்கள் (வணிக வரி), 13 கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர்கள், 7 உதவி இயக்குநர்கள் (ஊரக வளர்ச்சி), 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர்கள் என மொத்தம் 95 நபர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குரூப் 1 தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 95 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதல்வர்
, .
முதல்வருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து, புதிதாக பணி நியமனம் பெற்றவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா அறிமுகம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில்
அமைச்சர் தங்கம் தென்னரசு, மனித வள மேலாண்மைத் துறைச் செயலாளர் க.நந்தகுமார் ஆஙியோர் உடனிருந்தனர். பணி
நியமன ஆணை பெற்ற பயிற்சி அலுவலர்களுக்கு சென்னை அண்ணா நிர்வாகப் பணியாளர்கள் பயிற்சிக் கல்லூரியில் ஜூலை மாதம் 1-ஆம் தேதி முதல் அடிப்படைப் பயிற்சி தொடங்கப்பட உள்ளது.
கருத்துகள்