அமைச்சர்களாக சிவ்ராஜ் சிங் சௌகான், ராஜீவ் ரஞ்சன் சிங் (எ) லாலன்சிங், எஸ் பி சிங் பாகெல், ஜார்ஜ் குரியன்,ஜெகத் பிரகாஷ் நட்டா, அனுப்பிரியா பொறுப்பேற்றார்கள்
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராக திரு சிவ்ராஜ் சிங் சௌகான் பொறுப்பேற்றார்
மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராக திரு சிவ்ராஜ் சிங் சௌகான் இன்று பொறுப்பேற்றார். இந்த நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய திரு சௌகான், பிரதமர் திரு நரேந்திர மோடியால் நேற்று மேற்கொள்ளப்பட்ட முதல் முடிவு விவசாயிகள் நலன் சார்ந்தது என்றார்.
தேசிய ஜனநாயக கூட்டணி அரசு கடந்த 10 ஆண்டுகளில் விவசாயிகளின் நலனுக்கு உறுதிபூண்டிருந்தது என்றும், தமது அமைச்சகம் இலக்குகளை எட்டுவதற்குத் தொடர்ந்து பணியாற்றும் என்றும் அவர் கூறினார்.
அமைச்சராகப் பொறுப்பேற்ற பின் அமைச்சகத்தின் பல்வேறு அலுவலகங்களைப் பார்வையிட்ட திரு சௌகான், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட பல நிலையிலான ஊழியர்களுடனும் கலந்துரையாடினார். விவசாயிகளின் நலனுக்கான அரசின் தொலைநோக்குத் திட்டங்களை செயல்படுத்த ஓர் அணியாக செயல்படுமாறும், ஒருவரோடு ஒருவர் ஒத்துழைத்து பணியாற்றுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.
விவசாயிகள் நலன் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான அரசின் திட்ட அறிக்கையை அவர்களிடம் அளித்த அமைச்சர் இதனை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.
வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் இணையமைச்சர்களாக திரு ராம்நாத் தாக்கூரும், திரு பாகிரத் சௌத்ரியும் பொறுப்பேற்றுக்கொண்டனர்.
அமைச்சர்களை இத்துறையின் செயலாளர் திரு மனோஜ் அஹூஜா, வேளாண் ஆராய்ச்சி மற்றும் கல்வித்துறை செயலாளர் திரு ஹிமான்ஷூ பதக், அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக திரு ராஜீவ் ரஞ்சன் சிங் பொறுப்பேற்றுக்கொண்டார்
மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு, பால்வளம் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராக திரு ராஜீவ் ரஞ்சன் சிங் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார். பின்னர் செய்தியார்களிடம் பேசிய அவர், நரேந்திர மோடி அரசின் தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் கொள்கைகள் தொடர்ந்து அமல்படுத்தப்படும் என்றார்.
மத்திய மீன்வளம், கால்நடைப் பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை இணையமைச்சர்களாக திரு எஸ் பி சிங் பாகெல், திரு ஜார்ஜ் குரியன் ஆகியோரும் பொறுப்பேற்றனர்.
அமைச்சகங்களின் செயலாளர்களும், மூத்த அதிகாரிகளும் அமைச்சர்களை வரவேற்றனர்.மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சராக திரு ஜெகத் பிரகாஷ் நட்டா பொறுப்பேற்றுக்கொண்டார்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சராக திரு ஜெகத் பிரகாஷ் நட்டா இன்று புதுதில்லியில் பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தத் துறையின் இணையமைச்சர்களான திரு பிரதாப் ராவ் ஜாதவ், திருமதி அனுப்பிரியா படேல் ஆகியோர் உடனிருந்தனர்.
திரு ஜெ பி நட்டா 1975-ம் ஆண்டு அரசியலுக்கு வந்தார். 1989-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது பிஜேபி இளைஞர் பிரிவின் தேர்தல் பொறுப்பாளராக இவர் நியமிக்கப்பட்டார்.
பின்னர் அவரது சொந்த மாநிலமான இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு மூன்று முறை வெற்றிபெற்றார். அம்மாநில கேபினெட் அமைச்சராகவும் பதவி வகித்தார்.
பிஜேபி தேசிய பொதுச்செயலாளர் மற்றும் பிஜேபி நாடாளுமன்ற வாரியத்தின் உறுப்பினர் செயலாளராகவும் அவர பொறுப்பு வகித்தார். 2014 நவம்பர் முதல் 2019 மே வரை மத்திய சுகாதார அமைச்சர் பதவியில் இருந்தார்.
தற்போது சுகாதார அமைச்சக பொறுப்பேற்ற பின், நடைபெற்று வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து மூத்த அதிகாரிகள் திரு நட்டாவிடம் எடுத்துரைத்தனர்.
முன்னதாக, மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திரு அபூர்வ சந்திரா, கூடுதல் செயலாளர் திருமதி ரோலி சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் அமைச்சர் திரு நட்டாவை வரவேற்றனர்.மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை இணை அமைச்சராக திருமதி அனுப்பிரியா படேல் பொறுப்பேற்றார்
மத்திய சுகாதாரம், குடும்பநலத்துறை இணையமைச்சராக திருமதி அனுப்பிரியா படேல் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
திருமதி அனுப்பிரியா படேல் 2014, 2019, 2024-ம் ஆண்டுகளில் மிர்சாபூர் தொகுதியிலிருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 ஜூலை முதல் 2019 மே வரை சுகாதாரம், குடும்ப நலத்துறை இணை அமைச்சராகவும், 2021 ஜூலை முதல் 2024 ஜூன் மாதம் வரை வர்த்தகம், தொழில்துறை இணை அமைச்சராகவும் இருந்தார்.
திருமதி படேல் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.
மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திரு அபூர்வா சந்திரா, சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் திருமதி ரோலி சிங் உள்ளிட்ட அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மத்திய அமைச்சரை வரவேற்றனர்.
கருத்துகள்