திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி சட்ட மன்றத் தொகுதியில்
புதிய பேருந்து நிலையம், புதிய வட்டாட்சியர் அலுவலகம் மற்றும் சார் பதிவாளர் அலுவலகக் கட்டடம் கட்டுவதற்கான இடங்களை மாவட்ட அலுவலர்கள் ஆய்வு செய்தனர். ஆனால் இந்த ஆய்வில் லால்குடி தொகுதி சட்டசபை உறுப்பினர் என்ற முறையில் சவுந்திரபாண்டியன் பங்கேற்கவில்லை.
அது தொடர்பான புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வெளியானதில் யார் யார் கலந்து கொண்டனர் என்பதெல்லாம் தெரிய வந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சிக்கு தன்னை அழைக்கவில்லை என்ற காரணத்தால் லால்குடி சட்ட மன்ற உறுப்பினர் சவுந்திரபாண்டியன் தான் இறந்துவிட்டதாக ஒரு செய்தி பதிவிட்டுள்ளார். முகநூல் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் லால்குடி சட்டமன்ற தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஆக இருக்கக்கூடிய சௌந்தர பாண்டியன் இயற்கை எய்தி விட்டதால் அந்த தொகுதி காலியான இடமாக அறிவிக்கப்பட்டுள்ளது என பதிவிட்டுள்ளது அது திமுகவினரிடமும் மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது காரணம் அமைச்சர் கே.என்.நேருவுக்கும் இவருக்கும் நடக்கும் பயணிப்போர் என்பதாக பேசப்படுகிறது.
கருத்துகள்