ஆவணங்களை போலியாக தயாரித்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி என அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பு
அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டை மறைப்பதற்கு பல்வேறு ஆவணங்களை போலியாக தயாரித்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றவாளி என அந்த நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜூலை மாதம் 11 ஆம் தேதி அவருக்கான தண்டனை விபரம் என்ன என்பது குறித்து அறிவிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்தக் குற்றத்திற்கு அதிகபட்சமாக நான்கு வருட சிறைத் தண்டனை என்றும் பேசப்படுகிறது. இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி பெறுவார் என கருத்துக்கணிப்புகள் கூறி வரும் நிலையில் இந்தத் தீர்ப்பு வெளிவந்துள்ளது.
இந்தத் தீர்ப்பின் மூலம் இனி அமெரிக்க ராணுவத்தில் டிரம்ப் பணியாற்ற முடியாது. பாதுகாப்பு அனுமதிக்கு உகந்த நபராக இருக்க முடியாது. அதாவது தேசிய பாதுகாப்பு குறித்த வகைப்படுத்தப்பட்ட மந்தணம் அல்லது இரகசிய விவரங்களைப் பார்வையிட முடியாது, பல வெளி நாடுகளுக்கு பயணம் செல்ல முடியாது.
ஆனால், அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடலாம், வெற்றியும் பெறலாம், அதிபராகவும் முடியும்! இதுவே அந்த நாட்டின் சட்டமாகும்
கருத்துகள்