முன்னாள் குடியரசுத் துணை தலைவர் திரு வெங்கையா நாயுடுவுடன், பிரதமர் சந்திப்பு
முன்னாள் குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடுவை பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று (25.06.2024) சந்தித்தார்.
நாட்டின் முன்னேற்றத்திற்கு வெங்கையா நாயுடு ஆற்றியுள்ள பணிகளைப் பிரதமர் பாராட்டினார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"திரு எம் வெங்கையா நாயுடு அவர்களைச் சந்தித்தேன். பல ஆண்டுகளாக அவருடன் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கிடைத்தது. இந்தியாவின் முன்னேற்றத்திற்கான அவரது தொலைநோக்குப் பார்வையையும், ஆர்வத்தையும் பாராட்டுகிறேன்.
மூன்றாவது முறையாக இந்த அரசு பதவி ஏற்றுள்ளதற்கு திரு வெங்கையா நாயுடு தமது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.”பிரதமருடன் உத்தராகண்ட் முதலமைச்சர் சந்திப்பு
உத்தராகண்ட் முதலமைச்சர் திரு புஷ்கர் சிங் தாமி, பிரதமர்
திரு நரேந்திர மோடியை இன்று (25.06.2024) சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் கூறியிருப்பதாவது:
“பிரதமர் திரு நரேந்திர மோடியை உத்தராகண்ட் முதலமைச்சர்
திரு புஷ்கர் சிங் தாமி சந்தித்துப் பேசினார்.”பிரதமருடன் சத்தீஸ்கர் முதலமைச்சர் சந்திப்பு
சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய் பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (25.06.2024) சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;
“சத்தீஸ்கர் முதலமைச்சர் திரு விஷ்ணு தியோ சாய் (@vishnudsai) பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார்.”பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் திரிபுரா ஆளுநர் சந்திப்பு
திரிபுரா ஆளுநர் திரு இந்திரசேன ரெட்டி பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (25.06.2024) சந்தித்தார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“திரிபுரா ஆளுநர் திரு இந்திரசேன ரெட்டி, பிரதமர் திரு நரேந்திர மோடியைச் (@narendramodi) சந்தித்தார்.”
கருத்துகள்