சிக்கிம் மாநில பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் டில்லி ராம் தாபா, மேல் பர்துக் சட்டசபைத் தொகுதியில் எஸ்கேஎம் வேட்பாளர் கலா ராயிடம் தோல்வியடைந்தார். தற்போது சட்ட மன்ற உறுப்பினரான ராம்தாபா 2,968 வாக்குகள் வித்தியாசத்தில்
கலாராயிடம் தோல்வியடைந்தார். தொகுதியில் கலாராய் 6,723 வாக்குகளும், ராம் தாபா 3,755 வாக்குகளும் பெற்றனர். அருணாச்சலப் பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி 46 தொகுதிகளில் வெற்றி பெற்றது. என்பிபி கட்சி 5 தொகுதிகளிலும் வெற்றி, காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி.. இதர கட்சிகள் 8 தொகுதிகளைக் கைப்பற்றின அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்ததுடன். பாரதிய ஜனதா கட்சி 46 தொகுதிகளில் வென்று பெற்று ஆட்சியை தக்க வைக்கிறது.
சிக்கிம் மாநிலத்திலுள்ள 32 தொகுதிகளில் 31 தொகுதிகளைக் கைப்பற்றி க்ளீன் ஸ்வீப் வெற்றியைப் பதிவு செய்துள்ளது எஸ்கேஎம் கட்சி.. எஸ்டிஎஃப் கட்சி ஒரே தொகுதியில் மட்டுமே வெற்றி காண முடிந்தது. அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு மிகவும் கடினமான தோல்வி. அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தில் மட்டும் வெற்றி காண முடிந்தது. சிக்கிம் மாநிலத்தில் எந்தவொரு தொகுதியிலும் காங்கிரஸ் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை அருணாச்சல பிரதேசத்தில் இதுவரை பாஜக 42 தொகுதிகளில் வென்றுள்ளது.
மேலும், 4 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. அங்குப் பிரதான எதிர்க்கட்சியான என்பிபி 4 இடங்களில் வென்றுள்ளது.. ஒரு இடத்தில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டும் வெற்றி பெற்றுள்ளது.
கருத்துகள்