அவசர நிலையை எதிர்த்துப் போராடியவர்களுக்கு பிரதமர் மரியாதை
அவசர நிலையை எதிர்த்துப் போராடிய ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று மரியாதை செலுத்தியுள்ளார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:
“அவசர நிலையை எதிர்த்த ஆண்கள், பெண்கள் உள்ளிட்ட அனைத்து பெருமக்களுக்கும் இன்று மரியாதை செலுத்தும் நாளாகும்.
காங்கிரஸ் கட்சி எவ்வாறு அடிப்படை சுதந்திரத்தைச் சீர்குலைத்தது, ஒவ்வொரு இந்தியரும் பெரிதும் மதிக்கும் இந்திய அரசியல் சாசனத்தை எவ்வாறு காலில் போட்டு மிதித்தது என்பதை அவசர நிலையின் கருப்பு நாட்கள் #DarkDaysOfEmergency நமக்கு நினைவூட்டுகின்றன.
அவசர நிலையில் கறுப்பு நாட்கள் மிகுந்த சவால் நிறைந்த காலமாக இருந்தது. அந்நாட்களில் அனைத்துத்தரப்பு மக்களும் ஒன்று சேர்ந்து ஜனநாயகத்தின் மீதான இந்தத் தாக்குதலை எதிர்த்துப் போராடினர். அந்த நேரத்தில் பல்வேறு மக்களுடன் சேர்ந்து போராடிய எண்ணற்ற அனுபவங்களை நானும் பெற்றேன். இந்த இணைப்பு அந்தக் காட்சியை வழங்குகிறது”.
கருத்துகள்