அமைச்சர்களாக டாக்டர் மன்சுக் மாண்டவியா, கிரிராஜ் சிங், பபித்ர மார்கரிட்டா, பிரதாப்ராவ் ஜாதவ் பொறுப்பேற்றார்கள்
மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராக டாக்டர் மன்சுக் மாண்டவியா பொறுப்பேற்றார்
மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சராக டாக்டர் மன்சுக் மாண்டவியா இன்று புதுதில்லியில் பொறுப்பேற்றுக்கொண்டார். இவர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பையும் கொண்டுள்ளார்.
அமைச்சர் டாக்டர் மாண்டவியாவை அமைச்சகத்தின் செயலாளர் திருமதி சுமிதா தாவ்ராவும், மூத்த அதிகாரிகளும் வரவேற்றனர்.
முந்தைய அரசில் டாக்டர் மாண்டவியா, மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை, ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக இருந்தார்.
குஜராத் மாநிலம் போர்பந்தர் மக்களவைத் தொகுதியிலிருந்து டாக்டர் மாண்டவியா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஏற்கனவே, இவர் 2012 முதல் 2024 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். மேலும் 2002 முதல் 2007 வரை பலிதானா தொகுதியிலிருந்து குஜராத் சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார்.மத்திய ஜவுளித் துறை அமைச்சராக திரு கிரிராஜ் சிங் பொறுப்பேற்றார்
மத்திய ஜவுளித் துறை அமைச்சராக திரு கிரிராஜ் சிங் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இணையமைச்சர் திரு பபித்ர மார்கரிட்டா முன்னிலையில் அவரிடம் முன்னாள் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் பொறுப்பை ஒப்படைத்தார்.
ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் திருமதி ரச்னா ஷா, உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய ஜவுளித் துறை அமைச்சர் திரு சிங், ஜவுளித் துறையில் ஏராளமான வேலைவாய்ப்புகள் உள்ளன என்றும், உலகளாவிய ஏற்றுமதியிலும் இந்தத் தொழில் பெரும் பங்களிப்பைக் கொண்டுள்ளது என்றும் தெரிவித்தார். ஜவுளித் தொழிலும் விவசாயிகளுடன் தொடர்புடையது என்றும் இந்தத் தொழிலை முன்னெடுத்துச் செல்ல பிரதமர் திரு நரேந்திர மோடி வழிகாட்டுதலின் கீழ் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் திரு சிங் மேலும் கூறினார்.மத்திய ஜவுளித்துறை இணையமைச்சராக திரு பபித்ர மார்கரிட்டா பொறுப்பேற்றார்
மத்திய ஜவுளித் துறை இணையமைச்சராக திரு பபித்ர மார்கரிட்டா இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். திரு மார்கெரிட்டா அசாமிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் ஆவார்.
முன்னாள் மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் திரு கிரிராஜ் சிங் முன்னிலையில் திரு மார்கரிட்டாவுக்குப் பூங்கொத்து வழங்கினார். ஜவுளி அமைச்சகத்தின் செயலாளர் திருமதி ரச்னா ஷா மற்றும் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணை அமைச்சராக திரு பிரதாப்ராவ் கண்பத்ராவ் ஜாதவ் பொறுப்பேற்றார்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சராக திரு பிரதாப்ராவ் ஜாதவ் இன்று பொறுப்பேற்றுக் கொண்டார். இத்துடன் ஆயுஷ் அமைச்சகத்தின் தனிப்பொறுப்புடன் இணை அமைச்சர் பொறுப்பையும் அவர் வகிக்கிறார்.
திரு பிரதாப்ராவ் ஜாதவ் பொறுப்பேற்பதற்கு முன், தனது இல்லத்தில் ஒரு மரக்கன்றை நட்டார். பொறுப்பேற்ற பிறகு, தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக உறுதிமொழி எடுத்துகொண்டார்.
2009, 2014, 2019 மற்றும் 2024-ம் ஆண்டுகளில் புல்தானா தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997- ம் ஆண்டு முதல் 1999-ம் ஆண்டு வரை மகாராஷ்டிரா அரசில் விளையாட்டு, இளைஞர் நலன், நீர்ப்பாசனத்துறை அமைச்சராகவும் இருந்தார்.
அதனைத் தொடர்ந்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் திரு. ஜே. பி. நட்டா பங்கேற்ற நிகழ்வில் சுகாதார அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடினார்.
மத்திய சுகாதாரத் துறை செயலாளர் திரு அபூர்வா சந்திரா, சுகாதாரத் துறை கூடுதல் செயலாளர் திருமதி ரோலி சிங் உள்ளிட்ட அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் மத்திய அமைச்சரை வரவேற்றனர்.
கருத்துகள்