முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கள்ளச்சாராயச் சாவு பற்றி சி.பி.ஐ விசாரணை கேட்கும் பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்

கள்ளச்சாராயச் சாவு பற்றி சி.பி.ஐ விசாரணை கேட்கும் பாமக மற்றும் பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 

கள்ளக்குறிச்சி நகரம் கருணாபுரத்தில்  50 க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான கள்ளச்சாராய வணிகர்கள் மற்றும் அவர்களுக்கு பின்னணியில் இருப்பவர்களை சட்டத்தின் முன் நிறுத்தி, கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கியுள்ள நிலையில், இந்த வழக்கின் குற்றவாளிகளை தப்ப வைக்க முயற்சிகள் நடப்பதாக பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார் அதன் விபரம் வருமாறு:- "ஏராளமான குடும்பங்கள் வீதிக்கு வருவதற்கு காரணமான குற்றவாளிகளைக் காப்பாற்ற அரசே சதி செய்வது கண்டிக்கத்தக்கதாகும்.



கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்த கள்ளச்சாராய சாவுகளை காவல்துறையின் அலட்சியத்தால் நடந்த ஒன்றாகக் கருதமுடியாது. ஆட்சியாளர்களின் ஆதரவுடன், அரசு எந்திரத்தின் ஒத்துழைப்புடன் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளாகவே பார்க்க வேண்டியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் ஆட்சியர், காவல்துறை  உயரதிகாரிகள், ஆளுங்கட்சியின் மாவட்டச் செயலாளர்களாகப் பணியாற்றும் இரு சட்டமன்ற உறுப்பினர்கள் முதல் மாவட்டத்தின் பொறுப்பு அமைச்சர் வரை அனைவரின் ஆதரவும் கள்ளச்சாராய வணிகர்களுக்கு இருந்திருக்கிறது. இந்த அளவுக்கு வலிமையான பின்னணி கொண்டவர்களின் துணையுடன் நடந்த கள்ளச்சாராயச் சாவுகள் குறித்த விசாரணை எந்த ஐயத்திற்கும் இடமில்லாமல் தொடங்கி, நேர்மையான திசையில் பயணிக்க வேண்டும். ஆனால், முதல் தகவல் அறிக்கையே நீதியைப் படுகொலை செய்துள்ளது.


கள்ளச்சாராயச் சாவுகளின் களமாக இருந்த கருணாபுரம் என்ற பகுதி கள்ளக்குறிச்சி நகரின் மையத்தில் உள்ளது. கள்ளக்குறிச்சி பேருந்து நிலையத்திற்கு மிக அருகிலுள்ள கருணாபுரத்தில் நீதிமன்றம், வட்டாட்சியர் அலுவலகம், காவல் நிலையம், மகளிர் காவல் நிலையம் ஆகிய அலுவலங்களிலிருந்து 100 மீட்டர் தொலைவில் தான் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டு வந்திருக்கிறது. மது குடிக்க வருபவர்கள் அனைவரும் இந்த அலுவலகங்களைக் கடந்து தான் செல்ல வேண்டும்; குடித்து விட்டு இந்த அலுவலகங்கள் வழியாகத் தான் திரும்ப வேண்டும். கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம், காவல் துறை ஆகியவற்றுக்கு நன்கு தெரிந்தே தான் கள்ளச்சாராய விற்பனை நடந்துள்ளது. இது குறித்துத்  தான் முதலில் விசாரணை தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இவை அனைத்தையும் மறைத்து விட்டு, கருணாபுரம் சுடுகாட்டில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாக அப்பட்டமான பொய்யுடன் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.                          இது விசாரணையின் அடிப்படையையே தகர்த்து விடும்.



கள்ளச்சாராயச் சாவுகள் குறித்த செய்திகள் முதன் முதலில் வெளியான போது, உயிரிழப்புகளுக்கும், கள்ளச்சாராயத்திற்கும் தொடர்பே இல்லை என்றும், வயிற்றுப்போக்கால் தான் அவர்கள் இறந்ததாகவும் மாவட்ட ஆட்சியர் ஜடாவத் பொய் கூறினார். உயிரிழந்த எவரும் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மருத்துவம் பெறவில்லை என்று மாவட்ட ஆட்சியர் பொய்களை அடுக்கினார். உயிரிழப்புகள் அதிகரித்த பிறகு தான் அரசு உண்மையை ஒப்புக்கொண்டது. உடனடியாக மாவட்ட ஆட்சியரும் மாற்றப்பட்டார்.







கள்ளச்சாராயச் சாவுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் ஜடாவத் பொய் கூறியது ஏன்? அவ்வாறு கூற  அவரைக் கட்டாயப்படுத்தியது யார்? என்பன போன்ற வினாக்களுக்கு விடை காணப்பட வேண்டும். அதற்காக ஜடாவத்திடம் விசாரணை நடத்தப்பட வேண்டும்; அவரை இந்த வழக்கின் சாட்சியாகச் சேர்க்க வேண்டும். ஆனால், மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரை பணியிடை நீக்கம் செய்து, அங்கேயே தங்கியிருக்க ஆணையிட்ட அரசு, ஆட்சியர் ஜடாவத்தை மட்டும் பணியிட மாற்றம் செய்து பாதுகாப்பாக அனுப்பி வைத்துள்ளது. கள்ளச்சாராயச் சாவு விசாரணையில் இந்த முதல் கோணல் முற்றும் கோணலாகவே முடியும்.




ஆளும் கட்சியின் மாவட்டச் செயலாளரும், ரிஷிவந்தியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வசந்தம் கார்த்திகேயன் என்பவர், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் மீது செலுத்திய ஆதிக்கம் குறித்து வெளிவரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. மாவட்ட ஆட்சியராக எவர் வந்தாலும், அதிகாலையில்  கார்த்திகேயன் விளையாடும் இடத்திற்குச் சென்று, அவர் விளையாடி முடிக்கும் வரை காத்திருந்து வணக்கம் செலுத்தி விட்டு வந்து தான் வழக்கமான பணிகளைத் தொடங்க முடியும் என்பது எழுதப் படாத விதி என்று கூறப்படுகிறது. காவல்துறை உள்ளிட்ட எந்தத் துறை அதிகாரியாக இருந்தாலும் வசந்தம் கார்த்திகேயனுக்கு வணக்கம் செலுத்தத் தவறினால் அவர் இடமாற்றம் செய்யப்படுவது கட்டாயமாம். அவரது ஆதரவு சாராய வணிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் துணிந்த காவல்துறை அதிகாரிகள் பலரும் பந்தாடப்பட்டுள்ளனர். கிட்டத்தட்ட கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் அறிவிக்கப்படாத முதல்வராகவே செயல்பட்டு வந்த வசந்தம் கார்த்திகேயனும், சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் உதயசூரியனும் தான் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய வணிகர்களின் பாதுகாவலர்கள் என்று கூறப்படுகிறது.




கள்ளக்குறிச்சி மாவட்ட கள்ளச்சாராயச் சாவுகளுக்கு மூல காரணமானவர்கள் என்று பல தரப்பாலும் குற்றஞ்சாட்டப்படும் இந்த இருவரும், கள்ளச்சாராய சாவுகள் குறித்து ஆய்வு செய்ய மாவட்டத்திற்கு வரும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்களுடனும், உள்துறை செயலாளர் உள்ளிட்ட  அதிகாரிகளுடனும் இணைந்து கூட்டங்களில் பங்கேற்கின்றனர். அவ்வாறு இருக்கும் போது காவல்துறை துணை கண்காணிப்பாளர் நிலையிலுள்ள சி.பி.சி.ஐ.டி அதிகாரிகளால் அவர்களை எவ்வாறு விசாரிக்க முடியும்.  தமிழக காவல்துறை அதிகாரிகளால், அதிகாரம் பெற்ற இவர்களின் அருகில் கூட நெருங்க முடியாது.




கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த அனைத்து உண்மைகளும் வெளிக்கொண்டு வரப்பட வேண்டும். கள்ளச்சாராய வணிகர்களுக்கு காவலர்களாக இருப்பவர்கள் எவ்வளவு உயர்பதவியில்  இருந்தாலும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எனவே, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவுகள் குறித்த விசாரணையை சி.பி.ஐயிடம் தமிழக அரசு ஒப்படைக்க வேண்டும். என தெரிவித்துள்ளார். இந்த நிலையில் இதை மறுத்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சார்பில் நடந்த கள்ளச்சாராய மரணங்களுக்கு தி.மு.க வின் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் தான் காரணம் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் கூறியிருந்தது தொடர்பாக, சட்டசபை வளாகத்தில் தி.மு.க. வின் சட்ட மன்ற உறுப்பினர்கள்  கார்த்திகேயன் ரிஷிவந்தியம் தொகுதி மற்றும் உதய சூரியன் சங்கராபுரம் தொகுதி உள்ளிட்டோர் கூட்டாக செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது:






"தோல்வியின் விரக்தியால் பேசி வருகிறார் ராமதாஸ். அவர் எங்கள் மீது பொய்யான குற்றச்சாட்டைக் கூறி வருகிறார். குற்றச்சாட்டை நிரூபித்தால் பொது வாழ்விலிருந்து விலகத் தயார். நிரூபிக்காவிட்டால் ராமதாஸ் மற்றும் அன்புமணி அரசியலிலிருந்து விலகத் தயாரா?.கள்ளச்சாராயம் விவகாரத்தில் அதிகாரிகளை கூண்டோடு முதல்வர் ஸ்டாலின் மாற்றியுள்ளார். இறந்தவர்கள் வீட்டில் ஆதாயம் தேட ராமதாஸ் முயற்சி செய்கிறார். கள்ளச்சாராயம் குடித்து பாதிக்கப்பட்டவர்களின் உடனடி சிகிச்சைக்கு உறுதுணையாக இருந்தோம். அரசியல் ஆதாயத்திற்காக எங்கள் மீது வீண் குற்றச்சாட்டைச் சுமத்தி வருகிறார்கள்.






அவர்கள் மீது மான நஷ்ட வழக்குத் தொடர உள்ளோம். கள்ளச்சாராய விவகாரத்தில் கவனக்குறைவாக இருந்த அனைத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிப்பிற்குள்ளான 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கள்ளச்சாராய விற்பனையில் தங்களுக்கு எந்ததா தொடர்புமில்லை" எனக் கூறினர். எந்தத் தவறும் இல்லை என்றால் சிபிஐ விசாரணை நடத்தவே முதல்வர் உத்தரவு கேட்கலாம் அதை விடுத்து பல சந்தேகங்கள் மக்கள் மத்தியில் எழக் காரணமாக இறந்த நபர்கள் ஒரே இடத்தில் எரியூட்டப்படும் நிகழ்வு தான், புதைக்கப்பட வேண்டிய உடல்கள் எரிக்கப்பட்டதே பல சந்தேகங்கள் எழக் காரணமாக அமைந்தது. மேலும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் முடிவில் நிர்வாகிகள் கைதாகி உள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் மறியல் நிகழ்வு போல எங்கும் கைது செய்யப்படுவதில்லை. ஆர்ப்பாட்டம் முடிவில் கலைந்து செல்லும்படி தான் இதுவரை நிகழ்வுகள் உண்டு ஆனால் இப்போது நடைமுறையில் மாற்றம். மேலும் மத்திய உள்துறை எப்படி சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட முடியும்? என்ற வினா உண்டு. கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என பாஜக தலைவர் அண்ணாமலை கூறுகிறார் 




கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி 50 பேர் உயிரிழந்த சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தை உலுக்கியுள்ளது. விஷ சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சியின்  தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு  கடிதம் எழுதியுள்ளார்.


உள்ளூர் காவல்துறைக்குத் தெரிந்தே கள்ளச்சாராய விற்பனை நடைபெற்று இருப்பதாகவும் உள்ளூர் திமுகவினரின் உத்தரவின் பேரில் நடைபெற்று இருப்பதாகவும் அந்தக் கடிதத்தில் கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில் 

இது மாநிலம் சார்ந்த விவகாரம்.  சிபிஐயின் செயல்பாடு என சட்டத்தின் படி பார்த்தால்





 சிபிஐ MHA ன் கீழ் கட்டுப்பாட்டில் இல்லை, மாறாக DoPT, PMO கீழ் உள்ளது.

யூனியன் பிரதேசங்களின் பிராந்திய அதிகார வரம்பைத் தவிர வேறு எந்த வழக்கிலும் சிபிஐ விசாரணைக்கு MHA உத்தரவிட முடியாது.

 கள்ளக்குறிச்சி  விஷ கள்ளச்சாராய மரணங்கள் என்பது சிபிஐயின் கீழ் செல்ல தமிழ்நாடு மாநில அரசு அனுமதி வழங்கினால் மட்டுமே நடக்கும்.

மத்திய அரசு அதிகாரிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்தால் மட்டுமே சிபிஐ வேறு மாநிலங்களில் விசாரணை செய்யலாம். ஒரு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட மாநில அரசு சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கா விட்டால் அல்லது நீதிமன்றம் உத்தரவிடாமல், இந்த வழக்கில் சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட முடியாது என்பதே சட்ட விதி. ஆனால் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விஷயம் குறித்து கேள்விப்பட்டதும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அடுத்தடுத்து பல்வேறு விமர்சனங்களை வைத்து வருகிறார். முதல் ஆளாக இந்த விவகாரத்தில் சட்டக்குழுவை அனுப்பி எடப்பாடி கே பழனிச்சாமி வழக்குப் போட்டுள்ளார். கள்ளக்குறிச்சி விஷ சாராய பலி தொடர்பாக வழக்கை இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.


கள்ளக்குறிச்சி, கருணாபுரம் பகுதியில் விஷ சாராயம் குடித்து இதுவரை 50 பேர் பலியான சம்பவம் தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வில், அதிமுக வழக்கறிஞர்கள் அணிச் செயலாளர் இன்பதுரை மற்றும் வழக்கறிஞர் டி.செல்வம் ஆகியோர் முறையீடு செய்த போது அவர்கள், விஷ சாராய விவகாரம் தொடர்பாக சிபிசிஐடி விசாரிப்பது முறையாக இருக்காது என்பதால் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கையுடன் வழக்கு தாக்கல் செய்துள்ளதாகவும், அந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டனர். இதில் இன்னும் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை. எந்தப் பொருள் கலந்தாலும் அது விஷ கள்ளச்சாராயம் தான் அதில் மெத்தனால் கலந்த சாராயத்தை அருந்தினால் 12-லிருந்து 24 மணி நேரத்துக்குப் பிறகே அதன் விளைவுகள் வீரியமடையும்.

வாந்தி, குமட்டல், வயிற்று வலி, நடுக்கம், காது கேளாமை, பாா்வை மங்குதல், மூச்சுத் திணறல் ஆகியவை ஏற்படும். மனித உடலில் மெத்தனால் கலந்தவுடன் குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு அது ‘ஃபாா்மால்டிஹைட்’ என்ற நச்சு பொருளாக மாற்றமடையும். அதன் பின்னா் அது ‘பாமிக்’ அமிலாக மாறும்.


இந்த வகையான அமிலம்தான் ‘பாா்மாலின்’ எனப்படும் திரவமாக மாற்றப்பட்டு இறந்தவா்களின் உடலை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படுகிறது. அவ்வாறாக மெத்தனால் ‘பாமிக்’ அமிலாக மாறிவிட்டால் உடனடியாக நரம்பு மண்டலத்தைப் பாதித்து பாா்வை இழப்பு ஏற்படும். அதன் தொடா்ச்சியாக, கல்லீரல், சிறுநீரகங்கள் செயலிழக்கத் தொடங்கும். பின்னா் மற்ற உறுப்புகளின் இயக்கமும் முடங்கக்கூடும்.


இத்தகைய நிலையை எட்டுவதற்குள் சிகிச்சையைத் தொடங்கிவிட்டால் உயிரைக் காப்பாற்றிவிடலாம். ஆனாலும், எதிா்விளைவுகளாக பாா்வை இழப்பு, நரம்பு மண்டல பாதிப்புகள், நடுக்குவாதம் ஆகியவை வாழ்நாள் முழுக்க இருக்கக்கூடும். என்ற நிலை உள்ளதாக மருத்துவர்கள் தகவல்.. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது "விஷ கள்ளச்சாராயச் சாவுகள் தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை தொடங்கப்பட்டுள்ளது, மாவட்ட ஆட்சியர் பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகவும் காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாகவும்".   தமிழ்நாடு அரசு வழக்கறிஞர் முனியப்பராஜ் கூறியதை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கை விசாரணைக்கு ஏற்று அனுமதியளித்து, வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக ஒப்புதல் தெரிவித்ததுடன் நீதிபதிகள் அரசுக்கு சரமாரியாக கேள்விகளையும் எழுப்பினர்.  “விஷச் சாராயம் விவகாரம் தொடர்பாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக பல்வேறு நிகழ்வுகள் நடந்துள்ளன. விஷச் சாராயம் தொடர்பாக தமிழ்நாட்டில் எத்தனை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன? விஷச்சாராய விற்பனையைத் தடுக்க கடந்த ஓராண்டில் காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் என்ன?” எனவும் அதற்கு பதிலளிக்கும் படி உத்தரவிட்டு விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரிய வழக்கை எதிர் வரும் புதன் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.விஷ கள்ளச்சாராயம் குடித்ததால்  பாதிக்கப்பட்ட 193 பேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் இதுவரை 53 பேர் உயிரிழந்து விட்டனர். கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளில் 140 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய்.10 லட்சமும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தலா ரூபாய்.50 ஆயிரமும் வழங்க தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது.

 விசாரணைக்கு ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையமும் அமைக்கப்பட்ட நிலையில், வெள்ளிக்கிழமையன்று இந்த ஆணையம் விசாரணையைத் துவங்கியது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கள்ளச்சாராயம் மூலம் எப்போது வேண்டுமானாலும்  சாவுகள் நடக்கலாம். அதற்கு தன்னால் பொறுப்பேற்க முடியாது' என  விருப்ப ஓய்வில் சென்ற, காவல்துறை கண்காணிப்பாளர் மோகன்ராஜ், தற்போது பேசுபொருளாகியுள்ளார். அவர் பயந்தபடியே, கள்ளச்சாராய மரணங்கள் நடந்துள்ளது. ஓய்வு பெற எட்டு மாதங்கள் உள்ள போதே, விருப்ப ஓய்வில் செல்ல முடிவெடுத்து, உள்துறைச் செயலருக்கு கடிதமெழுதினார்.

கள்ளச்சாராய சாவுகள் ஏற்படலாம் என்பதை கணித்தே மோகன்ராஜ், விருப்ப ஓய்வில் செல்கிறார் என்று, காவல் துறை வட்டாரங்களுக்கு வெளியேயும் தகவல் பரவ, தன் சொந்தப் பணிகளுக்காக முன் கூட்டியே ஓய்வில் செல்கிறேன் என்று, அரசுத் தரப்பில், மோகன்ராஜிடம் எழுதி வாங்கியதாக பேசப்பட்டது பின், அவரை விருப்ப ஓய்வில் செல்ல அனுமதித்தனர். மோகன்ராஜுவுக்குப் பதிலாக ஜெயச்சந்திரன் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

மோகன்ராஜ் கணித்த படி  கள்ளச்சாராய சாவுகள் நிகழ்ந்து விட்டது. அவர், அன்று சொன்னதை அரசுத் தரப்பில் மதித்து அப்போது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், இன்று இத்தனை சாவுகள் நடந்திருக்காது. இருப்பினும் அவரது மறுப்பு என்று ஒரு காணோலியும் வருகிறது.  ஆனால் இதில் பொது நீதி கவியரசு வைரமுத்து  எழுதிய பாடல் வரிகள் தான்:-                      "வீதிக்கொரு கட்சியுண்டு ஜாதிக்கொரு சங்கமுண்டு

நீதி சொல்ல மட்டுமிங்கு நாதியில்லை - ஜனம் நிம்மதியா வாழ ஒரு நாளுமில்லை - இது நாடா இல்லை வெறும் காடா? - இதைக் கேக்க யாருமில்லை தோழா.    ஆகாய கங்கை காய்ந்தாலும் காயும் , சாரய கங்கை காயாதடா,

ஆள்வோர்கள் போடும் சட்டங்கள் யாவும் காசுள்ள பக்கம் பாயூதேடா,

குடிச்சவன் போதையில் நிற்பான், குடும்பத்தை வீதியில் வைப்பான்,

தடுப்பது யாரென்று கொஞ்சம் நீ கேளடா,

கள்ளுக்கடைக் கடைக் காசிலே தாண்டா கட்சிக் கொடி ஏறுது போடா......! "

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...