டாக்டர் ஷியாமா பிரசாத்முகர்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் அவருக்கு அஞ்சலி செலுத்தினார்
டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.
டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் பிரகாசமான ஆளுமை, எதிர்கால சந்ததியினரைத் தொடர்ந்து வழிநடத்தும் என்று பிரதமர் கூறினார்.
சமூக ஊடக எக்ஸ் தள பதிவில் பிரதமர் கூறியிருப்பதாவது:
"நாட்டின் சிறந்த புதல்வர், சிறந்த சிந்தனையாளர் மற்றும் கல்வியாளரான டாக்டர் ஷியாமா பிரசாத் முகர்ஜியின் நினைவு தினத்தை முன்னிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். பாரத அன்னைக்கு சேவை செய்வதில் தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர். அவரது துடிப்பான ஆளுமை, நாட்டின் ஒவ்வொரு தலைமுறையினருக்கும் தொடர்ந்து ஊக்கமளிக்கும்.”
கருத்துகள்