சென்னை விமான நிலைய சுங்கத்துறையின் புலனாய்வுப் பிரிவு ரூ.3.19 கோடி மதிப்புள்ள 6,168 கிராம் 24 கேரட் தங்கத்தைப் பறிமுதல் செய்தது; 5 பயணிகள் கைது செய்யப்பட்டனர்
சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த உளவுத் தகவலையடுத்து துபாயில் இருந்து சென்னை வந்த 5 பயணிகளை இடைமறித்து சோதித்த போது அவர்களிடமிருந்து 6 தங்கச் சங்கிலிகளையும், 10 பொட்டலங்களில் தங்கப் பசையையும் 7 தங்கக் கட்டிகளையும் பறிமுதல் செய்தனர்.
ரூ.3.19 கோடி மதிப்புள்ள 6,168 கிராம் 24 கேரட் தங்கத்தைப் பறிமுதல் செய்ததையடுத்து பயணிகள் 5 பேரும் கைது செய்யப்பட்டனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
கருத்துகள்