பிரதமர் நரேந்திர மோடி இன்று குடியரசுத்தலைவரைச் சந்தித்து ராஜினாமா கடிதத்தை வழங்கினார்
பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று குடியரசுத்தலைவரை சந்தித்து அமைச்சரவையுடன் சேர்த்து தமது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட குடியரசுத்தலைவர் புதிய அரசு பொறுப்பேற்கும் வரை திரு நரேந்திர மோடியையும் அவரது அமைச்சர்களையும் பொறுப்பில் நீடிக்குமாறு கேட்டுக் கொண்டார்.மத்திய அமைச்சரவை ஆலோசனையை ஏற்று 17-வது மக்களவையைக் கலைப்பதற்கு குடியரசுத்தலைவர் உத்தரவு பிறப்பித்தார்
05.06.2024 அன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம், 17-வது மக்களவையை உடனடியாக கலைக்குமாறு குடியரசுத்தலைவருக்கு ஆலோசனை வழங்கியது.
அமைச்சரவையின் ஆலோசனையை 05.06.2024 அன்று ஏற்றுக் கொண்ட குடியரசுத்தலைவர், அரசியல் சட்டத்தின் 85-வது பிரிவின் 2(பி) அளித்துள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி 17-வது மக்களவையைக் கலைப்பதற்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.
கருத்துகள்