உத்தரப்பிரதேச மாநிலத்தில் சில தொழிலதிபர்கள் இல்லாத நிறுவனங்களை இருப்பது போல போலியாகக் கணக்குக் காட்டி, இ-வே பில்களை உருவாக்கி மத்திய அரசின் உள்ளீட்டு வரிச்சேவையில் சலுகைகள் வாங்கிய நிலையில் அரசுக்கு ரூபாய் பத்தாயிரம் கோடிக்கு மேல் இழப்பு ஏற்படுத்தியிருப்பதாகப் புகார்கள் வந்தன
அது குறித்து சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு செய்யும் அலுவலர்கள் சார்பில் உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டா காவல் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன் புகார் அளிக்கப்பட்டதையடுத்து, நொய்டா காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில், இராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி என பல்வேறு மாநிலத்தின் பகுதிகளைச் சேர்ந்த தொழிலதிபர்கள் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளது தெரிந்ததையடுத்து அந்த மாநிலங்களைச் சேர்ந்த 45 பேர் கடந்த சில மாதங்களாகவே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது கோயம்புத்தூர் வசித்து வரும் வெளி மாநில மார்வாடி வீட்டுப் பெண் ரூபாய்.14 கோடி ஜி.எஸ்.டி மோசடி செய்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோயம்புத்தூர் ரேஸ்கோா்ஸ் பகுதியில் வசிக்கும் சுகன்யா (வயது 40). இவர் கணவர் பிரபு டெல்லி அருகில் நொய்டாவில் இயந்திரங்கள் தொடா்பான நிறுவனம் நடத்தி வந்தாா். இதனிடையே, நொய்டாவில் சுமாா் 1,000 போலி நிறுவனங்களை உருவாக்கி, அதன் மூலம் உத்தரப்பிரதேச மாநிலத்துக்கு கடந்த நிதியாண்டில் ரூபாய் பத்தாயிரம் கோடி வரை ஜிஎஸ்டி இழப்பீடு ஏற்பட்டதாக மாநில குற்றத்தடுப்பு நடவடிக்கை பிரிவுக்கு முதலில் வந்த ரகசிய தகவல்
-ADVERTISEMENT-கடந்தாண்டு ஜூன் மாதம் முதல் இதுகுறித்த வழக்கினை பதிந்து நொய்டா காவல் நிலையத்தில் விசாரித்தனர். அதாவது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களை உருவாக்கி, போலியாக "இ-வே" பில் தயாரித்தும், உள்ளீட்டு வரிச் சலுகை(ஐடிசி) பெற்று மோசடி நடந்துள்ளதையடுத்து டெல்லி, நொய்டா, காஜியாபாத், சிா்ஸா, ஜெய்பூா் போன்ற பகுதிகளை சோ்ந்த 45 போ் ஏற்கனவே கைது செய்யப்பட்டு, அவர்களிடம் விசாரணையும் நடத்தப்பட்டபோது. தான் இதில் முக்கிய நபராக கோயம்புத்தூர் பகுதியில் வசிக்கும் சுகன்யாவின் பெயரும் கண்டு பிடித்தனர் சுகன்யா நடத்தி வரும் நிறுவனத்திலும் ரூபாய்14.5 கோடி வரி ஏய்ப்பு நடந்திருப்பது அலுவலர்களுக்குத் தெரிந்தது, ஆனால் அதற்குள் விபரம் தெரிந்து சுகன்யா தலைமறைவாக இருந்ததனால் அவா் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய முடியாத நிலையில் சுகன்யா எங்கிருக்கிறார் என்றே கண்டுபிடிக்க முடியாத உத்தரப்பிரதேச மாநிலக் காவல் துறை கடந்த ஜூன் மாதம் 1ஆம் தேதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டதுஅறிவிப்பு: அந்த அறிவிப்பில், சுகன்யா பிரபு குறித்த தகவல்கள் அல்லது அவரை கண்டுபிடித்து தருவோருக்கு ரூ.25 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது.
இதனிடையே, சுகன்யா கோவையில் உள்ள அவரது வீட்டில் பதுங்கியிருப்பதாக உத்தரப்பிரதேச மாநில போலீஸாருக்கு தகவல் கிடைக்கவும், உடனடியாக வந்த உத்தரப்பிரதேச போலீஸாா் கோவைக்கு விரைந்து வந்தனர்.. ரேஸ்கோா்ஸ் போலீஸாரின் ஒத்துழைப்புடன் சுகன்யா பிரபுவை கைது செய்து நொய்டா அழைத்து சென்றுள்ளனர்.இதுகுறித்து கோவை மாநகர போலீசார் சொல்லும்போது, "கடந்த, 22ம் தேதி நொய்டா போலீசார் 4 பேர் கோவை வந்திருந்தனர்.. ரேஸ்கோர்ஸில் உள்ள அபார்ட்மென்ட் ஒன்றில் தங்கியிருந்த சுகன்யாவை கைது செய்து, நொய்டா கொண்டு சென்றனர். அவரது கணவர் பிரபுவையும் தேடிவருகின்றனர்" என்றனர்.சுகன்யா கோவையில், உலோகம் தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வந்திருக்கிறார்
கோயம்புத்தூர் பகுதியில் வசிக்கும் பெண்ணை அவரது சொந்த ஊரான உத்தரபிரதேச மாநிலத்தில் கைது செய்துள்ளனர்.
-ADVERTISEMENT-
இத்தனை கோடி மோசடியில் கோயம்புத்தூர் பகுதியில் ஒரு வடமாநில பெண் கைதாகியிருப்பது அந்தப் பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
கருத்துகள்