நீதிமன்றங்களை மக்கள் கோவில் என்பதால், நீதிபதிகள் அதனைக் கடவுளாக நினைத்துக் கொள்ளும் நிலை தான் பெரிய ஆபத்தை உருவாக்கி விடுகிறதென, உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய நீதித்துறை அகாடமியின் மண்டல மாநாடு, மேற்கு வங்காளத்தின் கொல்கத்தா நகரில் நடந்ததில், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசிய போது:
'யுவர் ஹானர், லார்ட்ஷிப், லேடிஷிப்' என்று நீதிபதிகளைக் குறிப்பிடுகின்றனர். சில நேரங்களில் மக்கள் நீதிமன்றங்களை, நீதியின் கோவிலாகவே கருதுகின்றனர்.
அது மிகப் பெரும் ஆபத்து. அப்படிப் பார்த்தால், நாங்கள் அந்தக் கோவிலின் கடவுள்களாக நினைத்துக் கொள்ளும் அபாயத்தை அது உருவாக்கி விடும்.
நீதிமன்றங்களும், நீதிபதிகளும், மக்களுக்கு சேவையாற்றுகின்றனர். அவ்வாறு மக்களுக்காகச் சேவையாற்றுவதாக நினைக்கும் போது, பரிவு, பச்சாதாபம் உள்ளிட்டவற்றுடன் நீதிமன்றங்கள் வழக்கைப் பார்க்க முடியும்.
குற்றவாளியாக இருந்தாலும், தண்டனை வழங்கும் போது, மனிதத்தன்மையைக் கையாள வேண்டும். அவரும் ஒரு மனிதர் தானே என்ற எண்ணத்துடன் இருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டத்தின் மாண்பை நிலைநிறுத்தும் உயரிய கடமையுடன் இது இணைந்திருக்க வேண்டும்.
இது, உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களுக்கு மட்டுமல்ல, மாவட்ட அளவிலான நீதிமன்றங்களுக்கும் இது பொருந்தும். ஏனெனில், மக்கள் முதலில் உங்களிடம் தான் வருகின்றனர், அதற்கு மொழி ஒரு தடையாக மக்களுக்கு இருக்கக் கூடாது. இந்த நோக்கத்துடன் தான் நீதிமன்றத்தில் தீர்ப்புகளை, மக்களுக்கு அவர்களுடைய மொழியில் மொழி பெயர்த்து வழங்கும் திட்டத்தை துவக்கினோம். அதிகளவில் தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்த வேண்டுமென அவர் தெரிவித்தார். ஆம் உண்மை தான் நீதிமன்றங்களை கோவிலாகவும் நீதிபதிகளை தெய்வங்களாகவும் கருதுவது மிகவும் ஆபத்தானதென உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சந்திர சூட்.. கொல்கத்தாவில் நீதித்துறை மாநாட்டில் பேசியுள்ளதைத்தான் காலங்காலமாக பத்திரிகை வாயிலாகச் சொல்லி வருகிறோம்.
நீதிமன்றங்கள் என்பது அரசு அலுவலகங்கள்.. நீதிபதி என்பவர்கள் அரசு அலுவலர்கள். அவர்களது
செயல்பாடுகள் அனைத்தும் வெளிப்படைத் தன்மை வாய்ந்ததாக இருக்க வேண்டும்.
நீதிபதிகள் உண்மையான விமர்சனங்களுக்கோ, கேள்விகளுக்கோ அப்பாற்பட்டவர்கள் அல்ல. என்பதே.
கருத்துகள்