ரூபாய்.38.85 கோடி குத்தகை நிலுவைத் தொகையை எஸ்.ஆர்.எம். நட்சத்திர ஹோட்டல் இதுவரை செலுத்தவில்லை என
தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்தது..! SRM ஹோட்டல், திருச்சிராப்பள்ளி & TTDC இடையில்
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியரால் 30 ஆண்டுகளுக்கான குத்தகைத் தொகை ரூ.47.93 கோடி என நிர்ணயிக்கப்பட்டு அனுபந்தம், மற்றும் விரைவு நிபந்தனைகள் போடப்பட்ட நிலையில், எஸ்.ஆர்.எம். நட்சத்திர ஹோட்டல் நிறுவனம் ரூபாய்.9.08 கோடி மட்டுமே இதுவரை செலுத்தியுள்ளதாக தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தெரிவித்துள்ளது.திருச்சிராப்பள்ளியில் எஸ்.ஆர்.எம் நட்சத்திர ஹோட்டல் காஜாமலை அண்ணா விளையாட்டு அரங்கம் அருகில் தமிழ்நாடு சுற்றுலாத் துறைக்குச் சொந்தமான இடத்தில் 1994 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வந்தது. இந்த நட்சத்திர ஹோட்டலை இந்திய ஜனநாயக கட்சியின் நிறுவனரான பச்ச முத்து உடையார் எனும் பாரிவேந்தர் குத்தகைக்கு எடுத்து நடத்தி வந்தார் இந்த ஹோட்டல் 30 ஆண்டுகளுக்கு குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டது.
- விளம்பரம் -ஆண்டுக்கு 75 லட்ச ரூபாய் குத்தகைப் பணம் செலுத்தப்பட்டு வருவதாகச் சொல்லப்படுகிற நிலையில், எஸ்ஆர்எம் ஹோட்டலுக்கு கடந்த வியாழக்கிழமையுடன் ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், சுற்றுலாத்துறை அலுவலர்கள் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி ஆகியோர் ஹோட்டலுக்கு நேரில் வந்து காலி செய்யுமாறு அறிவுறுத்தியதன் பின்னர்
ஹோட்டலை நகர் காவல் துறை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. தொடர்ந்து ஹோட்டலில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவரது கட்சியினரை உடனடியாக வெளியேறும் படி அறிவுறுத்தியதற்கு எதிர்ப்புத் தெரிவித்த எஸ்ஆர்எம் குழுமம், தற்போது ஹோட்டலில் வெளிநாட்டுப் பயணிகள் மற்றும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தங்கியுள்ளதகாவும், அனைவருக்கும் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றனர். உடனடியாகக் ஹோட்டலை காலி செய்ய முடியாது. கால அவகாசம் வேண்டும். குறைந்தபட்சம் ஒரு மாதம் கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர். எனினும் நேற்று வரை தான் அவகாசம் வழங்கப்பட்டது.
இந்த விவகாரத்தில் பச்சை முத்து உடையார் என்ற பாரிவேந்தருக்கு ஆதரவாக அதன் தேர்தல் கூட்டணிக் கட்சித் தலைவர்களான பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் அவருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டனர். பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் : "திருச்சியில் எஸ்.ஆர்.எம் நிறுவனத்தால் குத்தகை அடிப்படையில் நடத்தப்பட்டு வரும் எஸ்.ஆர்.எம் ஹோட்டலை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிகிறது.
-விளம்பரம்-இது தவிர்க்கப்பட வேண்டும். தமிழக அரசின் குத்தகை நிபந்தனைகளுக்கு உட்பட்டு கடந்த 30 ஆண்டுகளாக இந்த விடுதி நடத்தப்பட்டு வருகிறது. எஸ்.ஆர்.எம் ஹோட்டலை மூடக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தடை விதித்தும் குத்தகைக் காலம் முடிவடைவதற்கு முன்பாகவே அதை தமிழக அரசு மூட நினைப்பது எந்த வகையிலும் நியாயமல்ல.
அண்மையில் நடந்த மக்களவைத் தேர்தலில் அமைச்சர் கே.என்.நேருவின் புதல்வரை எதிர்த்து எஸ்.ஆர்.எம் குழுமத் தலைவர் போட்டியிட்டது தான் அரசின் முடிவுக்கு காரணம் என்று கூறப்படுகிறது. இதை அரசியல் பழிவாங்கும் செயலாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. இத்தகைய பழிவாங்கும் செயல்கள் கூடாது. ஒரு புறம் சுற்றுலா வளர்ச்சி, தொழில் வளர்ச்சி என்று பேசிக் கொண்டு, இன்னொரு புறம் சுற்றுலா வளர்ச்சிக்காக செயல்படும் எஸ்.ஆர்.எம். ஹோட்டலை மூட நினைப்பது சரியான செயலல்ல.
அரசியலை அரசியலாகப் பார்க்க வேண்டும்; வணிகத்தை வணிகமாக பார்க்க வேண்டும். எஸ்.ஆர்.எம் ஹோட்டலை மூடவோ, இடிக்கவோ அரசு முயற்சி செய்யக் கூடாது. குத்தகை விதிகளுக்கு உட்பட்ட எஸ்.ஆர்.எம் ஹோட்டலை தொடர்ந்து நடத்த எஸ்.ஆர்.எம் நிறுவனத்தை அரசு அனுமதிக்க வேண்டும்." எனக் கூறியுள்ளார். இதில் பொது நீதி யாதெனில் 1984 ஆம் ஆண்டில் ஒரு காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஊவேரியில் மாதச் சம்பளம் பெற்ற கணித ஆசிரியர் பச்சமுத்து இவர் இன்று காட்டாங்குளத்தூர் ஏரியை முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து ஒரு தனியார் நிகர் நிலைப் பல்கலைக்கழகம் நடந்த அதேபோல் திருச்சிராப்பள்ளி அரசு இடத்தில் ஹோட்டல் நடத்தி சம்பாதிக்க அதில் விதிமுறைகள் மீறல்கள் செய்ய அரசியல் கட்சிகள் துணைக்கு வருவது அசிங்கம் என்பது உணராமல் பல தலைவர்கள் அறிக்கை விடுவது அபத்தமான செயல் குத்தகை விதிமீறல் நடந்தால் மாவட்ட ஆட்சியர் அந்த இடத்தைக் காலி செய்வதில் தவறேதும் இல்லை. ஊரையடித்து உலையில் போடும் கூட்டமே! எப்படா அப்பா ஓயும் உங்கள் ஆட்டமே. இதுவே மக்கள் முன் எழும் வினாவாகும்.
கருத்துகள்