கல்வராயன் மலை விஷ கள்ளச்சாராயச் சாவுகள் எதிரொலி கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பணியிடமாற்றம், காவல்துறை கண்காணிப்பாளர் தற்காலிகப் பணியிடை நீக்கம்.
CBCID விசாரணைக்கு மாற்றி முதல்வர் உத்தரவு. விஷ கள்ளச்சாராயச் சாவுகள் அதிகரித்து வரும் நிலை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஐத் தாண்டியிருப்பதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
அந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. 90-க்கும் மேற்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துமனை மற்றும் புதுச்சேரி ஜிப்மர் உள்ளிட்ட பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். கள்ளக்குறிச்சி மருத்துமனையில் சிகிச்சைப் பெற்று வருபவர்களை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் மற்றும் எ.வ.வேலு சந்தித்து ஆறுதல்
80 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 10 பேரின் நிலைமை மேலும் கவலைக்கிடம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் விஷ கள்ளச்சாராயம் மூலம் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 33-ஆக உயர்ந்திருக்கும் நிலையில்
ஏற்கனவே 8 பேர் உயிரிழந்த நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மூவரும், முண்டியம்பாக்கம், சேலம் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தவர்கள் என 33 பேர் உயிரிழந்திருக்கிறார்கள்.
மேலும், 90-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சுகாதாரத்துறை அமைச்சர், அதிகாரிகள் உடனடியாக களத்திற்கு விரைவு
மரக்காணம், மதுராந்தகம் பகுதிகளில் கள்ளச்சாராயத்துக்கு 23 உயிர்களைப் பறிகொடுத்த ஒரே ஆண்டில் மற்றுமோர் கொடுமை நிகழ்ந்திருப்பது பேரதிர்ச்சியாகிறது!
புதிய ஆட்சியர் மற்றும் எஸ்.பி நியமனம்:
கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக எம்.எஸ்.பிரசாந்த்நியமனம்.
புதிய மாவட்டக் காவல்துறை கண்காணிப்பாளராக ரஜத்சதுர்வேதி நியமனம். கள்ளச்சாராயம் குடித்து விட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை, பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனை ஆகியவற்றில் 40 நபர்கள் சிகிச்சைக்காக அனுமதி. இந்த பரபரப்பில் அங்கு சிகிச்சைக்கு வரும் பொதுமக்கள் எவ்வளவு சிரமங்களை அனுபவிப்பார்கள் என்பதை யாரும் உணருவதாக தெரியவில்லை. மாறாக இவர்களுக்கு நஷ்ட ஈடு தர கோரிக்கை வைக்கிறார்கள்.
தெருவுக்கு ஒரு டாஸ்மாக் கடை காவல்துறை பாதுகாப்போடு இயங்கி கொண்டிருக்கும போது, கள்ளச்சாராயம் குடிக்க வேண்டிய அவசியம் என்ன? அதுவும் குடும்பம், குடும்பமாக! இதுவரை இறந்துள்ள 33 நபர்களில் குறைந்தபட்சம் இந்திரா, வடிவு என்ற இரு பெண்களும் அடக்கம்.
இவர்கள் வாரிசுகளுக்கு அரசு பணி அளிக்க வேணடும் என கோரிக்கை வேறு . இரண்டு கள்ளச்சாராய வியாபாரிகள் கைது செய்யப் பட்டுள்ளனர். மிக விரைந்து நடவடிக்கை எடுத்துள்ள தமிழ்நாடு காவல்துறைக்கு பாராட்டுதல்கள். இதை எழுதுவதற்குள் பலி எண்ணிக்கை 33 ஆக உயர்ந்து விட்டதாகத் தகவல்.
சமீபத்தய தொலைக்காட்சி தகவல் படி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 90.
இது விஷ கள்ளச்சாராய சாவுதானா என உடற்கூறு ஆய்வுக்குப் பின்தான் தெரியும் என ஒரு அரசு மருத்துவ அலுவலர் சொல்கிறார். கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை
மாமுல் வாங்கிக் கொண்டு குற்றங்களைத் நடக்க அனுமதிப்பவர்களை பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து சிறைத் தண்டனைக்கும் உள்ளாக்காதவரை, இதற்கெல்லாம் முடிவே கட்ட முடியாது.
ரமணா படத்தில் வருகிற மாதிரி, அவ்வளவு பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பு இடிந்து விழுந்து ஏராளமானபேர் பலியாவதற்கு மூல காரணம் வெறும் 30 ரூபாய் லஞ்சம் தான் என்பது போலத்தான்,
எல்லா பயங்கரங்களுக்கும் பின்னணியாக சட்டவிரோதக் காரியம் சிறியதாகத்தான் இருக்கும்.
சட்டம் எப்போதுமே பிரச்சனை இல்லை. அதை பாரபட்சம் இல்லாமல் கடுமையோடு அமல்படுத்துவதில் தான் பிரச்சனையே..
அதற்கு ஒரு உதாரணம்..
மாநில அரசாங்க கட்டிட சுவர்களின் மீது கண்ட விளம்பரங்களை கண்டவர்களும் எழுதுவார்கள். ஆனால் மிலிட்டரி சுவர் பக்கம் போக மாட்டார்கள்..ஆரம்பத்தில் அப்படி இல்லை இப்படி இல்லை, அது கிடையாது இது கிடையாது என்றெல்லாம் அரசு தரப்பில் சொல்லப்பட்டு
தற்போது நிலைமை இந்த அளவுக்கு பயங்கரமான நிலைமையில் வந்து நிற்கிறது.
பாதிக்கப்பட்ட ஏராளமானோருக்கு தொடர்ந்து பல்வேறு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை. பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நிலையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவைச் சேர்ந்த, காவல் துறை துணைக் கண்காணிப்பாளர் தமிழ்செல்வன், கள்ளக்குறிச்சி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் கவிதா, திருக்கோவிலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் பாண்டிசெல்வி, திருக்கோவிலூர், உதவி காவல் ஆய்வாளர் மற்றும் அப்பகுதி காவல் நிலைய ஆய்வாளர் ஆனந்தன், உதவி ஆய்வாளர் ஷிவ்சந்திரன், காவல் நிலைய எழுத்தர் பாஸ்கரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மனோஜ், காவல் துணை கண்காணிப்பாளர், திருக்கோவிலூர் ஆகியோரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முதலமைச்சர் இவ்வழக்கினை தீர விசாரிக்கவும், தக்க மேல்நடவடிக்கைக்காகவும், உடனடியாக சிபிசிஐடி வசம் ஒப்படைக்க ஆணையிட்டுள்ளார்.
கருத்துகள்