திருச்சிராப்பள்ளி மாவட்டம், லால்குடி அருகில் தாளக்குடி உள்ளிட்ட கொள்ளிடம் ஆற்றுப் படுகையின்
கரையோரப் பகுதிகளில் தினமும் சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவதற்குநம்பர் - 1 டோல்கேட், கொள்ளிடம் காவல்துறை காவலர்கள் உடந்தையாக உள்ளனரென, பல இதழ்களில் செய்தி வெளியிடப்பட்டது குறித்து விசாரணை நடத்த, திருச்சிராப்பள்ளி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎல் உத்தரவிட்டார். விசாரணையில், கொள்ளிடம் காவலர்கள் மணல் கடத்தல்காரர்களிடம் தொடர்பிலிருந்ததும், அவர்கள் மாமூல் வாங்கிய பிறகு பங்கிட்டுக் கொண்டதும் தெரிய வந்ததையடுத்து,
கொள்ளிடம் காவல்நிலையத்தில் பணியாற்றிய 23 காவலர்களில், சார்பு ஆய்வாளர் மணிகண்டன் தவிர, 22 காவலர்களை நேற்று முன்தினம் இரவு ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் ஐபிஎஸ் உத்தரவிட்டார். இது, திருச்சிராப்பள்ளி மாவட்டக் காவல்துறையினர் மத்தியில் ஒரு எச்சரிக்கை உணர்வையும், ஊழலுக்கு எதிரான பயத்தை ஏற்படுத்திரயுள்ளது என்பது உண்மை.
கருத்துகள்