குடும்ப நுகர்வு செலவு கணக்கெடுப்பு 2022-23 குறித்த தரவு பயனர் மாநாடு 19ந் தேதி புதுதில்லியில் நடைபெற உள்ளது
தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் , புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், 1950 இல் நிறுவப்பட்டதிலிருந்து குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்புகளை தொடர்ந்து நடத்தி வருகிறது. சமீபத்தில், ஆகஸ்ட் 2022 முதல் ஜூலை 2023 வரை இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த ஆய்வு குடும்ப மாதாந்திர தனிநபர் நுகர்வு செலவு, கிராமப்புற மற்றும் நகர்ப்புற துறைகள், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மற்றும் பல்வேறு சமூக-பொருளாதார குழுக்களில் அதன் விநியோகம் குறித்த மதிப்பீடுகளை உருவாக்குகிறது. இந்த ஆய்வு பிப்ரவரி24 அன்று வெளியிடப்பட்டது, மேலும் விரிவான கணக்கெடுப்பு முடிவுகள் மற்றும் அலகு அளவிலான தரவு ஜூன்7 அன்று வெளியிடப்பட்டது.
மேற்கண்டவற்றின் அடிப்படையில், தரவு பயனர்கள் / பங்குதாரர்களுடன் பின்னூட்டங்களுக்காக தொடர்பு மற்றும் ஈடுபாட்டை மேம்படுத்துவதற்காக ஒரு நாள் தரவு பயனர் மாநாடு, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தால் ஜூன் 19 அன்று புதுதில்லியில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில், பல்வேறு முக்கிய கருத்துகள், வரையறைகள், முக்கிய முடிவுகள், அலகு அளவிலான தரவு, பெருக்கிகளைப் பயன்படுத்துதல் மற்றும் தரவு தரம் ஆகியவை வழங்கப்படும், அதைத் தொடர்ந்து கேள்விகளுக்கு பதிலளிக்கவும் நுண்ணறிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும் திறந்த விவாதம் நடைபெறும்.
பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் டாக்டர் பிபேக் டெப்ராய் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். இந்த மாநாட்டில் தேசிய புள்ளியியல் ஆணையத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள், தேசிய மாதிரி கணக்கெடுப்பின் வழிகாட்டுக் குழு, புள்ளியியல் நிலைக்குழு, திட்ட செயலாக்க அமைச்சகம் மற்றும் இதர மத்திய அமைச்சகங்கள்/துறைகளின் அதிகாரிகள், பல்வேறு சர்வதேச அமைப்புகளின் அதிகாரிகள், புகழ்பெற்ற நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சி அறிஞர்கள் உள்ளிட்ட உயர் பிரமுகர்களும் பங்கேற்கின்றனர். தரவு பயனர்கள் திறந்த பதிவு மூலமாகவும் மாநாட்டிற்கு பதிவு செய்யலாம். தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பாளர்களுக்கு உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும். மாநாட்டில் நேரடியாக பங்கேற்க முடியாதவர்கள் யூடியூபில் மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்படுகிறார்கள்.
திறந்த பதிவுக்கான இணைப்புகள்:
https://www.mospi.gov.in/announcements/data-user-conference-household-consumption-expenditure-survey-hces-be-held-19062024-le
கருத்துகள்