தர்மபுர ஆதீனத்திற்கு மிரட்டல் விடுத்த மாவட்ட நிர்வாகி உள்ளிட்ட மூவர் பாஜகவில் வகித்த பொறுப்பிலிருந்து நீக்கம்
தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியில் மாவட்ட நிர்வாகிகளாக இருந்து வந்த நபர்கள் உடனடியாக விடுவிக்கப்படுகிறார்கள்.
நிர்வாகிகள் பெயர் பட்டியல் வருமாறு S.பாஸ்கர் மாவட்டத் தலைவர், திருவாரூர்
K.அகோரம் மாவட்ட தலைவர். மயிலாடுதுறை
C. செந்திலரசன் மாவட்டப் பொதுச் செயலாளர், திருவாரூர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர். பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27-வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் இருந்து வருகிறார் தருமபுரம் ஆதீனத்தின் ஆபாச வீடியோ இருப்பதாகக் கூறி பணம் கேட்டு மிரட்டிய புகாரில் கைது செய்யப்பட்ட அகோரம், கடந்த ஏழாம் தேதி ஜாமினில் விடுவிக்கப்பட்ட நிலையில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்பட்டதாக மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் பொறுப்பிலிருந்து அகோரம் நீக்கப்படுவதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதே போன்று, பாஜக விவசாய அணியின் மாவட்ட ச்செயலாளர் மதுசூதனனைத் தாக்கியதாக திருவாரூர் மாவட்ட பாஜக தலைவர் பாஸ்கர், மாவட்ட பொது செயலாளர் செந்திலரசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், பாஸ்கர் மற்றும் செந்தில் அரசன் ஆகியோரும் கட்சியின் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுவதாக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள தகவலில் திருவாரூர் மாவட்ட தலைவர் பாஸ்கர், மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் மற்றும் திருவாரூர் மாவட்ட பொது செயலாளர் செந்தில் அரசன் ஆகியோரை பதவியில் இருந்து நீக்குவதாக தெரிவித்துள்ளார்.
கருத்துகள்