தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் பகிரங்கமாகவே மோதல்; பதவியேற்பு விழா மேடையில் கண்டித்த அமைச்சர் அமித்ஷா - டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அதிருப்தி. இதில் உண்மை நிலை என்ன இதுவே பலரும் எழுப்பி வரும் வினா?
தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவராக இருந்தவர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் பின் புதுச்சேரி துணை நிலை ஆளுநராகவும் மற்றும் தெலுங்கானா மாநில ஆளுநராகவும் நியமிக்கப்பட்டார். இந்த நிலையில் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மத்திய சென்னை தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டு படுதோல்வி அடைந்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், "நான் கட்சிக்காகக் கடுமையாக உழைக்கக் கூடியவர்கள். மற்றும் நான் உட்கட்சி ஐடி நிர்வாகிகளை எதிர்க்கிறேன், எச்சரிக்கிறேன். தலைவர்கள் யாராவது கருத்துச் சொன்னால் அவர்களை மோசமாக பேச வேண்டாம். கட்சியின் பிற தலைவர்கள் மீது தவறாக எழுதினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். நான் இங்கே தான் இருப்பேன். சிலர் ஆளுநர் பதவியை விட்டுவிட்டு ஏன் வந்தீர்கள் என்று கேட்கிறார்கள்; அதற்கு நானே கவலைப்படவில்லை உங்களுக்கு என்ன கவலை? நாங்கள் எல்லாம் இரண்டாம் இடம் வரக்கூடியவர்கள் அல்ல;
வியூகம் அமைத்து கூட்டணியுடன் தேர்தலைச் சந்தித்திருந்தால் கூடுதலாக தொகுதிகள் பெற்றிருப்போம்" என்றார். அதையடுத்து நான் பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக இருக்கும் போது கட்சியில் குற்றப்பின்னணி உள்ளவர்களைக் கட்சியில் சேர்க்கவில்லை. ஆனால் தற்போது குற்றப்பின்னணி உள்ளவர்கள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளனர் என்றார்.
இது பாரதிய ஜனதா கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைமைக்கும், இன்னாள் தலைமைக்குமிடையே மோதல் போக்கு நிகழ்வதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிற நிலையில் டெல்லி சென்று விட்டு தமிழ்நாடு திரும்பிய தற்போது பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அண்ணாமலை இனிமேல் பேட்டி எல்லாம் அலுவலகத்தில் தான் கொடுப்போம். விமான நிலையத்தில் பேட்டி கிடையாது. எல்லாவற்றையும் கட்சித் தலைவர்கள் முடிவு செய்து உங்களிடம் கூறுவார்கள் என விமான நிலைத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்துவிட்டுச் சென்ற நிலையில் முதல்வராக சந்திரபாபு நாயுடுவின் பதவியேற்பு விழா ஆந்திரப் பிரதேசத்தில் நடந்ததில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜே.பி.நட்டா, டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் சௌந்தரராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டபோது மேடையில் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் அமித்ஷாவுக்கு வணக்கும் சொல்லிவிட்டுச் செல்லும்போது, அமித்ஷா அவரை அழைத்து கடுமையாகக் கண்டிக்கிறார்.
பதிலுக்குத் தமிழிசை சௌந்தரராஜன் எதோ கூற வரும்போது அதனை மறுத்து அமித்ஷா பேசும் காணொலிக் காட்சி பரவியது. இதுகுறித்து பல்வேறு அரசியல் விவாதம் நடந்த நிலையில் தமிழிசை சௌந்தரராஜனைப் பொறுத்த அளவில் இது ஒரு மிகப் பெரிய அகில இந்திய விளம்பரம்! ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு பதவியேற்பு நிகழ்வு கூட இந்த நிகழ்வு காரணமாக பின்னுக்கு தள்ளப்பட்டு, டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனைப் பற்றியே அனைத்து ஊடகங்களும், பொது மக்களும் வித விதமாகப் பேசுகிறார்கள்!
பலரும் அவருக்காக உருகுகிறார்கள்! அவர் சார்ந்துள்ள சமூகத்தின் சார்பாக கரிக்கோல் ராஜ் உள்ளிட்ட பலர் நியாயம் கேட்கிறார்கள், அதில் சிலர் கொந்தளிக்கிறார்கள்! அவரது ஜாதிச் சங்கமோ போர்க்கொடி தூக்கி உள்ளது!
ஒரு அரசியல்வாதி என்ற வகையில் இவை அவருக்கு செலவில்லாமல் கிடைத்த விளம்பரங்கள் ஜாக்பாட்!
அவர் கட்சி சார்ந்த ஒரு தலைவர் கூப்பிட்டு கோபமாகப் பேசும் போது கூட சிரித்துக் கொண்டே இருந்தது அது அரசியல் கலந்த சாமாரத்தியம், அது சமாளிக்கத்தக்க சமார்த்தியமாக வெளிப்பட்ட போது, அவருக்கு இன்னும் கோபம் கூடியது! அவரது அதிதீவிரத்தை தமிழிசை அலட்சியப்படுத்தியது போல அவர் நினைத்ததாலேயே அவரது கோபம் இரட்டிப்பாகியதாகவே தெரிகிறது!
இந்தச் சம்பவம் பற்றி மற்றவர்கள் தான் அவருக்கு நேர்ந்த அவமானமாகநினைவு படுத்தி இருக்காங்க.. ஆனா.அவங்க தனக்கு கிடைத்துள்ள அபரீத முக்கியத்துவத்தை ரசித்தபடி அமைதியாகவே இருக்காங்க!
ஆளுநர் பதவியில் கூட அவர்களுக்குப் பரிந்து பேசி சமூக ஊடகங்களில் பலரும் இப்படி கத்தி வீசி கிடைத்தது தான்! பாருங்க, என்னால தமிழ்நாட்டு பாரதிய ஜனதா கட்சிக்கு ஆதரவு பெருகிப் போச்சு ..
டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் யார்? பாரதிய ஜனதா கட்சிக்காரர்.. அதனால் ஏராளமான பேர் இப்போது அந்தம்மாவுக்கு ஆதரவா மாறிக்கிட்டு இருக்காங்க..
ஐயோ, ஊர்கூடி கும்மிகிட்டு இருக்காங்கன்றத இவர் கிட்ட எப்படி புரிய வெக்கிறது?என்ன நடந்தது என்று யாமறியேன்... ஆனால் அமைச்சர் அமித்ஷாவின் உடல் மொழி "தொலைச்சிடுவேன் ஜாக்கிரதை!" என்று எச்சரிக்கை விடுப்பது போலவே இருக்குது.
இதுக்கு மேலே டாக்டர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு யாரும் புரிய வைக்க முடியாது.
என்னதான் உட்கட்சிப் பிரச்சினை என்றாலும் இப்படி ஒரு விழா பொது மேடையில் ஒரு முன்னாள் ஆளுநரை எச்சரிக்கை செய்வது ஏற்புடையதல்லவே.
இவ்வளவு நடந்த பிறகும் தமிழிசை சௌந்தரராஜன் அரசியலில் இருக்க நினைப்பதில் அர்த்தமில்லை எனச் சிலர் கருதுகின்றனர். தமிழ் நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் யாரும் இனி தேவையில்லாமல் பிரஸ்மீட் செய்யறேன்னு மைக் பிடித்து பேசுவதற்கு... சாரி அல்லது உளறுவதற்கு டில்லி தடா போட்டது இன்னும் எந்த ஊடகமும் வெளியிடவில்லை தான்.
திட்டுன்னா திட்டு... உங்க வீட்டு திட்டோ எங்க வீட்டுத் திட்டோ இல்ல... வண்டி வண்டியா வாங்கி கட்டிட்டாங்க... எங்க வீட்டு பிள்ளை எம்ஜிஆர் சவுக்கடி கொடுத்த மாதிரி. இப்படி பேசுற பலர்
இதெல்லாம் இங்க இருக்கும் பலருக்குத் தெரியாது. அதைச் சொன்னாலும் புரியாது.
அரசியல்வாதிகளைப் பொறுத்த வரை அவமானங்களையே அதிர்ஷ்டமாக்கி கொள்ளும் வல்லமை கொண்டவர்களே! அதிகம் அடுத்தகட்ட நகர்வுக்கு டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் போய்க்கிட்டு இருக்காங்க. என்பதே அவரது x பக்கம் பதிவு உணர்த்தும் செய்தியாகும்.
கருத்துகள்