திரு ராஜ்நாத் சிங் தொடர்ந்து இரண்டாவது முறையாக பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார்
2019-ஆம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை வெற்றிகரமாகப் பொறுப்பு வகித்த திரு ராஜ்நாத் சிங்கிற்குப் பாதுகாப்புத் துறையைத் தொடர்ந்து இரண்டாவது முறையாகப் பிரதமரின் ஆலோசனைப்படி குடியரசுத் தலைவர் ஒதுக்கியுள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ மக்களவைத் தொகுதி உறுப்பினரான திரு ராஜ்நாத் சிங், 2019 ஜூன் 1 அன்று, முதல் முறையாகப் பாதுகாப்பு அமைச்சராக பொறுப்பேற்றார்.
திரு ராஜ்நாத் சிங் 1951 ஜூலை 10, அன்று உத்தரப் பிரதேசத்தின் சந்தோலி மாவட்டத்தில் பிறந்தார். கோரக்பூர் பல்கலைக்கழகத்தில் இயற்பியலில் முதுநிலைப் பட்டம் பெற்று ஆசிரியராகப் பணியாற்றினார். 1977 - 1980 மற்றும் 2001 - 2003-ம் ஆண்டுகளில் உத்தரப்பிரதேச சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றினார். 1991-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை உத்தரப் பிரதேச அரசில் கல்வி அமைச்சராக இருந்தார். 1999-ம் ஆண்டு முதல் 2000-ம் ஆண்டு வரை மத்திய அமைச்சரவையில் சாலைப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றினார்.
பின்னர் 2000 – 2002 ஆண்டுகளில் உத்தரப்பிரதேச முதலமைச்சராக இருந்தார். 2003-ம் ஆண்டில், மத்திய அமைச்சரவையில் வேளாண் அமைச்சராகப் பணியாற்றினார். 1994-1999 மற்றும் 2003-2008-ம் ஆண்டுகளில் இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2009-ம் ஆண்டில் அவர் 15 வது மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2014 மே 27 அன்று பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் திரு ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
2019, 2024-ம் ஆண்டில், அவர் ராஞ்சி தொகுதியில் இருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் துறை அமைச்சராக திரு சர்பானந்த சோனாவால் பொறுப்பேற்றார்
மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், ஜூன் 10 அன்று புதுதில்லியில் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகத்தின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். அலுவலகப் பொறுப்பாளர்கள் மற்றும் ஊழியர்களிடையே உரையாற்றிய அமைச்சர், நாட்டு மக்களுக்கு சேவை செய்வதற்கான தொலைநோக்குடன் இலக்குகள் மற்றும் நோக்கங்களை வழங்குவதற்கான நம்பிக்கையை ஏற்படுத்தினார். வளர்ச்சி அடைந்த பாரதமாக மாற இந்த நாட்டிற்கு சேவை செய்வதற்கான அர்ப்பணிப்பு முழுமையானதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்திய திரு சோனாவால், இதை நோக்கித் தனது குழுவினர் தொடர்ந்து பணியாற்ற அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு சர்பானந்த சோனாவால், "பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஆற்றல்மிக்க தலைமையின் கீழ், துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிப்பாதைகள் அமைச்சகம், கடல்சார் துறையை மேம்படுத்துவதற்கும், பொருளாதார சக்தியாக மாறுவதற்கான நமது முயற்சியில் அதன் முழுமையான வளர்ச்சிக்கும் சில அற்புதமான பணிகளைச் செய்து வருகிறது. வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இறுதி இலக்கை அடைவதை நோக்கி நாம் முன்னேறிச் செல்லும்போது, தேசத்திற்கு முன்னுரிமை என்ற நோக்கத்துடன் தேசத்தைக் கட்டியெழுப்ப நாம் தொடர்ந்து உறுதியேற்போம். 2047, அமிர்த காலத்தின் தொலைநோக்குப் பார்வையில் திட்டமிட்டுள்ளபடி முழுமையான வளர்ச்சியை நோக்கி கடல்சார் துறையை மேம்படுத்த தமது அமைச்சகம் தொடர்ந்து பணியாற்றும்” என்று கூறினார்.
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக டாக்டர் லோகநாதன் முருகன் பொறுப்பேற்றார்
மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சராக டாக்டர் லோகநாதன் முருகன் இன்று பொறுப்பேற்றார். இந்நிகழ்ச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் முருகன், தம்மீது நம்பிக்கை வைத்துள்ள பிரதமர் திரு நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பதாகக் கூறினார். நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் இடையே தகவல் தொடர்பை ஏற்படுத்தி அரசின் கொள்கைகளை வெளியிடுவதில் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம் முக்கியப் பங்காற்றுவதாக அவர் மேலும் கூறினார்.
ஏழைகள் நலனில் அரசு உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்த டாக்டர் முருகன், பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 3 கோடி ஊரக மற்றும் நகர்ப்புற வீடுகளைக் கட்டுவதற்கு மேற்கொள்ளப்பட்ட அமைச்சரவை முடிவு இதற்கு உதாரணம் என்று குறிப்பிட்டார்.
அமைச்சக செயலாளர் திரு சஞ்சய் ஜாஜூ, அமைச்சகம் மற்றும் ஊடகப் பிரிவுகளைச் சேர்ந்த இதர உயர் அதிகாரிகள் டாக்டர் முருகனை வரவேற்றனர்.
கருத்துகள்