திருவண்ணாமலை மாவட்டம் காட்டுக்கா நல்லூர் கிராமம் ராமச்சந்திரபுரம் சீனிவாசன்.
இவருடைய தாயார் கண்ணம்மாள் பெயரில் உள்ள நிலத்தின் சொத்து மதிப்புச் சான்றிதழ் அதாவது சால்வன்சி பெற்று அரசு ஒப்பந்ததாரர்களான டெண்டர்களை எடுத்து வேலை செய்து வருகிறார்.இவர் சொத்து மதிப்பு சான்றிதழ் புதுப்பிப்பு பெற ரூபாய் 20 லட்சத்திற்கு அரசிற்கு செலுத்த வேண்டிய தொகை ரூபாய் 7900 ஐ வங்கியின் மூலமாய் காசோலை எடுத்து கிராம நிர்வாக அலுவலர் மூலம் மற்றும் வருவாய் ஆய்வாளர் பரிந்துரை பெற்ற பிறகு ஆரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தலைமையிடத்துத்துணை வட்டாட்சியரின் பரிந்துரையை பெற்று 13.6.2024 ஆம் தேதி ஆரணி வருவாய் வட்டாட்சியர் மஞ்சுளாவை அணுகித் தந்துள்ளார்.அவர் ரூபாய்.20 லட்சம் சொத்து மதிப்பீட்டுச் சான்றிதழ் பெறுவதற்கு மொத்த மதிப்பில் இரண்டு சதவிதம் ரூபாய்,20,000 லஞ்சமாகக் கேட்டுள்ளார். பின்னர் அவரிடம் அவ்வளவு தொகை இல்லை என்று சொல்லவே குறைந்தது ரூபாய் பத்தாயிரம் கொடுத்தால் மட்டுமே என்னால் சான்று வழங்க முடியும் என்று திருப்பி அனுப்பி விட்டார். அவர் மிக மோசமாக பேசியதால் மனம் உடைந்த சீனிவாசன் வேறு வழி இல்லாமல் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தார் அதன் பேரில்
திருவண்ணாமலை ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை துணைக் கண்காணிப்பாளர் திருவேல் முருகன் தலைமையில் ஆய்வாளர் மைதிலி, உதவி ஆய்வாளர். கோபிநாத் மற்றும் தலைமை காவலர்கள் கொண்ட குழுவினர் ஜூன் மாதம் 14 ஆம் தேதி மாலை ஆரணி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர் சென்று அணுகிய போது கொண்டு வந்த லஞ்சப் பணத்தை இரவு காவலர் பாபு என்பவரிடம் கொடுக்கும்படி சொல்லவே பினாப்தலின் இரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை கொடுத்த நிலையில் மறைந்திருந்த விஜிலன்ஸ் துணைக் கண்காணிப்பாளர் திருவேல் முருகன் மற்றும் ஆய்வாளர் மைதிலி ஆகியோர் கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது விசாரணையில் மஞ்சுளா லஞ்சம் வாங்கச்சொன்னது உண்மை எனத் தெரியவந்ததன் பேரில் தாசில்தாரும், இரவுக் காவலரும் உடனடியாகக் கைது செய்யப்பட்டனர். விசாரணைக்கு பிறகு சிறைக்கு அனுப்பப்பட்டார்கள்.
கருத்துகள்