ரூபாய்.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மின்வாரிய உதவி மின் பொறியாளா் கைது.
பல்லடத்தில் மின் இணைப்பு வழங்க ரூபாய் .5 ஆயிரம் லஞ்சம் பெற்ற மின்சார வாரியத்தின் உதவி மின் பொறியாளரை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் புதன்கிழமை கைது செய்தனா்.
பல்லடம் அண்ணா நகா் பகுதியில் வசிக்கும் பைஜ் அகமது. இவரது வீட்டுக்கு மின் இணைப்புப் பெற பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் பதிவு செய்து விண்ணப்பித்துள்ளாா்.
மின் இணைப்பு வழங்க பல்லடம் மின்சார வாரியத்தின் உதவி மின் பொறியாளா் சுரேஷ்பாபு ரூபாய்.5 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளாா். கொடுக்க விரும்பாத பைஜ் அகமது ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாா் தெரிவித்ததையடுத்து, அவா்களது அறிவுரையின் படி புகார் தாரர் கொண்டு வந்த ரூபாய் பினாப்தலின் ரசாயனப் பொடி அரசு சாட்சிகள் முன்பு தடவிய பின் ரூபாய் நோட்டுகளை கொடுத்த பின் பைஜ் அகமது அதைப் பெற்று சுரேஷ்பாபுவிடம்கொடுத்துள்ளாா்.
அப்போது, அங்கு மறைந்திருந்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையின் ஆய்வாளா் சசிலேகா தலைமையிலான குழுவினர் சுரேஷ்பாபுவை லஞ்சம் பெற்ற கையுடன் பிடித்தனா்.
அதையடுத்து, அவரைக் கைது செய்த ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர், தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்